(Reading time: 26 - 52 minutes)

னா உனக்கு விருப்பமில்லாம நான் உன்னை கட்டாயபடுத்தி மேரேஜ் செய்து அடச்சு வச்சுருக்கேன்…..எந்த நிமிஷமும் நீ தப்பிச்சுப் போக…..டிவோர்ஸ் செய்ய ரெடியா இருக்கன்னு நான் அந்த கல்ப்ரிட்ட காமிச்சுட்டா…… அவன் உன்னை என்ட்ட இருந்து ரெஸ்க்யூ செய்ய ட்ரைப் பண்ணுவான்….அதுவும் அம்மா உன்னை என் வைஃப்னு நினைக்கிற வரைக்கும் அவன் மர்டர் வயலன்ஸுன்னு போக மாட்டான்….

மதி கூட மேரேஜ் ஆகிட்டுன்னு வீட்டுக்கு நியூஸ் போன உடனே கூட அவன் அவளை எதுவும் செய்யலை…..கொல்லலை….ஆனா டிவோர்ஸ் ஆகிட்டுன்னு தெரிஞ்ச பிறகும் அதுவும் ரொம்ப நாள் கழிச்சுனாலும் மர்டர் செய்துறுக்கான்….

அதாவது என் கல்யாணத்துக்கு பிறகும் அவன் ஆசைப்படுறது நடக்க வழி இருக்குன்னு அர்த்தம்….அதனால அதுக்காக தன் ப்ளானைத்தான் தொடருவான்…..

ஆக அவன் நமக்கு கல்யாணம் ஆனாலும் அதுக்கு பிறகும்  தன் வேலைய தொடருவானே தவிர…..கல்யாணம் ஆகிட்டுன்னு விட்டுட்டுப் போகவோ…….இல்லை கல்யாணம் ஆகிட்டுன்னு மறுநாளே ஹோப்லெஸ்ஸாகி அட்டாக் செய்யவோ மாட்டான்…… உன்னை என்ட்ட இருந்து ரெஸ்க்யூ செய்யதான் வருவான்…

அதோட இந்த ப்ளான்ல 24 மணி நேரமும் நீ என் கண்பார்வையில இருப்ப….உன் சேஃப்டிய நானே முழுக்க முழுக்க என் கையில எடுத்துக்க முடியும்….

அதுவும் அந்த கல்ப்ரிட் என்னை எப்பவுமே கொல்ல ட்ரைப் பண்ணலை….. சொல்லப் போனா நான் உயிரோட இருக்கனும்னு அவன் நினைக்கானோன்னு கூட எனக்கு ஒரு க்ளூ….. உன் அப்பா வீட்ல ஷுட் அவ்ட் நடந்த அன்னைக்கு  நான் அங்க இருக்கேன்னு அந்த கல்ப்ரிட்டுக்கு தெரியலை..ஒரு ப்ரொஃபஷனல் கில்லரை அனுப்பி ஷூட் அவ்ட் ட்ரைப் பண்ணினான்….

ஆனால் நான் அங்க இருக்கேன்னு அவனுக்கு தெரிஞ்ச பிறகு அவன் அனுப்பி இருந்த அந்த ப்ரொஃபஷனல் கில்லர் கன்னை எனக்கு எதிரா யூஸ் செய்யவே இல்லை…….கண்டிப்பா அது அந்த கல்ப்ரிட்டோட கமென்ட்டா தான் இருக்கனும்….ஏன்னா அன்னைக்கு அந்த கில்லர நானும் ஜோஸஃபுமா பிடிச்சுட்டோம்…..அப்படி மாட்டிக்க மாதிரி சூழ்நிலை இருந்தும் அவன் கன்னை என்னைப் பார்த்து யூஸ் செய்யவே இல்லை….”

“வாட்…பிடிச்சுட்டீங்களா?..அப்ப…..அவனை உண்மைய சொல்ல வைக்க முடியலையோ?” மித்ரன் சொல்வதையே யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்த மனோகரி இடையிட்டாள்.

“அது மனு….யாரும் ஃப்ரொஃபஷனல் கில்லர்ட்ட தன்னைப் பத்தி…தான் யாருன்னு சொல்லிலாம் வேலை கொடுக்றது கிடையாது…..அப்டியே தான் யாருன்னு சொன்னாலும் அது கண்டிப்பா பொய்யான தகவலாதான் இருக்கும்…ஏன்னா இந்த கில்லர் மாட்டினா அனுப்பினவன காட்டி கொடுத்துடுவான் இல்லையா….அதை அவாய்ட் செய்ய இப்டிதான்…..அன்னைக்கு மாட்டினவன்ட்ட இதை செய்ய சொல்றது என் அம்மான்னு சொல்லி வச்சுறுந்தாங்க….சோ அவன்ட்ட இருந்து எந்த இன்ஃபோவும் கிடைக்கலை…..”

“ஓ” என்பதோடு தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள் மனோ.

“நான் உயிரோட இருக்கனும்னு கல்ப்ரிட் யோசிக்கிறான்னு தெரியுறப்ப…..நான் உன் கூட இருக்ற வரைக்கும் அவன் ஆக்சிடெண்ட் அது இதுன்னு போக மாட்டான்….….மதி கூட நான் இல்லாதப்பதானே அவளுக்கு ஆக்சிடெண்ட்…..

அதோட நான் உன் கூட இருக்றப்ப உன்னை ஒவ்வொரு நொடியும் பார்த்துபனே….

 அதுக்கும் அடுத்த விஷயம்…..கல்ப்ரிட் உன்னை ரெஸ்க்யூ செய்யன்னு  உன்னை நான் அடச்சு வச்சுறுக்க இடத்துக்கு தேடிவந்து உன்னை கம்யூனிகேட் செய்ய ட்ரைப் பண்றப்ப ….உன் பக்கத்துல இருக்ற என்னால யார் கல்ப்ரிட்னு கண்டு பிடிக்க முடியும்….அதாவது ஒரு வகையில இந்த ப்ளான்ல கல்ப்ரிட் நம்மை தேடி வருவான்…..அவனை கண்டுபிடிக்க வருஷ கணக்கா காத்துட்டு இருக்க வேண்டாம்….”

“ம்…”

“இது அந்த கல்ப்ரிட் சம்பந்தபட்ட வீயூ…அடுத்து என் அம்மா……”

“??????”

“எங்கம்மா பிடிவாதம் பத்தி இதுக்குள்ள உனக்கு புரிஞ்சிருக்கனும்……அவங்களுக்கு ஒன்னு சரின்னு பட்டா அது தான் கடைசி வரைக்கும் சரி…..ஆக நம்ம மேரேஜ் நடக்காம இருக்க வரை அதை தடுக்க எதாவது செய்துட்டே இருப்பாங்க…..மேரேஜ் ஆகிட்டுன்னா அடுத்து எதுவும் எதிரா செய்ய மாட்டாங்கதான்….ஆனா மேரேஜ் நடக்க வரைக்கும் என்னல்லாம் செய்வாங்கன்னு சொல்ல முடியாது….எப்படியும் தொந்தரவு செய்வாங்க……

கல்ப்ரிட் உன்னை கிட்நாப் செய்துட்டு…அது என் அம்மாவுக்கு தெரிஞ்சாலும் சமாளிச்சுகலாம்னு நினைச்சிறுக்கான்னா….என் அம்மா அந்த அளவுக்கு என் மேரேஜ் விஷயத்துல ப்ரச்சனை செய்ய ரெடியா இருக்காங்கன்னு அர்த்தம் ஆகுதுல்ல….

அப்டி திரும்பி ரெண்டு கிட் நாப் அட்டெம்ட் செய்தா உன் அம்மா அப்பாவுக்கு எவ்ளவு டார்ச்சரா இருக்கும்….? ”

“ம்…”

“நமக்கு மேரேஜ் நடந்தா அம்மா வகையில வர்ற தொல்லையெல்லாம் கூட நின்னுடுமே.”

“ம்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.