(Reading time: 15 - 29 minutes)

டேய் வாசு... பல்டி அடிக்கிறப்போ ஓவரா கருவுனியோ’, என்று எண்ணும்  பொழுதே விக்கல் வர...

‘கன்ஃபர்மட்டு தே தான்..!! ஒரு மொக்கை ஃபிகரை கலைச்சு விட்டதுக்கு... பல்டி அப்ளிகேஷன் போட்டு  பிள்ளையாரை எனக்கு நம்பியாராக்கிட்டியே!!!’, என்று நொந்தவனாக... வந்த  விக்கலை அடக்குவதற்கு அருகிலிருந்த பேன்ட்ரிக்குள் சென்று ஒரு மடக்கு தண்ணீரைப் பருக...

அத்தனை நேரம் அமைதியாக இருந்த கட்டிடத்தில் ஆட்கள் வரும் அரவம் கேட்க.. ‘ஆபிஸ் பஸ் வந்திடுச்சு போல’, எண்ணிக் கொண்டவன் விக்கலும் சற்று கட்டுபட....”ஹப்பாடா..”, என்று தன்னை ஆசுவாசப் படுத்த....

அப்பொழுது அஞ்சனாவும், சசியும், சுகுமாருடன்  பேசிக் கொண்டே  அந்த பேன்ட்ரியை கடந்து செல்வதைப் பார்த்தான்..

சசி சுகுமாரிடம்  ப்ராஜெக்ட் பற்றி பேசுவதிலே கவனமாக இருக்க...

அஞ்சனாவோ ஆர்யமனைப் பார்த்து விட்டாள்.

அவன் இன்னும் சசி சொன்னதற்கு வருத்த பட்டு கொண்டிருப்பான் என்ற எண்ணம் இவளுக்கு... சசியுடன் நடந்தாலும்.. ஆர்யமனை கண்களால் தொடரத் தான் செய்தாள்.. அவன் பேன்ட்ரிக்குள் செல்வதை கவனித்து அதை ஊடுருவ...

சரியாக அந்த சமயம் ஆர்யமனும் அவளைப் பார்க்க..  சசிக்கு தெரியாமல் தன் தலையை மட்டும் பின்னிழுத்து சைகை செய்தாள் நடந்த படியே..

‘சசியை கண்டுக்காதே! லிஃப்ட்க்கு வா’, என்று!!!...

அதை செய்து காட்டுவதற்குள் தான் அந்த முகத்தில் எத்தனை பாவனைகள் தோன்றி மறைகின்றன!!! அதைப் பார்த்தவனுக்கு...

‘சே... இவளை போய் திட்டி அழ வைச்சோமே!’, என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை..  அடுத்து வரும் ஓர் இரவில்...  இதை விட.... அவளை அழ வைக்க போகிறான் என்பதை அறியாமலே..

அவன் மனம் இளகினாலும்.. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது... நடக்க துவங்கினான். ஆர்யமன் தன்னை தொடர்ந்து வரக்  கண்டு அஞ்சனாவும் நிம்மதியானாள்...

அந்த சமயம், வேக வேகமாக லிஃப்ட்டை நோக்கி நடந்து வந்தாள் கோகிலா... அதன் முன்னிருக்கும் கூட்டத்தைக் கண்டு மலைத்து.. ஒரு கணம் தன் நடையின் வேகத்தைக் குறைக்க....

“லவ்லி லாவண்டர்..”, என்று காற்றில் கலந்து வந்த மெல்லிய முணுமுணுப்பு போல வந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தாள்.. காரணம் அன்று அவள் அதே நிறத்தில் சுடிதார் தான் அணிந்திருந்தாள்.

அந்த சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினாள்.. பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த ஆர்யமன் உதிர்த்த வார்தைகள் தான் அவை என்பதை நம்பவே முடியவில்லை அவளால்! அதற்காக தவறாக நினைக்கவில்லை! அவன் இப்படி கூட கமென்ட் செய்வானா.. வியப்புடன் அவனைப்  பார்த்த கோகிலா..

“தேங்க்ஸ்!”, என்றாள் சினேகமாக புன்னகையுடன்...

ஆர்யமன் இதை எதிர்பாக்கவில்லை போலும்... ‘அடப்பாவமே.. நான் சொன்னது கேட்டுடுச்சா...’, என்று திகைத்து விழித்து.. பின் சமாளிப்பாய் ஒரு புன்னகையை பதிலாக்க... அதுவரை அவள் காத்திருக்கவில்லை..

அவனிடம் வேகமாக கையசைத்து விட்டு படிகளை நோக்கி செல்ல...

கோகிலா படிகளில் ஏற ஆரம்பித்த நேரம்... லிஃப்ட் வாசல் திறந்து கொள்ள அங்கிருந்த கூட்டம் உள்ளே ஏற.. லிஃப்ட்டிற்குள் ஏறப் போனவனை எது தடுத்ததோ..... வேகமாக தலை உலுக்கி... பின் வாங்கினான்...

லிஃப்ட்டில் ஏறிய பின் தான் அஞ்சனா கவனித்தாள்... ஆர்யமன் எதிரே இருந்த படிகளை நோக்கி செல்வதைக் கண்டதும்.. மூட இருந்த லிஃப்ட் கதவை மறித்தவள்..

“கமான் ஆர்யா.. ஸ்பேஸ் இருக்கு!”, என்ற அழைக்க...  

அஞ்சனாவின் அழைப்பில் அவளருகில் நின்ற சசி மட்டுமல்ல.. மொத்த கூட்டமும் அவனைப் பார்க்க......

அந்த அழைப்பில் திரும்பியவன் படிகளைக் கை காட்ட.. அவன் காட்டிய திசையில் கோகிலா சென்று கொண்டிருக்க.....

‘கோக் கூட பேசத் தான் ஸ்டெப்ஸ்ல போறானோ?????’,என்று  சசி சந்தேகமாகப் பார்க்க, அஞ்சனாவோ அது தான் என்று தீர்மானமே எடுத்து விட்டவளாக,

ஐந்து விரல்களை விரித்து விழி விரிய கேட்டாள்.. “அஞ்சு மாடியா? ஆர் யு ஷ்யர்????”

“எப்!!!!! பை ஃபார் நொவ்”, என்று அவளுக்கு கையசைத்து.... விட்டால் போதும் என்பது போல வேகமாக படிகளை நோக்கி விரைய..

புன்னகையுடன் லிஃப்ட்டிற்குள் வந்தவள்....சசியிடம்,

“ஆர்யாவை  பார்த்தியா? கோக் கூட பேச ஐந்து மாடி கூட அசராம  போறார்... செம லவ் இல்லே???!!!”, என்று சசியிடம் குதூகலத்துடன் சொன்னவள்...

“என்னது லவ்வா?”, என்பது போல அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.