(Reading time: 15 - 29 minutes)

14. என் மனதை தொட்டு போனவளே - VJ G

வாசல்ல கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது, சித்ரா ஜன்னல் வழியே எட்டிப பார்த்தாள், செந்தில் முன்னாடி டிரைவர் சீட்டுக்குப் பக்கத்திலிருந்து இறங்குவது தெரிந்தது, பின்னிருந்து இரு பெரியவர்கள் இறங்குவது தெரிந்தது.

திரும்பி வித்யாவிடம் சொல்லலாம் என்று பார்த்தாள், ஆனால் அவளோ தன் பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள், அவளைத் திரும்பிப் பார்த்தாள், அவளுக்கு வெட்கமாக இருந்தது.

வாசலில் சிவநேஷும், கற்பகமும், ருத்ராவும், அவர்களை வரவேற்றனர், சிதம்பரம், அவர் மனைவி, செந்தில் மூவரையும், ருத்ரா அறிமுகப் படுத்த, ஒருவருக் கொருவர், கட்டித் தழுவிக் கொண்டு, விசாரித்து உள்ளே வந்தனர், உள்ளே வந்தவுடன், சிதம்பரம், நீலகண்டன் காலில் விழுந்து ஆசி வாங்கி குசலம் விசாரித்தார்,

en manathai thottu ponavale

'எல்லோரும் நல்லாயிருக்கோம், நீ எழுந்திருப்பா,'

'ரொம்ப சந்தோஷம், நம்ம பசங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்கட்டும் பிறகு பேசுவோம்,' என்றார் நீலகண்டன்

சிதம்பரமும் 'அதுவே சரி' என்றார்

பெண்ணை வரச் சொன்னார்கள், சித்ராதான், வித்யாவைக் கூட்டி வந்தாள், செந்திலுக்கு அவளுடைய சிம்பிள் டிரஸ் பிடித்திருந்தது,

அவன் அப்பாவிடம் பிடித்திருக்கிறது என்று தலை ஆட்டினான், அவன் அப்பாவோ, ‘உனக்கு பெண்ணிடம் பேச வேண்டுமா, என்று கேட்டார்

அதற்கு செந்திலோ, ‘அவசியமில்லை, ஒருவேளை ‘பெண்ணிற்கு பேசவேண்டுமென்றால், நான் ரெடி!' என்று கூறினான்

வித்யாவிற்கு கோபம், ரொம்ப நல்லவன் போல வேஷத்தைப் பாரு, காலேஜில் வந்து பேசிவிட்டு, எனக்கு மட்டும் இவனோடு என்ன பேச்சு என்று நினைத்துக் கொண்டாள்,

அப்போது, நீலகண்டனே, 'பரவாயில்லை செந்தில், இரண்டு பேரும் போய்ப் பேசுங்கள், இல்லை வெளியே எங்கேயாவது போகவேண்டுமென்றாலும்  போய்விட்டு வாங்க ' என்று வற்புறித்தி அனுப்பி வைத்தார்,

வித்யாவிடம், செந்திலை, அவளுடைய ரூமுக்கு அழைத்துப் போகச் சொன்னான் ருத்ரா,

' என்னைப் பிடித்திருக்கிறதா, எனக்கு உன்னைப் பிடிக்கும் என்று உனக்கு முன்னேயே தெரியும் ஆனால் உனக்கு என்னை பிடித்திருக்கிறதா,’ வித்யாவிடம், செந்தில் கேட்டான்,

அவளும், ‘என்னை பிடித்த ஆள்தான், பேச ஒன்றுமில்லை என்று சொன்னீங்களா,’

'அப்படி இல்லை, நீ பேசுவியோ மாட்டாயோ, அனாவசியமாக எல்லோர் எதிருலும், நான் பேசவேண்டும் என்று சொன்னால் பெரியவர்களுக்காக நீ ஒத்துக்கணும், அதனால் தான்.....,'

'பாவம் எனக்கு உதவி பண்ணீங்க....'

'நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை, என்று கேட்டான்

'அவள் வெட்கப் பட்டுக் கொண்டு, எங்கள் வீட்டில் எல்லோருக்கும் உங்களை பிடித்திருக்கிறது, 'என்றாள்

'அப்ப சரி, உங்கள் வீட்டில் இருக்கிறவர்களை நான் கல்யாணம் செய்துக்கிறேன், என்ன சரியா,'

'அவள் சிரித்தாள், சுமார்  பண்ணிரண்டு பேர் வீட்டில், என்னைத்தவிர, நீங்கள் எல்லோரையும் பண்ணிக்குங்க,' என்று கூறி கண்ணில் தண்ணி வரும் வரை சிரித்தாள்

'அவளை, இழுத்து அணைத்தான், நீ சாதாரணமாகவே அழகு, அதில் இப்படி சிரிக்கும் போது, இன்னும் அழகு கூடுகிறது, என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை, இதுதான் காரணம் உன்னை தனியாக பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்,'

'நான் இன்னும் என் பதிலையே சொல்லவில்லை, அதற்குள் என்ன தைரியம் என்னை கட்டி அனைக்கிறீர்கள், என்று அவள் கேட்க, அவளை விட்டு விலகினான், சரி வா வெளியே போகலாம், உனக்கு இஷ்டமில்லை என்றால், நீ இங்கேயே இரு, நான் தனியாகப் போறேன்,' என்றான் அவன்

அவள் சிரித்துக் கொண்டே, “அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் எனக்கும் உங்களைப் பிடித்திருக்கிறது,'

“அப்படி சொல்,” என்று இப்போ அவளை இழுத்து அனைத்து, இதோ என் பரிசு, என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்,”உன்னை பார்த்த முதல் நாளிலிருந்து, தினம் என் கனவில் இப்படி உனக்கு நான் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இப்போது நிஜத்தில், ஆ...ஆ, எப்படி சுகமா இருக்கு தெரியுமா?,' என்று கேட்டான்

'ஹ்ம்ம்..., தெரியும், அதை நானும் அனுபவிக்கிறேனே,' என்றாள் வெட்கப் பட்டுக் கொண்டே,

“சரி வா, வெளியே போகலாம்,” என்று வெளியே கிளம்பும் போது, “சீக்கிரமே கல்யாணம் வைத்துக் கொள்ளச் சொல்லலாமா” என்று கேட்டான்

அவள் வெட்கப் பட்டுக் கொண்டு,' ஏன் இந்த அவசரம்,'

'இப்பத்தானே சுகத்தைப் பத்தி பேசினோம், இன்னும் சுகத்தை அனுபவிக்க வேண்டாமா, உன்னை தள்ளி வைத்து பார்த்துக் கொண்டிருக்கவா, அது என்னாலே முடியாது, சரி வா போகலாம்'

இருவரும் கொஞ்ச நேரத்தில், திரும்பி வந்தனர், ருத்ரா இருவரையும் பார்த்தான் இருவருக்கும் பிடித்திருந்தது தெரிந்தது, சிரித்துக் கொண்டே தன் தங்கையை தன்னுடன், அனைத்துக் கொண்டான், செந்திலுக்கும் கை குலுக்கி, அனைத்து, வாழ்த்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.