(Reading time: 18 - 35 minutes)

'ன்ன, மேடம் ரொம்ப யோசிக்கிறா, மாதிரி இருக்கு,'

‘ஆமாம் அம்மாவிடம் எப்படி பேசலாம், நம்ம கல்யாணத்தைப் பத்தின்னு, இன்னும் கொஞ்ச நாளைக்கு பேச முடியாது அதான் யோசனை,'

'சரி, அவங்க கொஞ்சம் தேரட்டும், நிதானமா சொல்லலாம், நீ கவலைப் படாதே, நேரம் சரியா வரும்போது பேசலாம்,'

'சரி,'

'வாயேன் போய், ஏதாவது சாபிட்டுவரலாம், நீயும் பசியோடு இருப்பே வா,'

'இல்லை, எனக்கு பசியில்லை,'

'பரவாயில்லை, வா, சும்மாவாவது ஒரு நடை போயிட்டு வரலாம்,' இரண்டு பேரும், கிளம்பி போனார்கள், அவன், அவளுக்கும், அவனுக்கும்,மசால் தோசை வாங்கினான், இரண்டு காபிக்கும் சொல்லிவிட்டு வந்தான் அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தான், ருத்ரா

'சாப்பிடு சித்து, அம்மாவை நீதான் பார்த்துக்கணும் அதுக்கு கொஞ்சம் தெம்பு வேண்டாமா,'

ஒன்றும் பேசாமல் சாப்பிட்டாள்

சாப்பிட்டு விட்டு வார்டுக்கு போனார்கள், அங்கு இன்னும் ஆபேரஷன் நடந்துக் கொண்டிருக்கு என்றார்கள், இவர்கள் தங்கள் ரூமிலேயே இருந்தார்கள்

ஒரு மணி நேரத்தில் ஜீவா வந்தான், ருத்ராவுக்கு போன் செய்து எந்த ரூம் என்று விசாரித்து கொண்டு அங்கு வந்தான்,

ஜீவாவை, சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்து,"நான் நாளைக்கு வரும் வரை இவன் இருப்பான், நீ ஒன்றும் கவலைப் படாதே,"

அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள்

'உட்கார்ந்துக்கொள் ஜீவா'

'இல்லை சார், நான் வெளியே இருக்கேன், வேண்டியபோது கூப்பிடுங்கள்,'

'இந்த ஆபேரஷன் முடிந்தவுடன் நான் போய் விடுவேன், நீதான் இவளுடன் நான் நாளைக்கு வரும் வரை இருக்கனும்,'

'சரி சார்,'

'சரி நீ வெளியே இரு, நான் கிளம்பும் போது கூப்பிடுகிறேன்,'

ஜீவா வெளியே போனான் ஆனால், அவன் மனதில் இவர்களுக்குள் ஏதோ என்று தோன்றியது, தன் வீட்டுக் கல்யாணத்தை விட இது இவருக்கு முக்கியமாக இருக்கிறதே, சார் வேறு எந்த பெண்ணோடும் இவ்வளவு நெருங்கி இருந்து பார்த்ததில்லை, என்று நினைத்துக் கொண்டே போனான்,

சிறிது நேரத்தில் டாக்டர் விஸ்வா கூப்பிடுவதாகச் சொல்லி நர்ஸ் வந்து கூப்பிட்டாள், இரண்டு பேரும் எழுந்து போனார்கள், ICU வில் இருந்தான் விஸ்வா, 'வா ருத்ரா, ஆபேரஷன் நல்லபடியா முடிஞ்சுது, ஸோ, நத்திங் டு வொர்ரி, இன்னும் இரண்டு நாள் இங்குதான் இருக்கனும், எப்பவும் போல நீங்க ரூமில் இருக்கலாம் இல்லையானா வீட்டுக்கு கூட போகலாம் நாளைக்கு வந்து பார்க்கலாம், நீ ஸ்பெஷல், உனக்காக அவங்களுக்கு ஒரு தனி நர்ஸ், நல்ல திறமையானவங்களா, ஏற்பாடு பண்ணுறேன்,' என்றான்

'என்ன சொல்லறே சித்து, பேசாமே நீ என்னோட வந்துடு, நர்ஸ் இருக்காங்க, ஜீவாவை இந்த ரூமிலேயே இருக்கச் சொல்லலாம், நாளைக்கு கல்யாணம் முடிந்தவுடன் அவர்களை வழி அனுப்பி விட்டு வந்து விடலாம் என்ன,'

'எப்படிங்க நான் அம்மாவை விட்டு வர முடியும், நான் இங்கேயே இருக்கேன்,'

'நீ என்ன பண்ணபோறே, அவங்க கிட்டே உன்னை விட மாட்டாங்க, இந்த ரூமில் தான் இருக்கனும்,'

'பரவாயில்லை இங்கே இருக்கேன்னு ஒரு திருப்தியாவது இருக்கும், என்னை இங்கேயே விட்டு விடுங்கள்,'

'சரி நீ இரு, ஆனால் என் நினைப்பெல்லாம் இங்கேயே இருக்கும், உடனே ஓடி வரவேண்டும், இங்கு நீ ஒன்னும் பண்ணாதற்கு, என்னுடன் இருந்தால் நானாவது நிம்மதியாக இருப்பேன்,'

'இல்லைங்க நீங்க எல்லாம் முடிந்து நாளை மறுநாள் வாங்க போதும்,'

'எப்படிம்மா'

'இல்லைங்க ப்ளீஸ், எனக்கு கஷ்டமாக இருக்கும் நீங்க எல்லாத்தையும் விட்டு எனக்காக ஓடி வந்தீங்கன்னா, வித்யாவிற்கு வேறு நிச்சயம் பண்றாங்க நீங்க இங்க வந்து சும்மா உட்கார்ந்து இருக்கனும், அதனால் அதையெல்லாம் முடித்துக் கொண்டு வாங்க, இல்லையின்னா எனக்கு இந்த கஷ்டத்தில் அதுவும் சேர்ந்து கஷ்டமாக இருக்கும்,'

'இல்லைமா, அங்கு எல்லோரும் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க, இங்கே உனக்கு யார் இருக்காங்க,'

'இல்லை வேண்டாம் ப்ளீஸ் சொன்னதை கேளுங்களேன்,'

'சரி,'

அப்போ நான் கிளம்பறேன், சரி விஸ்வா, நீ பார்த்துக்கோயேன், இவளை இந்த நிலைமையில் தனியாக விட்டு போக மனசு இல்லை,' என்று வருத்தப் பட்டான் ருத்ரா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.