(Reading time: 18 - 35 minutes)

15. என் மனதை தொட்டு போனவளே - VJ G

ருத்ரா போன் ரிங் ஆச்சு, எடுத்துப் பார்த்தான் அவன் அம்மா கற்பகம், 'சொல்லும்மா,' என்றான்

'எப்படிப்பா இருக்காங்க?’ என்று கேட்டாள்

'நம்ம விஸ்வா ஹாஸ்பிடல்ல தான் சேர்த்திருக்கேன், ஹார்ட் ப்ராப்ளம், அதெல்லாம் சரி பண்ணலாம் கவலை வேண்டாம் என்று சொல்லியிருக்கான்,'

en manathai thottu ponavale

'சரிப்பா சித்ரா எப்படியிருக்கா?, அவளிடம் போனைக் கொடு' போனை சித்ராவிடம் கொடுத்தான்

'ஹலோ, சொல்லுங்க ஆண்டி,'

'அம்மா எப்படிம்மா, இருக்காங்க?’

'தெரியலை ஆண்டி, அவங்களுக்கு தூங்க ஊசி போட்டிருக்காங்க, அதனால் இன்னும் முழித்துப் பார்க்கலை, அவங்களை ICUல்ல தான் வச்சிருக்காங்க,' என்று அழுதாள்

'அழாதேம்மா, அதான் ருத்ரா சொல்றான் இல்ல ஒன்றும் ஆகாதுன்னு, அழக்கூடாது, இப்பதான் நீ தைரியமாய் இருக்கணும் புரிந்ததா, நான் வேண்ணா வந்து கூட இருக்கவா?' என்று கேட்டாள் கற்பகம்

'இல்ல ஆண்டி, நாங்க மானேஜ் பண்ணிக்கிறோம், நான் அழமாட்டேன்,' அவளுக்குப் பயம் எங்கே வேறு யாராவது வந்தால் ருத்ரா போய்விடுவானோ என்று.

'சரி அப்போ நான் டெய்லி உன்னோட போன்ல பேசறேன், என்ன வைக்கவா?' என்று கேட்டு வைத்தாள் கற்பகம்

'சும்மா அழாதே, சித்து, சரி வா போய் சாப்பிட்டு வரலாம்,' என்று அவளைக் கைபிடித்து கூட்டிக் கொண்டு போனான்

அடுத்த நாள் எல்லா டெஸ்டும் முடிந்து ரிசல்டும் வந்துவிட்டது, மத்த நாளே சர்ஜெரி வைத்துக் கொள்ளலாம் என்று விஸ்வா சொல்லவும், 'வேண்டாம் ஒரு நாள் தள்ளி வை' என்றான் ருத்ரா

'இல்லை எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ, நல்லது, சரி ஒன்று செய்வோம் இன்னிக்கு சாயந்தரம் வைத்துக் கொள்வோமா’ என்று கேட்டான்

'என்ன சித்ரா இன்னிக்கே வைத்துக் கொள்வோமா?' என்று கேட்டான் ருத்ரா, நாளைக்கு என்னால் இருக்க முடியாது உன்னை இங்கு தனியா விட்டு என்னால் அங்கு இருக்க முடியாது என்ன?’ என்று கேட்டான்

அவள் ‘சரி’ என்று சொன்னாள்

'அப்ப, நான் போய் எல்லா ஏற்பாடும் செய்யறேன்' என்றான் விஸ்வா,

ஆபிசுக்கு போன் செய்து ஜீவாவிடம்‘ இப்போ ஹாஸ்பிடலுக்கு வந்து சித்ராவோடு இரு, நாளைக்கு நான் வரும் வரையில், நீ இங்கு இருக்கணும் ஜீவா,’ என்று சொன்னான், ருத்ரா

'சரி சார்'

சித்ராவுக்கு மனசு சரியில்லை, அம்மாவுக்கு ஆபேரஷன் நல்லபடியாக ஆகுமா, பாவம் வாழ்க்கையில் தனக்குத் தெரிந்த வரை சுகமே அனுபவிக்காத அம்மா, அப்பாவைக் காப்பாத்த ரொம்பவே பாடு பட்டாள், அப்பா இறந்த பிறகு எல்லா ஏற்பாடும் துக்கதுடனே, தானே தான் செய்தாள், அவள் கஷ்டத்தை கூட இருந்து அவளால் பார்க்கத்தான் முடிந்தது, ஒரு விதமான உதவியும் செய்யும் நிலைமையில் இல்லை அவள், அதை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருதாள், ஒரு வேளை, ருத்ரா வராதிருந்தால் தான் என்ன செய்திருப்போம், அம்மாவை எப்படி காப்பாத்தியிருப்போம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் மன வேதனையில் வாய்விட்டு அழுதாள்,” அம்மா, அம்மா” என்று, ருத்ரா பயந்துவிட்டான்

'என்ன ஆச்சு சித்து, எதுக்கு அழறே, ஏம்மா என்ன ஆச்சு,'

'ருத்ரா, நீங்க இல்லேன்னா, நான் என் அம்மாவை எப்படி கவனிசிருப்பேன், என்னிடம் ஒரு ருபாய் கூட இல்லையே, எங்க அம்மாவை அப்படியே சாக விட்டிருப்பேனே, ருத்ரா,'

'சரிம்மா, இப்பத்தான் நானிருக்கேனே, அப்புறம் என்ன?, அழாதே, அவங்களுக்கு ஒண்ணுமில்லை, கவலைப் படாதே,'

விஸ்வா வந்தான், 'எல்லா ஏற்பாடும் செய்தாச்சு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்களை ஆபரஷன் தியேட்டருக்கு அழைத்துப் போய் விடுவோம், ஒரு மூன்று மணி நேரம் ஆகும், ' என்று கூறினான்,

ருத்ரா தான், ‘விஸ்வா, பணம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று நீ இன்னும் சொல்லவில்லையே, ' என்று கேட்டான்,

'இருக்கட்டும்டா மொத்தமா வாங்கிக்கிறேன்,' என்றான்

'சரிடா, எனக்கு நிறைய வேலை இருக்கு நான் அப்புறம் பார்க்கிறேன்,'

'சரி' என்றான் ருத்ரா

ருத்ரா, சித்ராவை கட்டி அனைத்துக் கொண்டு 'கவலைப் படாதே கண்ணம்மா ஒன்றும் ஆகாது அம்மாவுக்கு' என்று சொன்னான்

'நான் எப்படி உங்களுக்கு இந்தக் கடனை அடைப்பேன்,'' என்று கேட்டாள்,

'சும்மா இருக்கியா சித்து, என்ன நினைசிட்டுண்டிருக்கே, என்னை இப்படிதான் அவமானப் படுத்தப் போறியா,' என்று கோபமாகக் கேட்டான்

அவளுக்கு அவன் ஏன் கோபப் படறான் என்று தெரியவில்லை, ஆனால் ஒன்றும் பேசவில்லை, வாயை மூடிக் கொண்டாள், அவள் மனதில் என்னவெல்லாமோ இருந்தது,

அம்மாவுக்கு எப்படி வந்தது, இந்த அட்டாக் தன்னாலயா, தன் விஷயம் ஏதாவது தெரிந்து விட்டதா, இப்போதும் கல்யாணத்தைப் பத்தி பேச முடியாது, என்று வருத்தமாக இருந்தது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.