(Reading time: 15 - 29 minutes)

மாறாக வருத்தப்பட்டாள்!!!! அடியே வாங்கினாலும் ஆறுதலுக்கு தாயிடமே வரும்  குழந்தையைப் போல.. 

“ஆர்யா!! ஐ அம் ஹர்ட்!”, என்று தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டே வந்த சமயம் கண்களில் ஏனோ நீர் வந்து சேர...

கேட்டவனுக்கோ மனது குத்தியது.... உண்மையில் தடுமாறியது தன் மனது தானே! அந்த எண்ணத்தையும் தாண்டி அவள் கலங்கிய குரல் அவனை அசைக்க... அவள் பக்கம் திரும்ப நினைக்கும் பொழுதே...

புயலென அவர்களை நோக்கி வந்த சசி...

“லேடீஸ்சை மதிக்கத் தெரியாதவங்கிட்ட உனக்கு என்ன பேச்சு! வா.... “, என்று அஞ்சனாவை அதட்டி அழைத்தவளின் பார்வை ஆர்யமனின் மீது சென்றது.. அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து...

“ஹூம் .....”, என்று ஆரம்பித்து... வாய் மட்டும் அசைந்து... சத்தமின்றி அந்த வாக்கியத்தை முடிக்க...

அவள் வாய், “... பேச்சைப் பாரு யோக்கியனாட்டம்!!!!”,

என்று இகழ்வாக இடிந்துரைக்கிறது என்பதை புரியாதவனா அவன்?

அதைக் கண்டதும்.. இவன் உடல் இறுகியது... திமிருடன் இறுமாப்புமாக எதிர் பார்வை சசி மீது வீச...

அவன் பார்த்த பார்வை..  தான் நினைத்ததை கண்டு கொண்டானோ என்று சசியை திகைப்பூட்ட.. அந்த பயம் கண்களில் தெரிய..

‘நீயெல்லாம் ஒரு ஆளுன்னு பேச வந்துட்டே!’, என்பது போல பார்த்தவன் முகத்தில் சிறு நகை!

அது புன்னகை அல்ல - எள்ளல் - அவன் மொத்த முகமும் அவளை எள்ளி நகையாடியதின்  வெளிப்பாடு என்பது  சசிக்கு புரிவதற்குள் அவளைக் கடந்திருந்தான்... சசி முன்னே சென்றவனை முறைத்த படி நிற்க..

அதே சமயம், “ஏன் சசி... நீ எனக்கு சப்போர்ட் பண்றேன்னு...  ஆர்யாவை ஹர்ட் பண்றியோன்னு இருக்கு!”, அஞ்சனா மெலிதாக கேட்பது ஆர்யமன் காதில் விழத்தான் செய்தது...

இன்னமும் அவனுக்கு ஆதரவாக பேசுகிறாளே என்று எரிச்சலான சசி,

“அவர் உன்னை ஹர்ட் பண்ணலையா? ”, என்று கேட்க.

“ப்ச்.. அதை விடு!!! அதுக்கு ஒரு கப் டீ குடிச்சு ஹேப்பியாகிடுறதை விட்டு.... பதிலுக்கு ஹர்ட்டிங்கா பேசி... அதே சங்கடத்தை கொடுக்கணுமா?”, என்று இவள் கேட்டதும்...

“உனக்காக பேசினேன் பாரு என்னை சொல்லணும்!”, என்று சசி தலையில் அடிக்க...

அஞ்சனாவோ ஆர்யமனை பார்வையால் தொடர்ந்த படி...

“ஆர்யா பாவம்!”, என்றாள் வருத்தமாக..

“வில்லத்தனமா சிரிச்சிட்டு போறவர் பாவமா? அதை நம்புற பாரு நீ பாவம்... உனக்காக பேச வந்தேன் பார் நான் உன்னை விட பாவம்!!! எனக்காக இன்னும் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடமா வெயிட் பண்ற முகுந்த் என்னை விட மகா பாவம்...”, சற்றே சத்தமாகவே உரைத்தாள்..

அவள் சொன்னதும் இன்னும் மாடியில் நின்றிருந்த முகுந்த்திற்கே கேட்டது.. ஆம் அவன் இன்னும் மாடியில் தான் இருந்தான்..

அஞ்சனா கீழே சறுக்கியதுமே... பதறி சசி ஓடி வந்து விட்டாள். ஆனால், முகுந்த் அப்படி இல்லை. எப்பொழுது அவன் பார்வை வட்டத்தில் ஆர்யமன் விழுந்தானோ.... அப்பொழுதே அங்கு நடப்பதை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான்..

அதுவும், “ஆர்யா என் ஃப்ரண்ட்”, என்று அஞ்சனா நேற்று சொன்னதை நினைவு கூர்ந்தவனுக்கு.. கண்டிப்பாக அந்த நிகழ்வு யோசிக்க வைத்தது... அவள் கீழே விழும் பொழுது ஆர்யமன் பிடித்தது எல்லாம் தவறாக பார்க்கவில்லை அவன்!

ஆனால், கோபத்தைக் கூட நாசூக்காக வெளிபடுத்தும் ஆர்யமன் இவளிடம் எரிந்து விழுகிறான்.. என்பது நெருடலாக பட்டது...

அது அவள் மீது உரிமை எடுத்து கொள்வதாளோ?? அதோடு மட்டுமல்லாமல் பேச்சுக்கு பேச்சு ஆர்யா என்றழைப்பவளை இவன் தடுக்கவே இல்லை...   இவனுடைய பெயரை யாரையும் சுருக்கி  அழைக்க விட மாட்டானே!!!

என்று யோசனையாய் தன் தாடையைத் தடவியவன்...

‘நம்மைக் கூட தான் அந்த பொண்ணு செந்தாமரைன்னு கூப்பிட்டு இம்சையை கொடுக்குது.. வெறும் இதை மட்டும் வைச்சு ஒரு முடிவுக்கு வர முடியாது பொறுத்திருந்து பார்க்கலாம்!’ என்று நினைத்துக் கொண்டான்..

ஆர்யமனுக்கோ... அஞ்சனா தனக்கு பரிந்து பேசுவது காதில் விழுந்தாலும்..  சசி அவனை பேசிய விதத்தை எண்ணி குமைந்த மனது... அதற்கு காரணமான அஞ்சனா மீது கோபம் கொள்ள வைத்தது...

‘சரியான அரை லூசு!!!! மேலே பார்த்துட்டே நடந்தா.. கீழே இருக்கிற வெட் ஃப்ளோர் சைன் போர்ட் எப்படி தெரியும்? காலங்காத்தாலே எண்ணச்  சட்டிகிட்ட பேச்சு கேட்க வைச்சிட்டா..’, என்று புலம்பியவனுக்கு சட்டென்று வாசு நினைவுக்கு வந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.