(Reading time: 15 - 29 minutes)

'ஹேய்ய், ருத்ரா எப்படி இருக்கே, எவ்வளவு நாளாச்சு உன்னோடு பேசி, சொல்லு என்ன விஷயம்,'

'ஒரு ஹார்ட் பேஷன்ட், அவங்களை அட்மிட் பண்ணனும், நீதான் சிறந்த ஹார்ட் சர்ஜெனாச்சே, அதான் உன் ஹாஸ்பிடல்ல உன்னோட கவனிப்பு தேவை, மிச்சதை நேரிலே சொல்றேன்,' என்றான் ருந்த்ரா

'கண்டிப்பா எப்ப கூட்டிட்டு வரே, '

'இப்பவே, ஒரு ஸ்பெஷல் ரூம் வேணும் எல்லா வசதிகளோடும்,' என்றான்

'அவ்வளவுதானே, உடனே ஒரு அரைமணியில், எல்லாம் ரெடி செய்துடறேன்,' என்றான்

ருத்ரா பேசிவிட்டு வந்தான், ஆம்புலன்ஸ் ஆட்களிடம், ஹாஸ்பிடல் பேரைச் சொன்னான், 'நானும் உங்க பின்னாடியே வரேன்,' என்றான்

'சித்ராவிடம் நீ ஆம்புலன்ஸ்ல வா, நான் காரிலே வரேன்,' என்றான்

எல்லோரும் கிளம்பினார்கள்

ருத்ரா, ஆண்டியிடம் திரும்பி,' ரொம்ப தேங்க்ஸ் ஆண்டி, இவ்வளவு ஹெல்ப் பண்ணதுக்கு, என்று சொல்லி ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து நீங்கள் ஆடோவிலே போங்க ஆண்டி' என்று சொன்னான்.

அவளும், சிரித்துக் கொண்டே 'சரி' என்றாள்.

விஷ்வாவுடைய ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர், அவன் விஷ்வாவுக்குப் போன் செய்தான், அவன் இன்னும் சில டாக்டர்ஸ், வார்டு பாய்ஸ் என்று ஒரு குழுவோடு அங்கு வந்தான், எல்லோரும் ரொம்ப மரியாதையுடன், சித்ராவின் அம்மாவை உடனே அட்டெண்ட் செய்தார்கள், மட மடவென்று அட்மிட் செய்து, எல்லாவித டெஸ்டும் ஏற்பாடு செய்தார்கள், ' ரூமில் ருத்ராவும், சித்ராவும் வந்து உட்கார்ந்தார்கள், அவன் அவளை மடியில் சாய்த்துக் கொண்டான், 'தேங்க்ஸ், இவ்வளவு ஏற்பாடும் செய்திருக்கீங்க, ரொம்ப தேங்க்ஸ், நீங்க இல்லேன்னா நான்  என்ன செய்திருப்பேன்? எனக்கே தெரியலே?' என்று கண்ணீர் விட்டு அழுதாள்

'ஹே, நான் யாரோவா, உனக்கு, ஏன் என்னை வேறு ஆளாய் நினைத்து பேசுகிறாய்' என்று சொல்லி ' இத பார், கொஞ்ச நேரம் மௌனமாய் இரு, மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்,' என்று சொன்னான்

அவளும் ஒன்றும் பேசாமல், அவன் மடியில் படுத்திருந்தாள்,

விஸ்வா உள்ளே வந்தான், அப்போது ருத்ரா குனிந்து சித்ராவின், கன்னத்தில் முத்தம் கொடுத்து, ‘எல்லாம் சரியாகிவிடும் கவலைப் படாதே,’ என்று சொல்லிக் கொண்டிருந்தான், உள்ளே வந்த விஸ்வா, ' சாரி,நான் பிறகு வருகிறேன் ' என்றான்

'ஹாய், அதெல்லாம் ஒன்றுமில்லை வா, என்று கூறி, இவள் சித்ரா, நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன், இவள் அம்மாதான் இப்போ அட்மிட் ஆகியிருக்கிறது, சொல்லு என்ன விஷயம்?' சித்ராவிடம் திரும்பி, 'சித்து, இது என் ப்ரெண்ட் விஸ்வா, பெரிய ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், 'என்று அறிமுகப் படுத்தினான்

'எல்லா டெஸ்ட்டும்  எடுதுண்டிருக்கிறோம், அவங்களுக்கு இந்த ப்ராப்லம் எவ்வளவு நாளாக இருக்கு, தெரியுமா?'

'இல்லை, தெரியாது, இது வரை அவங்க ஒன்னும் சொன்னதில்லை, டாக்டரிடம் போனது இல்லை, ஒரு மருந்தும் சாப்பிடுவதில்லை,' என்றாள் சித்ரா

'குடும்பத்தில் யாருக்காவது இருக்கா தெரியுமா,'

'தெரியாது, டாக்டர், எங்கப்பா கான்செர் வந்து இறந்தார் என்று தெரியும், மத்தபடி, குடும்பத்தில் யாரையும் தெரியாது, அம்மா சொன்னது கிடையாது,' என்று சொன்னாள்

ருத்ரா, அவளை ஒரு பார்வை பார்த்தான், அவள் ஆமாம் என்ற மாதிரி, தலையை ஆட்டினாள்,

'சரி, ரிசல்ட் வர வரை வெயிட் பண்ணலாம், இல்லை ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம், அது பற்றி ஏதாவது தெரியுமா?' என்று கேட்டான்

'இல்லை, டாக்டர் எனக்குத் தெரியாது, நான் இவர்கள் வீட்டில் இருந்தேன், காலையில் நான் கிளம்பும் வரை நன்றாக இருந்தாங்க,'

'அவங்களுக்கு பை பாஸ் பண்ணவேண்டியிருக்கும், கவலைப் படாதீங்க, பெஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன், இங்க வந்தாச்சுல்லே நான் பார்த்துக்கிறேன், என்று சொல்லி, சரி நான் போய்ப் பார்க்கிறேன், என்று ருத்ராவைப் பார்த்து, அப்போ நீ இங்கேதான் இருப்பே, உன்னை அப்பப்போ பார்க்கலாம்,' என்று சொல்லி, கிளம்பினான்

'சித்ராவை இழுத்துக் கட்டிக் கொண்டு, ஏண்டா சொல்லல, உனக்கு உறவுக்காரங்க யாரும் இல்லைன்னு,' என்று கேட்டான்

'முதல்ல, நாம எங்க பேசினோம், நாம எப்போ பார்த்தாலும் செயல்ல இறங்கிடறோம், பிறகு பேச மறந்திடறோம், என்ன செய்ய? எனக்கு தெரியாது, உறவுக்காரங்க இருப்பாங்க, ஆனா, அம்மா எதுவும் சொன்னதில்லே, நானும் கேட்டதில்லே, யாரும் வீட்டுக்கு வந்ததில்லை, ' என்று சொன்னாள்

அவன் அவளை கட்டிக் கொண்டு உட்கார்ந்து, அவளிடம் சொன்னான், 'கவலைப் படாதே, உன் அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது, விஸ்வா நல்ல டாக்டர், அவனே சொல்லிவிட்டான் கவலைப் படாதே,' என்று முன் நெற்றியில் முத்தம் கொடுத்தான்

Episode # 13

Episode # 15

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.