(Reading time: 15 - 29 minutes)

சுகுமாரோ...  அதை வாயைத் திறந்து கேட்டே விட்டான்!!!!

ஆர்வமாக அவனிடம்.... “எஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!! பட், ஒன் சைட்!!!”, என்றவள்...

“ஸ்ஸ்ஸ்... அய்யோ... ஆர்யா யார்கிட்டவும் சொல்லாதேன்னு சொன்னாரே.. நீங்களும் யார்கிட்டவும் சொல்லக் கூடாது! சரியா????”, என்று வேறு கேட்க...

“ஹா...ஹா... நேத்து தான் ஆபிஸ்க்கு வந்துட்டு... நல்லா ரீல்  சுத்துறீங்க!!! எங்க தலயை பத்தி எங்களுக்கு தெரியாதா!!! அழகிய தமிழ் மகன்னு தளபதி டைட்டில்ல வாங்கின எங்க தல... அழகிய தமிழ் மகளா இருந்தாலும் திரும்பி பார்க்க மாட்டார்...”, என்று ஏகத்துக்கும் புகழ...

அவன் நேற்று கோகிலாவைப் பார்த்த பார்வை அழியாத் தடம் போல பதிந்து விட்டிருந்தது சசிக்கோ அவன் புகழாரம் சூடுவதைக் கண்டு உண்டான புகைச்சலில்...

“நெருப்பு இல்லாம புகையாது!!!!! லவ் இருக்கோ இல்லையோ.. க்ரஷ் கண்டிப்பா இருக்கு... அவர் கோகிலாவை லுக் விடுறதை என் கண்ணாலே பார்த்தேனே.. ” - என்றாள் சசி கூடுதல் தகவலாக..

அதற்குள் லிஃப்ட் ஐந்தாவது தளத்தை அடைந்து விட....

“எது எப்படியோ! ஆர்யா லவ் சக்ஸஸ்ஃபுல்லா மேரேஜ்ல முடியணும். அதை ஒன்னை மட்டும் தான் நாம நினைக்கணும்!!!!”, என்று வேறு வீர வசனம் பேசி கொண்டே வெளியேறினாள் அஞ்சனா.

இப்படியாக ஆர்யமனின் அசாத்திய திறமையும்... கோகிலாவின் அபரிதமான அழகும்.. கிட்டத்தட்ட மேக்ஸ் சாஃப்ட் செலிபிரிட்டிகளாக கருதப்பட்ட இருவரை பற்றிய இந்த செய்தி அன்றைய தினத்தின் முக்கிய செய்தியாகப் போவதை அறியவில்லை அஞ்சனாவும், சசியும்..

அஞ்சனாவும், சசியும் அந்த டீம்மில் புதிதாக சேர்ந்திருந்ததால், இருவருக்கும் தற்காலிக இடங்களே ஒதுக்கப் பட்டிருந்தது..

லிஃப்ட்டில் இருந்து வந்ததும்... அவரவர் தத்தம் இடம் நோக்கி செல்ல.. அஞ்சனா பயிற்சி அறைக்கு சென்றாள்..

அவள் அங்கு சென்று அமர்ந்ததுமே சூடாக டீ வந்தது... அதைக் கொண்டு வந்த ஆபிஸ் பாயிடம் ...

‘டீ நான் சொல்லவே இல்லையே!!!’, என்று பேச்சுக்கு கூட கேட்கவில்லை.. தூக்கத்தில் எழுப்பி கொடுத்தால் கூட சந்தோஷமாக அதை குடித்து விடும் அஞ்சனா... கிடைத்த டீயை விட மனதின்றி.. தன் எஸ்டேட் ஏலக்காய் தூளைக் கலந்து அதை குடித்து முடிக்கும் சமயம்..

“ஹேப்பியா???”, என்ற ஆர்யமனின் குரல் கேட்க...

திரும்பிப் பார்த்தாள்.... அவன் தான்! கதவில் சாய்ந்து இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். ‘கர்டசி டீயா?’, தனக்குள் கேட்டுக் கொண்டவள்..

“டீ கொடுத்து கரக்ட் பண்ண பார்க்கிறீங்களா ஆர்யா??”

நியாயமாக அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்... அவள் கேட்ட தோரணையோ... இல்லை அதை சற்றும் எதிர்பார்க்காததாலோ.... வாய் திறந்து சிரித்து விட...

அவனின் சிரிப்பில் கன்னத்தில் குழி விழுந்ததை இப்பொழுது தான் அஞ்சனா கவனித்தாள்....

சிபிக்கு கூட இப்படி தான் குழி விழும்.. அதை பார்க்கும் பொழுது பரவரக்கும் அவள் கை... பென்சில் இல்லை பால் பாயின்ட்டால் அதை குத்தி விடுவாள்.. சிபியின் நினைவு வந்து போக.... இவன் தான் தொடக் கூடாதுன்னு கத்தினானே....

என்ற பொழுது கோகிலாவின் நினைவு வர...

“அட..  ஸ்டெப்ஸ்ல  கோகிலாகிட்ட பேச்சு கொடுத்து அவங்களை  கரகெட் பண்ணாம என்கிட்ட வந்து???”, கண்கள் விரிய அவள் கேட்டதும்...

நிச்சயம்... இந்த முறை அவள் பேச்சு விளையாட்டாக தெரியவில்லை அவனுக்கு... அநியாயத்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு..

“என்னை என்னனுன்னு நினைச்சுகிட்டு இருக்கிறே நீ!!!”, கேட்டவனின் பார்வையில் அத்தனை கண்டிப்பு. அதை எல்லாம் சட்டை செய்யாது மேலே ஏதோ பேச வந்தவளை.. கையமர்த்தியவன்..

’கொஞ்சம் இறங்கினா போதுமே... தலையில் ஏறி உட்கார்ந்துடுவா..’, என்று தனக்குள் வெகுண்டவன்..

“வந்தோமோ ட்ரையினிங் முடிச்சோமோ போயிகிட்டே இருக்கணும்! இந்த கோர்த்து விடுற வேலையெல்லாம் பண்ணே டீம்லே இருக்க மாட்டே!” என்று கண்கள் இடுங்க  ஏகத்துக்கும் மிரட்ட...

“சரி... சரி.. ஒய் டென்ஷன்.. நோ டென்ஷன்.. “, என்று கூலாக சொன்னவள்..

அங்கிருந்த லேப்டாப்பை பார்த்து விட்டு அவனிடம் திரும்பினாள்...

“ஹே என் கேமிங் லேப்டாப் எங்கே?????”,

“என்னது உன் லேப்டாப்பா???”

“ம்ம்... கொஞ்ச நேரம் என்கிட்ட தானே இருந்தது....”

‘அந்த கொஞ்ச நேரத்துக்கே டெக்னிகல் டைரக்டர் வரை இழுத்து விட்டுட்டே...  இன்னைக்கும் கொடுத்தா  CEO முன்னாடி நிக்க வேண்டியது தான்... சரியான ஓட்டை வாய்’, என்று உள்ளுக்குள் எழுந்த கோப அலையை அடக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.