(Reading time: 15 - 29 minutes)

'நீலகண்டன், கல்யாணத்தை இரண்டு வாரத்திற்குள் வைத்துக் கொள்ளலாம்,' என்றார்

சிதம்பரம்,  இன்னும் ஒரே வாரத்தில் வைத்துக் கொள்ளலாம், நானே எல்லா ஏற்பாடும் செய்யறேன், இப்பதான் உங்கள் வீட்டில் மூன்று கல்யாணம் நீங்க ரொம்ப களைத்திருப்பீர்கள், நானே எல்லா ஏற்பாடும் பண்ணிடறேன்,' என்றார்

ருத்ரா 'இல்ல சார், நான் பண்றேன் ' என்றான்

'அதெல்லாம் வேண்டாம் ருத்ரா, நோ பார்மாலிடீஸ், நான் பார்த்துக்கிறேன்,' என்று முடித்து விட்டார்,

ஏற்கனவே சிதம்பரம் மனைவி ஒரு செட் நகையை கொண்டு வந்திருந்தாள், அதை வித்யாவுக்கு அவரே போட்டு விட்டார்,

எல்லோருக்கும் டிபன், காபி கொடுத்தனர், சித்ராவும் கற்பகமும், அப்போது சிதம்பரம் மனைவி கேட்டார், இந்தப் பெண் யாரென்று சொல்லவில்லையே?”என்று சித்ராவைக் காண்பித்து,

நீலகண்டன்தான் சொன்னார், ‘அவளும் என் பேத்தி தான், ருத்ராவுக்குத்தான் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன்,’ என்று கூறினார்

ருத்ரா, சித்ராவையும், தாத்தா, அப்பா எல்லோரையும் பார்த்தான், எல்லோருமே சிரித்துக் கொண்டு இருந்தனர்

அவர்கள் எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருக்கும் போது, சித்ராவுக்கு போன் வந்தது, பக்கத்து வீட்டிலேந்து பேசினாங்க,' உங்க அம்மா மயங்கி விழுந்துட்டாங்க, நாங்க பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம், நீ சீக்கிரம் வாம்மா' என்றாள்,

அவள் கிடு கிடு என்று மாடிக்குப் போனாள், வந்திருந்தவர்களை வழி அனுப்ப மற்றவர்களுடன் இருந்தான் ருத்ரா, ஆனால் கண் சித்ராவின் மீதுதான் இருந்தது, அவள் அழுதுக் கொண்டே மாடிக்குப் போனது தெரிந்தது,

அவள் அவனுடைய ரூமுக்குப் போய், புடவையை மாற்றிக் கொண்டு, எல்லா நகையையும் கழட்டி வைத்து, அவன் போட்ட சங்கிலி மட்டும் போட்டிருந்தாள், தன் பாகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்,

கீழே இறங்கும்போது ‘எங்கே கிளம்பிட்டே, யார் போன் பண்ணது? ' என்று சீரியஸாக கேட்டான்

அவளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது, 'எனக்கு பேச நேரமில்லைங்க, அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க, நான் போகணும்' என்றாள்

'இரு நானும் வரேன்,' என்று தன் ரூமுக்குப் போய் பீரோவிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து கொண்டான், வெளியே வந்து தாத்தாவிடமும், அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு இரண்டு பேரும் போனார்கள்

வன் காரை எடுத்துக் கொண்டு வேகமாகப் போனான், அடுத்த அரை மணியில் ஹாஸ்பிடலில் இருந்தார்கள், போன் செய்து எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு கொண்டு போனார்கள். அங்கிருந்தவர்கள், ‘டாக்டர்கள் என்னெனவோ சொல்கிறார்கள், எதுவும் புரியவில்லை, இனிமே நீ பார்த்துக்கோ, அவங்க பணம் கட்டணும்னு கேட்டாங்க, நான்தான் அவங்க பெண் வந்துடுவாங்கன்னு சொல்லியிருக்கேன்,’ என்றாள்

'ரொம்ப தேங்க்ஸ் ஆண்டி,' நான் பார்த்துக்கிறேன் இனிமே என்றாள்

'பணம் வச்சிருக்கியா, என்ன பண்ணுவே,’ என்று கேட்டாள் பக்கத்து வீட்டு ஆண்டி

அவள் ருத்ராவைப் பார்த்தாள்

'நான் பார்த்துக்கறேன் சித்ரா, நீ அம்மாவைப் பாரு' என்றான்,

அவன் சொன்ன உடனே அந்த ஆண்டி அவனை நிமிர்ந்து பார்த்தாள், இவளுக்கு இவ்வளவு அழகான பையனா, பணக்காரன் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டு

'யாரிவர்,” என்று கேட்டாள் அந்தப் பெண்மணி  

‘என் கம்பெனி ஒனெர்,' என்றாள் சித்ரா

ருத்ரா ஹாஸ்பிடல் ரிசெப்ஷனில், விசாரித்தான், அவள் அம்மா பேர் தெரியல, ஆனா வார்டு நம்பர் சொன்னான், அவங்க பேரு கவிதாவான்னு கேட்டா, அவனுக்குத் தெரிய வில்லை, சித்ராவுக்கு கால் பண்ணி கேட்டான், ஆமாம், கவிதான்னு அவள் சொன்னாள்.

போனை வைத்து விட்டு, 'அவங்க டாக்டர் யாரு எங்க இருக்காரு, அவங்களுக்கு என்ன உடம்பு,' என்று கேட்டான்

'சார், ட்யுடி டாக்டர் இருக்காரு, அவரிடம் பேசுங்க,அவர் பேரு டாக்டர் அரவிந்தன் ' என்று சொல்லி டாக்டர் இருக்குமிடம் காண்பித்தாள் அந்தப் பெண்.

அவன் டாக்டர் ரூமுக்குப் போனான், டாக்டரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான், "அவங்களுக்கு என்ன ஆச்சு?'என்று கேட்டான்,

' சார் அவங்க இங்க வரும்போது, ஹார்ட் அட்டாக், இருந்தது, இப்போ கொஞ்சம் அவங்களுக்கு மருந்து கொடுத்து தூங்க வச்சிருக்கோம், சார் இது சின்ன ஹாஸ்பிடல், இங்கே வேண்டிய வசதி கிடையாது,'என்று டாக்டர் சொன்னார்

'நானே அதான் நினைச்சேன், அதுக்கு முன்னாடி என்ன உடம்புன்னு தெரிந்துக் கொள்ளலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன், நான் அவங்களை வேறு ஹாஸ்பிடலுக்கு மாத்திக்கிறேன்,” என்று கூறி வெளியே ரிசெப்ஷனில்,”இதுவரை எவ்வளவு கட்டவேண்டும் என்று சொல்லுங்கள், நாங்கள் அவங்களை வேறு ஹாஸ்பிடலுக்கு கூட்டிக் கொண்டு போறோம் “என்றான் ருத்ரா, அப்படியே   ஆம்புலன்ஸ் போன் நம்பர் வாங்கி கூப்பிட்டான், அவர்கள் ஒரு மணி நேரத்தில் வருகிறோம், என்று சொன்னார்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.