(Reading time: 15 - 30 minutes)

துக்குடா இவ்ளோ ஷாக் ஆகுற..நா தப்பா ஒன்னும் கேக்கலையே..மகி நல்ல பொண்ணு உனக்கு ஏத்தவளும் கூட..சொல்லுடா?

பரணி நீ ரொம்ப யோசிக்குற..நா பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன் தான் பட் ஏனோ மகிய பாத்தவுடனே ரொம்ப நல்ல பொண்ணுனு தோணிச்சு..உடனே கேக்காத மத்த பொண்ணுங்களா கெட்டவங்களாநு..நா அப்படி சொல்லல,அவ பேஸ்ல ஒரு கம்பீரம் இருக்கும்டா..சிட்டி க்ளர்ஸ் எப்பவுமே எல்லார் கூடவும் ப்ரெண்ட்லியா பழகுவாங்க..போல்ட்ஆ இருப்பாங்க..பட் மகி என்னதான் போல்ட்ஆ இருந்தாலும் அதையும் மீறி ஒரு இன்னொஸென்ஸ் தெரியும்..எல்லார்டயும் பழகுறதுல ஒரு லிமிட் தெரியும்..இதெல்லாம் எனக்கு பிடிச்சுருந்தது..சோ ப்ரெண்ட் ஆகனும்நு தோணிச்சு அவ்ளோதான்..அப்புறம் அவ ககூட பழக பழக அவ கேரக்டர் பிடிச்சுது சோ அவளுக்கு கெல்ப் பண்ணேன் இத தவற வேற ஒன்னுமில்லை…

என்னவோ சொல்ற நானும் கேக்குறேன்..பாக்குறேன் என்னதான் நடக்குதுநு..சரி என்ன உன் மகி இன்னைக்கு லீவ் போல..

நண்பனை எரிப்பது போல் பார்த்தான் ராம்..

சாரி மச்சி வாய் தவறி வந்துடுச்சு..ஏன் அவ இன்னைக்கு வரல,

அண்ணனான உன்கிட்டயே சொல்லாத அப்போ எனகிட்ட எப்படி சொல்லுவா எனக்கு தெரியாது..

ஆமா ஆமா என்கிட்ட சொல்லாம இரண்டு பேரும் எதுவுமே பண்ணமாட்டீங்க பாரு,ஏதாவது சொல்லிட போறேன் போடா..

தப்பித்தால் போதும்நு இடத்தை காலி செய்தான் ராம்..எவ்ளோ நாள் தப்பிக்குறநு பாக்குறேன்டா..

நாரதர் கலகம் நன்மையிலேநு சொல்லுவாங்க..நம்ம பரணி ஆரம்பிச்சது எப்படி முடியும்நு பாப்போம்…

னி அநாவசியமா மகிக்கு கால் பண்ணகூடாது..இந்த பரணி வேற ஏதேதோ சொல்றான்..மகிக்கு தெரிஞ்சா என்ன நெனப்பா..என்று என்னென்னவோ யோசித்துக் கொண்டே தன் இடத்தில் அமர்ந்தவனை திவ்யாவின் குரல் கலைத்தது,

ஹே அமூல்பேபி..இப்போ உடம்பு எப்படி இருக்கு?

அமூல்பேபினா மகிய தான் சொல்றாளா..அவ உடம்புக்கு என்ன நைட் நல்லாதான பேசினா..என்னனு தெரியலையே..என்று யோசித்துக் கொண்டே அவர்களின் பேச்சில் கவனம் செலுத்தினான்..

என்ன திடீர்னு தலைவலி..அப்படி என்ன ரொம்ப யோசிச்சு கிழிச்ச நீ??

……………

யாரு நீ படிச்ச, இத நா நம்பனும் போடி போ..

…………….

சரி சரி உடம்ப பாத்துக்கோ..

………

தலைவலி தானா என்னவோநு பயந்துட்டேன்..சரி நாளைக்கு வந்த அப்புறம் பேசிக்கலாம் என எண்ணிக் கொண்டே வேலையை தொடர்ந்தான் ராம்..ஆனால் அவனின் கட்டுபாடு அனைத்தும் இரவு வீட்டிற்குச் செல்லும் வரைதான்..வந்ததும் மகிக்கு மெசெஜ் அனுப்பினான்..ஹாய் மகி..வாட் ஹப்பன்ட்..ஹவ் ஸ் யுவர் கெல்த் நவ்?

தனது அறையில் புத்தகம் படித்து கொண்டிருந்தவள் மெசெஜ் சத்தத்தில் ஆர்வத்தோடு மொபைலை கையிலெடுத்தாள்..நினைத்தது போலவே ராம் தான்..

ஹாய் ராம்..தலைவலி தான் பெருசா ஒன்னுமில்ல..நவ் ஃபைன்..

அடுத்த நிமிடம் ராமிடமிருந்து அழைப்பு வந்தது..மகிக்கோ மனதினுள் இனம்புரியா உணர்வு..தயக்கத்துடனேயே அழைப்பை ஏற்றாள்..

மகி..

ஆங் சொல்லுங்க ராம்..

இல்ல நீ தூங்கிருப்பியோநு தான் மெசெஜ் பண்ணேன்..இன்னும் தூங்கலயா?

ம்ம்ம் தூங்கனும்..இனிதான்..ஏனோ பரணி நேற்று கூறியது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து போனது..

ஜஸ்ட் அ அப்டேட் அந்த ப்ராஜெக்ட்அ நாளைக்குள்ள முடிச்சாகனும்..சோ முடிஞ்சா மார்னிங் போய்ட்டு முடிச்சுரு..

ஓ.கே.அல்மோஸ்ட் முடிச்சுட்டேன்..நாளைக்கு கண்டிப்பா ரெடி ஆயிடும்..

தட்ஸ் கேரேட்..ஓ.கே மகி நாளைக்கு பாக்கலாம்..குட் நைட்..

ச்ச..அவரு ஆபீஸ் விஷயமா கால் பண்ணிருக்காரு நாம தான் தேவயில்லாம என்னன்னவோ நெனச்சுட்டோம்..எல்லா இந்த பரணி அண்ணாவ சொல்லனும்..என்றெண்ணிய படியே உறங்கி போனாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.