(Reading time: 15 - 30 minutes)

ய்ய்ய்,நீ எப்போ எனக்கு இந்த டைம்ல கால் பண்ணிருக்க தெரிஞ்சமாதிரி சொல்லாத..ஆமா என்ன இந்த நேரத்துல யார் கூட மொக்க போட்டுட்டு இருக்க??

ஹா..நா லாஸ்ட் வீக் ஊருக்கு போனப்ப பஸ் பேர்க் டவுண் உங்களுக்கு தான் கால் பண்ணேண் சார் ஆளையே காணும்..பாவம் ராம் தான் மெசெஜ் பண்ணிட்டே இருந்தாரு..

அதானப் பாத்தேன் டவுட்ல தான் கால் பண்ணேன் இப்போ கன்ஃபார்மே பண்ணிட்டேன்..இப்பவும் அவருதான் பேசினதா.?

ஆமா அவரு தான் …..ஆமா உங்களுக்கு என்ன டவுட்?

எத்தனை நாளா நடக்குது இதெல்லாம்??

அண்ணா இன்னைக்கு தான் கால் பண்ணாரு நா..அவர் வேற கம்பனி மாற போறாராம்..என்றாள் பாவமாய்..

ரொம்ப பீல் பண்ற மாறி இருக்கே  மகி..

பின்ன இருக்காதா நா..கொஞ்ச நாள் பழகினா கூட உங்க ரெண்டு பேர் கூடவும் நல்ல மிங்கிள் ஆய்ட்டேன் அதான் கஷ்டமா இருக்கு..

மகி உன்கிட்ட ஒன்னு சொல்லவா..முக்கியமா அதுக்குத்தான் கால் பண்ணேன்..

என்ன அண்ணா சொல்லுங்க..

எனக்கு என்னவோ ராம் உன்ன லவ் பண்றான்னு தோனுது..

அந் நிமிடம் ஏதேதோ எண்ணங்கள்,உணர்ச்சிகள் மகியினுள்..அவள் மனம் மகிழ்ச்சி கொள்கிறதா அதிர்ச்சி அடைகிறதா அவளுக்கே தெரியவில்லை..

அண்ணா என்ன உளற..

இல்ல மகி,இது எப்பவோ எனக்கு தெரியும் ஆனாலும் என் ஊகத்தை உன் மேல திணிக்க நா விரும்பல..ஆனா இப்போ 100 இல்ல 200% உறுதியா சொல்றேன்..

அண்ணா அப்டிலாம் ஒன்னுமில்ல..வி ஆர் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்..எத வச்சு நீங்க இப்படிலா நெனைக்குறீங்க..

நானும் அவனும் காலேஜ்ல இருந்து ப்ரெண்ட்ஸ் மகி..அவன பத்தி எனக்கு நல்லா தெரியும் எந்த பொண்ணுடயும் அவன் ஒழுங்கா பேசி கூட நா பாத்ததில்ல,.யாராவது அவங்களே வந்து பேசினாலும் இரண்டு வார்த்தைக்கு மேல பேச மாட்டான்..என்கிட்ட யாராவது பேச வந்தா கூட நாசூகக்கா எழுந்து போய்டுவான்..ஆனா உன் கதையே வேற..உன்ன செகண்ட் டே சாப்ட கூப்டதுக்கே வாங்கி கட்டுவேன்னு நெனச்சேன் ஆனா ஐயா வாயே திறக்கல..அடுத்து என்னடானா உன் போன் நம்பர் வாங்கிருக்கான்..சரி அதக்கூட விடு..ஆனா அவனுக்கு மெசெஜ் பண்றதே பிடிக்காது..அது என்னடா எதாவது சொல்லனும்னா கால் பண்ணி பேச வேண்டியதுதான அதவிட்டுட்டு லொட்டு லொட்டுனு டைப் பண்ணிட்டு இருப்பாங்களானு கத்துவான்..ஆனா நீ ஊருக்கு போய்ருந்த அப்போ பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ போனை பாத்துட்டே இருக்கான் என்னனு கேட்டா முக்கியமான மெசெஜ் வரும்னு சொல்றான்..

அண்ணா…………

இரு மகி நா பேசி முடிச்சுரேன்..இதெல்லாத்தையும் விட அவன் என்கிட்ட எதையுமே மறச்சதில்லை ஆனா உன் விஷயம் எதையுமே என்கிட்ட முழுசா சொல்லல..நீ சொல்லிதான் நீங்க ரெண்டு பேரும் ஒரே கேப்னு எனக்கு தெரியும்..அவன் தலைகீழா மாறிட்டான்டா..ஆனா ஏனோ உன்கிட்ட சொல்ல தயங்குறான்டா,அவன் எப்படியோ நீயும் எனக்கு அதே அளவு முக்கியம் மகி,உண்மையாவே உன்ன என் தங்கையா தான் நெனைக்குறேன்..நீ நல்லா இருக்கனும்னு தான்டா நா ஆசை பட்றேன்..ராம் உண்மையாவே உனக்கு ஏத்தவன்..

அண்ணா எனக்கு என்ன சொல்றதுனே தெரில..இதெல்லாம் எனக்கு புதுசா இருக்குநா..காதல் கல்யாணம் இத பத்திலா நா நெனச்சதில்லை..நெனைக்குற அளவுக்கு என் நிலைமையும் இல்ல..நிறையவே பொறுப்பு இருக்கு,பாக்கலாம் மேபி ராம் தான் எனக்கானவர்னு இருந்தா அத யாரால மாத்த. முடியும்..பட் அது நடக்குற அப்போ நடக்கட்டும் அண்ணா..

மகி உன் நிலைமை எனக்கு புரியுது..நா உன்ன கட்டாயப்படுத்தலையே..அவனா வந்து லவ்வ சொன்னா யோசிச்சு முடிவு பண்ணுனு தான் சொல்றேன்..என் ப்ரெண்ட்ங்கிறதுக்காக சொல்லல உண்மையாவே ரொம்ப நல்லவன்டா..சரி உன்கிட்ட இதெல்லாம் சொல்லி வைக்கனும்நு தோனிச்சு சொல்லிட்டேன் மத்தபடி நீ எதுவும் போட்டு குழப்பிக்காத குட் நைட் டா..

(பரணி நீங்க ரொம்ப நல்லவரு போங்க..இவ்ளோ பேசிட்டு அந்த பொண்ணை போய் தூங்க சொல்றீங்க..நீங்களா  நல்லா வருவீங்க தம்பி…)

மகியின் மனதினுள் ஆயிரமாயிரம் எண்ணங்கள்..நடக்குறதெல்லாம் சரியா தவறா..இதுக்கெல்லாம் நா தான் காரணமோ..ரொம்ப உரிமையோட பழகிட்டனோ..ஆனா எனக்கு அவர்கூட பேசுறது பழகுறது எல்லாம் பிடிச்சுருக்கே..அவர் பக்கத்துல இருக்கும் நேரம் இன்னும் நீளாதானு மனம் ஏங்குதே..ஒரு வேளை இதெல்லாம்தான் காதலா..அண்ணா சொல்றதுதான் சரியோ..ராம் வந்து  காதலிக்குறதா சொன்னா என்ன சொல்றது..யோசிக்க யோசிக்க தலையே வெடித்து விடும் போல் இருந்தது மகிக்கு..எது எப்படியோ நடப்பது நடக்கட்டும் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்..மறுநாள் எழுந்தவளுக்கு பயங்கர தலைவலி..இதோடு வேலை செய்ய வாய்ப்பிலை என்று தோன்ற திவ்யாவை அழைத்து விடுமுறை கூறி விடும்படி கூறினாள்..என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவள்  குளித்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி குளித்துவிட்டு வந்து தனது அறையின் டீவியை உயிர்ப்பித்தாள்..அவளுக்கு பிடித்தமான பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.