(Reading time: 15 - 30 minutes)

04. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

ங்கிருந்து வந்தாயடா எனை பாடுபடுத்த

நீ எனை பாடுபடுத்த..

எங்கு கொண்டு சென்றாயடா எனைத் தேடி எடுக்க

நான் எனை தேடி எடுக்க..

இன்பதுன்பம் இன்பம் துன்பம் சுகம்

இரண்டும் கொடுக்க நீ,……….

எங்கிருந்து வந்தாயடா

இன்பம் துன்பம் துன்பம் இன்பம்
இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க 
சுகம் ரெண்டும் குடுக்க 

நீ ...
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த

வானவில்லாய் ஆணும் வண்ண மேடாய் பெண்ணும்
இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் 
எழுதும் எதுவும் கவிதையாக மாறும் 
விடாமலே உன்னை தொடர்ந்திடும் என்னை
ஒரே ஒரு முறை மனதினில் நினை ... ம்ம்ம் 

என்னை என்ன செய்தாயடா 
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த……….”

பாடியபடியே வேலை செய்து கொண்டிருந்தாள் மகி..என்னடீ பாட்டெல்லாம் பலமா இருக்கு பொங்கலுக்கு ஊருக்குப் போய்ட்டு வந்ததிலிருந்து அமூல் பேபி சரியில்லயே..திவ்யாவின் பார்வை சற்று கூர்மையானது..ஹேய் அதெல்லாம் சரியா தான் இருக்கு..பாட்டு பாடினா ஒரு குத்தமா..ஏன்டி,

அப்படி இல்ல ஆனா நாளுக்கு நாள் ஒரு க்ளோ வந்துட்டேயிருக்கே உன் பேஸ்ல அதான் டவுட்டா இருக்கு..

ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல..போடி வேலய பாத்துட்டு..-மகி

ம்ம்ம் நம்பிட்டேன்..என்னடீ சாமியார் ப்ரபோஸ் பண்ணீட்டாரா உண்மைய சொல்லிரு..

ஏய்ய் சாமியார்நு சொன்ன அவ்ளோதான்..அப்படிலா ஒன்னும் கிடையாது..

ஓ ப்ரபோசல் பத்தி சொன்னது தப்பில்ல சாமியார்நு சொன்னதுதான் கஷ்டமா இருக்கா..

இவ்வாறாக இவர்களின் உரையாடல் அனைத்தையும் தற்செயலாக அந்தப்பக்கம் வந்த பரணி கேட்டுவிட்டான்..அவ்ளோ ஆயிடுச்சா இவனுக்கு..இரண்டும் அமைதியா என்னவோ ட்ரக்ல போகுதுங்க ம்ம்ம் மாட்டுவடி மாப்பிள நீ…

இரவு படுக்கையில் படுத்தவளுக்கு தூக்கம் வராததால் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள் மகி..திடீரென்று ராமின் அழைப்பு வரவே தவறுதலாக உடனேயே அட்டென்ட் செய்து விட்டாள்..

ஹலோ..ராம்..

என்ன மகி உடனே எடுத்துட்ட தூங்கலயா..

ஏனோ இரவின் அமைதியில் அவன் குரல் இன்னும் மென்மையாய் இருப்பதாய் உணர்ந்தாள்..

இல்ல ராம் கேம் விளையாடிட்டு இருந்தேன் டக்குநு அட்டென்ட் ஆயிடுச்சு..சொல்லுங்க எதாவது முக்கியமான விஷயமா?

ம்ம்ம்..ஆபீஸ்லயே சொல்லலாம்நு நெனப்பேன் பட் டைம்மே செட் ஆகல..அக்சுவலி நா பேப்பர் போட்டேன் மகி..நோட்டீஸ் பீரியட்ல இருக்கேன்..இன்னும் ஒன் வீக்ல வேற கம்பனி ஜாய்ன் பண்றேன்..

ஓஓஓஓ…சூப்பர் ராம் கங்க்ராட்ஸ்..என்னதான் அவனுக்காக சந்தோஷப்பட்டாலும் மனத்தின் ஒரு ஓரத்தில் வெறுமையாய் உணர்ந்தாள்..ராமிற்குமே அவளின் குரலில் உற்சாகம் இல்லையோ என்று தோன்றியது..தன்னை தானே கேட்டுக் கொண்டான் ஆமா நீ போறதுல அந்த பொண்ணுக்கு எதுக்கு கவல..ரொம்ப திங் பண்றடா ராம்…இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டேயிருக்க மகிக்கு பரணியிடமிருந்து அழைப்பு வந்தது..இவரு எதுக்கு இப்போ கால் பண்றாரு தெரியலையே..

ராம் பரணி அண்ணா கால் பண்றாரு..என்னனு தெரியலையே..

ஓ.கே மகி யு கேரி யான் நாளைக்குப் பார்க்கலாம்..பை..குட் நைட்,

ஓ.கே ராம் குட் நைட்..

பரணியின் அழைப்பை ஏற்றாள்..டேய் அண்ணா என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க,எப்பவும் மட்டையாயிருப்பீங்களே..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.