நம்ம ஆட்களை மறைவா நடக்கிறதை கவனிச்சு என்ன மெசேஜ் பாஸாகுதுன்னு பார்க்க சொல்லி இருந்தேன்….அண்ணி படு ஷார்ப்…உணர்ச்சி வசப்பட்டு இறங்கிலாம் ஓடி வந்துடலை…..சிம் கார்ட் மட்டும் கேட்டாங்க…. ஆக மாசிரன் ஆள் ஃபேக் டாகுமென்ட்ஸ் கொடுத்து சிம் வாங்க போக…அவன் போற அத்தனை ஷாப்க்கும் அவனுக்கு சிம் கொடுக்க கூடாதுன்னு எங்க டிபார்ட்மென்ட் மூலமா சொல்லி அவனை இழுத்தடிக்க விட்டுட்டு….
அந்த டைம்ல அகதனை பேங்களூர்ல இருந்து மும்பைக்கு உனக்கு துணையா வர சொல்லிட்டு நான் கிளம்பி சென்னை போய்ட்டேன்…..ஏன்னா ஸ்பாட்ல நான் இருக்கனும்…..அதோட அந்த சிம் வேற வழி இல்லாம அதாவது மாசிரனோட ஆள் யார் பேர்லயாவது அவங்க வாங்கினா….நமக்கு எவிடென்ஸாவும் இருக்கும்நு பார்த்தோம்….
நான் கிளம்புறப்ப நீ தூங்கிகிட்டு இருந்த…உன்னை எழுப்ப மனசு வரலை... எப்படியும் ப்ரச்சனை முடிஞ்சுட்டு…. திரும்ப வந்து முழுக்க முழுக்க உன் கூடதானன்னு கிளம்பிப் போனேன்…..அடுத்து நடந்தது உனக்கு தெரியும்…”
“இல்ல தெரியாது….நித்து விஷயத்துலயும் கண்டிப்பா எதோ கோல்மால் செய்துறுக்கீங்க…” மனோதான்.
அவளது கோல்மால் வார்த்தையே அவளுக்கு நடந்தவைகளில் முழு உடன்பாடு இல்லை என்பதை காமிக்கிறதுதான்…..ஆனாலும் இதுவரை அவளிடம் இவன் என்ன பேசி இருக்கிறானாம்? ஆக இன்று அவள் கேட்கும் எல்லாவற்றையும் பேசி விடுவது என்ற முடிவில் இருந்தான் அவன்.
“உன்னை எனக்கு பிடிச்ச நாள்ள இருந்து உன்னைப் பத்தி விசாரிச்சுட்டுதான் இருந்தேன்…அப்ப FB ல உன்னை தேடினப்ப… உன் டைம்லைன்ல நீ ஷேர் செய்திறுந்ததை வச்சு உனக்கு நித்து க்ளோஸ்னு புரிஞ்சிது….அடுத்து மும்பை போனதும் நான் நித்துவ கான்டாக்ட் செய்தேன்….அப்றம் என்ன நடந்துறுக்கும்னு உனக்கு சொல்லனுமா என்ன?”
பேசி முடித்தவன் இவள் முகத்தையே பார்த்திருந்தான். அவளிடம் மௌனம். இவன் மீது பார்வையும் பதிக்கவில்லை…..
சற்று நேரம் இப்படியே கடக்க
“உங்கட்ட ஒன்னு சொல்லனும்…” அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னமா?”
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்…..” அவள் வார்த்தையில் அவன் மொத்த முகத்தில் மலர்வது என்ன?
“இதுக்குதான்னு காரணமே இல்லாம கூட உங்களை ஆரம்பத்துல இருந்தே பிடிக்கும்…” இவள் கண்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான் அவன் இப்போது.
“அதுவும் உங்க பாஸ்ட்ட தெரிஞ்சுக்கப்ப யார் யார்லாமோ உங்களுக்கு கொடுக்காம போன அன்பை மொத்தமா நானே உங்களுக்கு கொடுக்கனும்னு தோணுது…. ஆனா”
“…………….”
“சின்ன வயசில இருந்து எது கெட்டது எது நல்லதுன்னு அம்மா அப்பா சொல்லி கொடுத்தாலும்….எனக்கான முடிவுகளை என்னையத்தான் எடுக்க சொல்லிப் பழக்கம்….அப்டி வளந்துட்டு……நீங்க இப்ப சொன்ன காரணம் எதுவும் எனக்கு தப்பா தெரியலை…எனக்காகத்தான் பார்த்துறுக்கீங்க எல்லாமே….ஆனாலும் ஏதோ ஒன்னு சமாதானமாக மாட்டேங்குது….”
“மனு…” அவன் ஆரம்பிக்க இவள் தடுத்துவிட்டாள்….
“கண்டிப்பா இதுல நீங்க செய்றதுக்கு ஒன்னும் இல்லை மித்ரன்…. மே பி இது ஒரு ஏமாற்ற உணர்வு….வருத்தம்…ஏதோ…..ஆனா இது சீக்கிரம் சரி ஆகிடும்…..அது வரைக்கும் எனக்கு கொஞ்சம் டைமும் ஸ்பேசும் கொடுங்க…..”
இப்போது அவன் முகத்தில் புன்னகை பூத்திருந்தது…. .”உனக்கு இல்லாததா மனு? ஏற்கனவே நாம மீட் பண்ணியே கொஞ்ச நாள்தான் ஆகுது….சோ கண்டிப்பா நமக்கு ஒரு டைம் வேணும்தான்…”
இரண்டு பேரும் ஒரு வகையில் இந்த முடிவை சற்று எளிதாகவே எடுத்துக் கொள்ள, காலமோ அதை வேறுவிதமாக கையாண்டது…..அதுவும் அந்த ஆட்டம் மறு நாளே தொடங்கியது…..
தொடங்கி வைத்தது மறு நாள் காலை இவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த இன்பாவின் அழைப்பு…
தொடங்கிய இடம் மித்ரனின் அம்மா வீடுதான்…..
தொடரும்!
{kunena_discuss:928}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.