'எனக்குத் தெரியும் அதான், உங்ககிட்டே சொன்னேன் இல்லை, இங்கே நினைப்பே உங்களுக்கு இருக்கக் கூடாது, அங்கேதான் நீங்க இருக்கணும், எனக்கு போன் பண்ணாதீங்க, நானே எனக்கு ஏதாவது வேணும்னா போன் பண்றேன், வித்யா எப்படியிருக்கா,'
'எல்லோரும் உன்னைத்தான் கேட்டாங்க, உன்னை எல்லோரும் மிஸ் பண்ணறோம்,நீயும் வாயேன்,'
'இல்லை, நான் வரவில்லை, நீங்க என்ஜாய் பண்ணுங்க, நான் போனை வைக்கவா,'
அவள் வைத்து விட்டாள், அவனுக்கு நடை தளர்ந்தது, அப்படியே குமார் ரூமுக்கு போனான்,
கல்யாணம் முடிந்து, வித்யாவுடைய நிச்சயமும் முடிந்தது, எல்லோரும் வீடு வந்தார்கள், வனிதாவை அவர்கள் வீட்டுக்கு கொண்டு விட்டு விட்டு வந்தார்கள், தாத்தா பாட்டி, கணேஷ், கமலம் எல்லோரும், இங்கு கற்பகம் புது தம்பதிகளையும் அவர்கள் வீட்டு ஆளுங்களையும் கவனித்தாள், வித்யா நிச்சயம், சிதம்பரமும் அவர் மனைவியும் நிறைய நகை புடவை என்று தடபுடல் பண்ணிவிட்டார்கள்,
தாத்தாவிடமும் தன் அம்மாவிடமும் சொல்லிவிட்டு, ருத்ரா ஹாஸ்பிடலுக்கு போனான், அங்கு சித்ரா, விட்டத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள், அவன் மெல்ல உள்ளே நுழைந்தான், ஜீவா வெளியேதான் இருந்தான், அவனிடம் பேசிவிட்டு அவனை கிளம்பி போகச் சொல்லிவிட்டு இவன் உள்ளே போனான், அவளின் தனிமையை பார்த்து மனதுக்கு வேதனையாக இருந்தது, கிட்டே சென்று அவளின் அருகில் உட்கார்ந்தான், 'அம்மா எப்படியிருக்காங்க சித்ரா,'
'நீங்க எப்போ வந்தீங்க, பரவாயில்லை,'
'ஆமாம் நீ ஏன் இங்கிருக்கே, உங்க அம்மாவோடு நீ இல்லை,'
'இல்லை, அங்கே நர்ஸ் இருக்காங்க, அதனால் என்னை இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டாங்க,'
'சரி வா போய் பார்க்கலாம்,' 'இல்லை வேண்டாம், அப்புறம் வார்டுக்கு வந்தவுடன் நீங்க பார்க்கலாம், இப்போ வேண்டாமே,'
'ஏன், உன் பாஸா, வந்து பார்க்கிறேன்,'
'இல்லை, அப்புறம் நான் பொய் சொன்னேன் என்று சொல்லுவார்கள்,ப்ளீஸ்,'
'சரி, வா ஏதாவது சாப்பிட்டுவிட்டு வரலாம்,'
'இல்லை நான் சாப்பிட்டேன், ஜீவா வாங்கி வந்து கொடுத்தார்,'
அவளை ஒரு முறை முறைத்தான், 'என்னிடமேவா, நான் ஜீவாவிடம் பேசிவிட்டு தான் வந்தேன், வா போகலாம்,' என்று ஒரு அதட்டல் போட்டவுடன் வந்தாள்
அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், 'நீங்க கிளம்பி போங்க, இப்போ அம்மாவுக்கு பரவாயில்லை, நான் வீட்டுக்கு டிஸ்சார்ஜ், செய்து போனவுடன், நான் உங்களைப் வந்து பார்க்கிறேன்,'
'ஏன் என்னை அவாய்ட் பண்ணுகிறாய்,'
'அவாய்ட் பண்ணலே, அம்மாவுக்கு சரியாகிற வரை நம்ம விஷயம் தெரியாம இருக்கட்டுமே என்று பார்க்கிறேன், அவ்வளவுதான், நீங்க என்னை புரிந்துக் கொள்ளுவீங்கன்னு நினைக்கிறேன்,'
அவன் தலை ஆட்டினான் ஒன்றும் பேசவில்லை, 'நீ தனியா எப்படி சமாளிப்பாய்,'
'இங்கே எல்லா வசதியும் இருக்கு, உங்க சிநேகிதர் தினம் வந்து பார்த்துக்கிறார், நர்சுங்க இருக்காங்க, என்னைபத்தி கவலைப் படாதீங்க,'
'சரி அப்ப, அம்மா வார்டுக்கு வரும் வரை நான் கூட இருக்கேன்,'
'இல்லை வேண்டாம், உங்களுக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கு, நீங்க போங்க,'
'உன்னைவிட எனக்கு எதுவும் பெரிசில்ல, அங்கே நிறைய பேர் இருக்காங்க அதனால் நீ கவலைப் பட வேண்டாம், நான் போய் விஸ்வாவை பார்த்துவிட்டு வரேன்,’
விஸ்வாவுக்கு போன் செய்தான், ‘நீ எங்கேயிருக்கே,’ என்று கேட்டான், அவன் வீட்டில் இருப்பதாய் சொன்னான் பிறகு, 'எப்படியிருக்காங்க, சித்ரா அம்மா,' என்று கேட்டான்
'அவங்க நல்லா தேறிட்டு வராங்க, இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடுவேன், அப்புறமாய் கவனமா பார்த்துக்கணும் அவ்வளவுதான்,'
'சரி, நான் நாளைக்கு உன்னை பார்க்கிறேன், எப்போ வருவே,'
'நான் எட்டு மணிக்கு வருவேன்,' என்றான்
'சரி, நாளைக்கு நீ வந்தவுடன் எனக்கு ஒரு கால் கொடு நான் வந்து பார்க்கிறேன்,'
ரூமுக்குப் போய், கதவைப் போட்டான், சித்ராவை தன் மடியில் சாய்த்துக் கொண்டான் 'கொஞ்சம் தூங்கு சித்ரா, எவ்வளவு களைத்து தெரிகிறாய்,'
அவள் வேண்டாம் என்றாள், 'நான் சொன்னால் கேப்பியா மாட்டியா, படு,' என்றான்
அவள் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்டாள், அப்படியே தூங்கிவிட்டாள், அவன் தன் போனை சைலென்சில் போட்டு வைத்தான்,
அடுத்த நாளே ஹாஸ்பிடலுக்கு எவ்வளவு ஆகுமென்று கேட்டு கட்டிவிட்டான்,
அடுத்த நாள் சித்ரா அம்மாவை வார்டுக்கு மாத்திடறாங்க, அவன் கிளம்பி போய் விட்டான், சித்ராவுடன் ரொம்ப பேசவில்லை 'நீ உன் உடம்பை பார்த்துக்கோ, நீ எப்போ கூப்பிடரையோ வரேன், அது வரை தினம் போன் பண்ணு, நான் பண்ணால் ஒழுங்கா பேசு, நல்லா சாப்பிடு, தூங்கு, இதே நர்ஸ்ஸ வீட்டுக்கும் வரச் சொல்கிறேன், நாளைக்கு நீ போகும்போது வேறு பிளாட்டுக்கு போய்டுங்க நான் என்னோட வீட்டை கொடுக்கிறேன்,'
'ஐயோ அதெல்லாம் வேண்டாம், நானே உங்களை கால் பண்றேன், தேங்க்ஸ்,' அவன் கையை பிடித்து அழுதாள்,
' உனக்கு என்ன ப்ரப்லெம்னாலும் என்னை கூப்பிடு, உடனே என்ன டைம்மாயிருந்தாலும் வந்து விடுகிறேன்,'
சரி என்று தலை அசைத்தாள், அவன் கிளம்பி போய் விட்டான்,
தொடரும்
{kunena_discuss:958}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.