(Reading time: 15 - 29 minutes)

'சார், இதுவரை பத்தாயிரம் ஆயிருக்கு ' என்று கூறவும் அவன் பத்தாயிரத்தைக் கட்டிவிட்டு, சித்ராவைப் பார்க்கப் போனான், அவள் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள், அவன், அவளருகில் சென்று, அவள் தலையைத் தடவிக் கொடுத்தான், “அழாதே சித்து, நானிருக்கேன் இல்லியா, அம்மாவை சரி பண்ணிடலாம்” என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினான்.

‘அம்மாவுக்கு என்ன ஆச்சு, நீங்க டாக்டரைப் பார்த்தீர்களா?’

'ம்ம்.. டாக்டர் அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் :என்று சொன்னார்,”

'எப்படி திடீர்னு அட்டாக் வரும், முன்னாடி ஏதாவது சிம்ப்டம்ஸ் இருக்கணும் இல்லையா?”

'இருந்திருக்கும், உன்னிடம் மறைத்திருக்கலாம், நீ பயப்படுவியோ என்று, சரி அதைப் பத்தி இப்ப ஆராய வேண்டாம், இப்போ ஆம்புலன்ஸ, வரச் சொல்லியிருக்கேன், வேற ஹாஸ்பிடலுக்கு மாத்தணும், அதுக்குள்ளே வீட்டுக்குப் போய் வேண்டிய திங்க்ஸ் உனக்கு, அம்மாக்கு மாற்று டிரஸ் இதெல்லாம் எடுத்து வரணும், இவங்களைப் பார்த்துக்க இங்கே இருந்த, அந்த ஆண்டி வெளியேதான் இருக்காங்க போய்க் கேட்டுப் பார், அவங்க பார்த்துக் கொண்டால் நீயும் நானும் போய் எல்லாம் கொண்டு வரலாம், வீட்டு சாவி எங்கேயிருக்குன்னு கேளு, “

'ஓ ஆமாம், கேட்கறேன்' என்று போனாள்

அந்த ஆண்டி அங்கேதான் இருந்தாள், 'ஆண்டி, இன்னும் கொஞ்ச நேரம் அம்மாவோடு இருக்க முடியுமா, நான் வீட்டுக்குபோய் கொஞ்சம் டிரஸ் எல்லாம் எடுத்துவரேன், அப்படியே யார் வீட்டை பூட்டினாங்க, சாவி யாரிடம் இருக்கு?' என்று கேட்டாள்

'அது என்கிட்டேதான் இருக்கு நானும் மறந்துட்டேன், இந்தா,' என்று தன் இடுப்பில் சொருகி இருந்த சாவியை கொடுத்தாள்

'சரி கொஞ்சம் பார்த்துக் கொள்றீங்களா?, அம்மாவை வேறு ஹாஸ்பிடல் மாத்தறோம், ஆம்புலன்ஸ் வரும் அதற்குள் வந்துவிடுவோம்'

'சரி சீக்கிரம் வந்துவிடு,எப்படி போகப் போறே? '

'காரிலே தான் போகப் போறோம்,’ என்று சொன்னாள்

அவள் ஆண்டியுடன் அங்கு வந்தாள், அவன் கண்ணாலேயே கேட்டான், அவளும் கண் ஜாடையில் போய்விட்டு வரலாம், என்று சொன்னாள்

'நாங்க சீக்கிரம் வந்துவிடுவோம் ஆண்டி' என்று அவள் சொல்ல, இருவரும் கிளம்பினர்

'வெளியே வந்து ரிசெப்ஷனில் அவன் சொல்லிவிட்டு வந்தான்,

வர்கள் காரில் கிளம்பி சென்றனர், தெருக் கோடியில் காரை நிறுத்தி, அவனும் அவளுடன் சென்றான், அவள் வீட்டு வாசலை திறக்குமுன், எல்லோரும் அவளை சூழ்ந்துக் கொண்டனர், கேள்விகளை அவளிடம்   கேட்டாலும், கண் இவன் மீதே இருந்தது, அவன் அவளிடமிருந்து  சாவியை வாங்கி தானே கதவைத் திறந்தான், உள்ளே அவன் சென்றதும் பக்கத்து வீட்டு ஆண்டி' அது யாரு உன் கூட வந்திருப்பது?' என்று விசாரித்தாள்   

'அவர் என்னோட முதலாளி' என்றாள் 'சரி ஹாஸ்பிடலுக்கு டைம் ஆயிடுத்து நான் அப்புறம் உங்களை எல்லாம் பார்க்கிறேன்,’ என்று அங்கிருந்து நகர்ந்தாள்

உள்ளே அவளுடைய பீரோவை திறந்து என்ன எடுப்பது என்று பார்த்துக் கொண்டிருந்தான், ருத்ரா,”அவள்,”நான் வந்துட்டேன்,” தன்னுடைய சில சல்வார் செட்டை எடுத்தாள், அம்மாவுக்கு ரெண்டு புடவைகளும், தன்னுடைய நைட்டி, மூன்றும் எடுத்துக் கொண்டு, டம்பளர், ஸ்பூன் என்று யோசித்து எது, எது கண்ணில் படுகிறதோ என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். பீரோவை திறந்து பார்த்தாள் தான் கொடுத்த ரூபாய் அப்படியே வைத்திருந்தாள் அம்மா, அதையும் எடுத்துக் கொண்டாள், அம்மாவுடைய நகை இருந்தது அதையும் எடுத்துக் கொண்டாள்,

'சரி கிளம்பலாம்' என்றாள்

கிளம்பினார்கள், எல்லோரும் திரும்பி அவளிடம் பேச வந்தார்கள், அவள் விடு விடு என்று நடந்தாள், அவனும் அவளை கையை பிடித்து வேகமாக அழைத்துக் கொண்டு போனான், தெருக் கோடியில் அவர்கள் காரில் ஏறுவதை எல்லோரும் பார்த்தார்கள்.

'இந்த ஹாஸ்பிடலுக்கு எவ்வளவு ஆச்சுங்க?' என்று கேட்டாள்

அவன் பதில் சொல்லவில்லை 'இதோ பார் சித்து , நீ அம்மாவை பார்த்துக்க, நான் கல்யாண வேலையை யார்கிட்டேயாவது விட்டுடறேன், உன்னோடவே இருக்கேன், வெறும் கல்யாணத்தன்னைக்கு மட்டும் இருந்து விட்டு வந்துவிடுவேன், நான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறேன், நீ கவலைப் படாதே”

“இல்லைங்க அதெல்லாம் நல்லாயிருக்காது, நான் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் வீட்டில் எல்லாவற்றிலும் கலந்துக் கொள்ளுங்கள்,’ என்று கூறினாள்

அவர்கள் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தார்கள், ஆம்புலன்ஸ் வந்து விட்டது, அவர்கள் ரூமுக்குப் போனபோது, அங்கு சித்ராவின் அம்மாவை ஆம்புலன்சுக்கு அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார்கள், ருத்ரா, சித்ராவிடம் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு, தன் சிநேகிதன் விஸ்வாவுக்கு, போன் செய்தான், விஸ்வா, என்ற குரலைக் கேட்டவுடன், 'நான் ருத்ரா பேசறேன், விஸ்வா' எற்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.