(Reading time: 18 - 35 minutes)

'வலைப் படாமல் போயிட்டு வா ருத்ரா, இங்கு இவங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, அவங்க எவ்வளவு முக்கியமானவங்க என்று இங்கு உள்ள எல்லோருக்கும் தெரியும் அதனால் கவலைப் படாமல் போய்விட்டு வா,'

அவர்கள் இருவரும் கிளம்பி ரூமிற்கு வந்தார்கள், அவளை இழுத்து அனைத்துக் கொண்டான், நெற்றியில் முத்தம் கொடுத்து, சாரி, கண்ணம்மா, இந்த நேரத்தில் உன்னை தனியாக விட்டு போக மனசே இல்லை ஆனால் .....,'

'என்ன பேசறீங்க, எனக்கு தெரியாதா உங்களைப் பற்றி, ப்ளீஸ் நீங்க மனசு, வருத்தப் படாதீங்க, எனக்குதான் துணைக்கு ஜீவாவைவிட்டிருகீங்களே , அதனால் கவலைப் படாமல் போய்ட்டு வாங்க எல்லோருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்,'

சரி என்று சொல்லி அவளுக்கு ஒர அழுத்தமான முத்தம் கொடுத்து அங்கிருந்து கிளம்பி ஜீவாவுக்கு போன் செய்து அவனை வரச் சொல்லிவிட்டு, அங்கேயே அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான், அவன் வந்தவுடன், ‘நீ எங்கேயும் போகாமல் நான் வரும் வரை இங்கேயே காத்திரு, உன்னை நம்பி தான் அவளை விட்டு போகிறேன், அவளுக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை, அதனால் அவளை விட்டு போகாதே,’ என்று சொன்னான் ருத்ரா

'சார், நான் எங்கேயும் போகமாட்டேன், இங்கேயே இருப்பேன் நீங்கள் கவலைப் படாமல் போய் வாருங்கள்,'

'தேங்க்ஸ் ஜீவா, இந்த ஹெல்பை என்றும் மறக்கமாட்டேன்,' என்று கூறி அங்கிருந்து கிளம்பினான் ருத்ரா

அவன் கிளம்பி அவன் வீட்டிற்கு போனான், அங்கு யாருமே இல்லை, அவன் தன் ரூமிற்கு சென்று குளித்து வேறு டிரஸ் மாற்றிக் கொண்டான் அவனுக்கு சித்ரா இல்லாமல் எதிலும் பிடிப்பு இல்லை. தனக்கு அடுத்த நாளைக்கு ஒரு டிரஸ் எடுத்துக் கொண்டான், அவன் வாங்கி வைத்த கிப்டை எடுத்துக் கொண்டான், அங்கிருந்து ஹோட்டலுக்கு கிளம்பினான், எல்லா அரேஞ்ச்மென்ட்டும், ஜீவா ஏற்கெனவே சய்து விட்டு, சுந்தரை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தான் வந்தான், இவன் ஹோடேலினுள் நுழைந்தான், சுந்தர் எதிரே வந்தான், 'சார், எல்லாம் பக்கவா இருக்கு சார்,'

'ம், சரி, நீ ஏதாவது சாப்பிட்டியா?,'

'எஸ் சார்,'

‘சரி,’ என்று தலையாட்டிவிட்டு,ஹாலின் உள்ளே நுழைந்தான், அப்போது அவன் சித்தப்பா கணேஷ் எதிரே வந்தார்,”என்னப்பா சித்ரா அம்மா, எப்படி இருக்காங்க?'

'இப்பதான் ஆபேரஷன் முடிந்து ICUவில் இருக்காங்க, இன்னும் இரண்டு நாளில் வார்டுக்கு வந்து விடுவாங்க,'

'அப்படியா, சரிப்பா, நீ போய் ஏதாவது சாப்பிடு, ரொம்ப களைப்பா தெரியுற,'

அவன், உள்ளே போய் தாத்தாவையும், தன் அப்பா, அம்மாவையும் பார்த்தான்.

என்னப்பா என்றார் தாத்தா, அவரும் விசாரித்தார், சித்ராவின் அம்மாவைப் பற்றி, அதே பதிலை அவருக்கும் கொடுத்தான்,

'சரிப்பா கொஞ்சம் வரவங்களை கவனி நீதான் இங்கு ஹீரோ,' என்று தாத்தா சொல்ல அவன் சிரித்தான்,

'என்ன தாத்தா இங்கே மூணு ஹீரோஸ் இருக்காங்க, நீங்க சொன்னதை கேட்டா அப்புறம் ஒரு ஹீரோக்கு மூணு வில்லனுங்க வருவாங்க சும்மாயிருங்க தாத்தா,'

அங்கிருந்து சென்று சிவகுமாரை பார்க்க போனான், குமார் அங்குதான் தன் ரூமில் ஏதோ பெட்டியில் தேடிக் கொண்டிருந்தான், ' என்ன மாப்பிள்ளை என்ன தேடுறீங்க, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா,'

'ஹலோ, மச்சான், எப்படியிருக்கீங்க, சித்ராவுடைய  அம்மா எப்படியிருக்காங்க?,'

அவனுக்கும் அதே பதிலை சொல்லிவிட்டு, 'சரி, ஏதாவது வேண்டுமா, எல்லாம் திருப்தியாய் இருக்கா,'

'எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு, எதைபத்தியும் நீங்க வொர்ரி பண்ணாதீங்க, நானும் இந்த வீட்டில ஒருத்தன் தான், அதனாலே ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் ப்ளீஸ் உங்களில் ஒருத்தனா என்னை நினைச்சா போதும், ஆனா நீங்க என்கூடவே இருக்க முடியுமா?,'

'ஏன் அப்படி கேட்கிறீங்க நான் இங்கேதானே இருக்க போறேன்,'

'இல்ல என்னோட தோழனா இருக்க முடியுமா, எனக்குன்னு யாருமே கிடையாது,அதனாலே எனக்கு நீங்கதான் பெஸ்ட் ப்ரெண்ட் அதான் கேட்டேன்,'

'என்ன குமார், எனக்கும் நீங்கதான் பெஸ்ட் ப்ரெண்ட், நான் உங்க கூடவே இருப்பேன் கவலைப் படாதீங்க,'

கமலாவும், கணேஷும், மாப்பிள்ளைக்கு டிரஸ் எல்லாம் கொண்டு வைத்தார்கள், 'இதை ரிசப்ஷனுக்கு போட்டுக்குங்க,' என்று கணேஷ் சொன்னார்,

'சரி மாமா,' என்றான் குமார்

கமலா மாப்பிள்ளையைப் பார்த்து 'இன்னும் ஏதாவது வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் நான் கொண்டு வருகிறேன்,' என்று கூறி, 'நீ இங்கு என்ன பண்றே ருத்ரா,' என்று கேட்டாள்,

அவன் பதில் சொல்லுவதற்குள், 'அத்தை, ருத்ரா என் ப்ரெண்ட், என்னை பார்க்க வந்திருக்கார், அவர் என்னோடு தான் இருப்பார்,'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.