(Reading time: 15 - 30 minutes)

ங்கு ராமோ,டேய் ராம் என்னடா இப்டி ஆயிட்ட..மொதல்ல எதுக்கு அவளுக்கு கால் பண்ண??திடீர்னு ஏதோ ப்ராஜெக்ட் பத்திலா பேசுற..ஒரு வேளை பரணி சொன்னதுதான் உண்மையா..வேணாம்டா அது ஏதோ சின்ன பொண்ணு ப்ரெண்ட்லியா பேசுறா..நீ தேவயில்லாம குழப்பிக்காத..இவ்வாறு இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டனர்..அதை யார் முதலில் முடிக்க போறாங்க கடவுளுக்குத்தான் தெரியும்..(அஃப்கோர்ஸ் ஸ்ரீக்கும் தெரியும்ங்க…பட் பொறுத்திருந்து தான் நீங்க தெரிஞ்சுக்கனும்..)

மறுநாள் பிப்ரவரி 14 காதலர்தினம்..இந்த நாளில் இளைஞர்கள்.மனதில் இனம்புரியா உற்சாகம் அதுவாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்..காதலர்களுக்கோ சொல்லவே வேண்டாம்..மகியின் கல்லூரி தோழிகள் சிலருக்கு காதலர் உண்டு அவர்கள் இந்த தினத்தில் படுத்தும்பாடு தாங்காது..மகிக்கு சிரிப்பாக இருக்கும்..அப்படி என்னதான்டி இருக்கு இன்னைக்கு மட்டும் வருஷத்துல மத்த நாள் மாறி தான் இதுவும்..இங்லீஷ்காரன நாட்டைவிட்டு துரத்தினாலும் அவனோட பழக்கவழக்கத்த விட மாட்றீங்களே..என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா என்று கலாய்ப்பாள்.. ஆனால் இன்று ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது...அவளுக்கு மிகவும் பிடித்தமான கவிதைகளில் ஒன்று நினைவிற்கு வந்தது...,

“காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம் விளங்கும்

உனக்கும் கவிதை வரும்
கையெழுத்து அழகாகும்
தபால்காரன் தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்
காதலித்துப்பார்

 

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்

உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் – நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துபார்..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.