(Reading time: 26 - 52 minutes)

ப்டி ஒன்னொன்னையும் யோசிக்கிறப்ப நீ என் மேல கோபமா இருக்ற மாதிரி செட் செய்துட்டு நாம மேரேஜ் செய்றதுதான் எல்லா வகையிலும் பெட்டர்னு பட்டுது….” விளக்கமாக சொல்லியவன் இப்போது இவள் என்ன நினைக்கிறாள் என அறியும் வண்ணமாக பேச்சை நிறுத்தி தன்னவளைப் பார்த்தான்.

“யோசிக்கிறப்ப நீங்க சொல்றது எல்லாம் சரின்னு தான் படுது…. அகதன் இதுக்கு சம்மதிச்சுறுக்கான்னா காரணம் ஒன்னும் சின்னதா இருக்காதுன்னு எனக்கு அப்பவே புரிஞ்சுதுதான்….” தன் பதிலை சம்மதமான குரலில் ஆரம்பித்த மனோ

“ஆனா இது எல்லாத்தையும் அகதன்ட்ட சொல்லிட்டுத்தானே செய்துறுக்கீங்க….அப்டி என்ட்டயும் சொல்லியிருக்கனும்தானே….? அவன்னா புரிஞ்சுப்பான்…..நான்னா புரிஞ்சுக்க மாட்டேனா…? அப்ப இப்ப மட்டும் புரிஞ்சுப்பேன்னு எதை வச்சு சொல்றீங்க….?” என ஆதங்க குரலுக்குப் போய்

“ ஆக விஷயம் நான் புரிஞ்சுப்பனா இல்லையான்றது இல்ல…. உங்க மனசுக்கு நான் அவ்ளவு தூரம் க்ளோஸ் இல்லை…..அதான் அவன்ட்ட சொல்லிட்டு என்ட்ட சொல்லாம…..என்னமோ ஆடுமாடை பிடிச்சு அடைக்கிற மாதிரி…..” அதற்கு மேல் பேச முடியாமல் குரல் கம்ம நிறுத்திவிட்டாள்.

அதோடு அதுவரைக்கும் அவன் கைகளுக்குள் இருக்க அனுமதித்திருந்த தன் கையை உருவவும் முனைந்தாள்…

அவனோ உருவ முனைந்த அவள் கையை தடுக்கும் விதமாக சற்று அழுத்தமாக பற்றியவன்….அவள் கண்களை தன் ஆழ் பார்வையால் ஊடுருவியபடி கேட்டான்….”நீ சொல்றதை உனக்கே நம்ப முடியுதா மனு?”  அவள் அடிமனதை அகம் தொட்டு வருடியது அவன் குரல்.

 இதென்ன குரல்…? இதென்ன பார்வை? !!!!!!

இவளது எண்ணத்தின் மீது இவளுக்கே நம்பிக்கை இன்மையை கொண்டு வருகிறதே…..

 ‘சரி இவளுக்காக இவ்ளவு யோசிச்ச அவன் ஏன் இவட்ட சொல்லலையாம்?’

“சரி என்ட்ட ஏன் சொல்லலைனு சொல்லுங்க…?” அரை குறை சமாதானத்தோடு, ‘என்ன இருந்தாலும் நீ என்ட்ட சொல்லாம செய்ததுல எனக்கு உடன்பாடு இல்லை’ என்ற செய்தி ஏந்திய குரலில்….’நீ சொல்லு அப்றமா நான் முடிவு சொல்றேன்’ என்ற ரீதியில் கேட்டவள் தொடர்ந்து

“அத்தனை சிச்சுவேஷன்லயும் உங்களை நம்பி அங்க வந்தேன்….. “ ஆதங்கமும் வேதனையும் நிரம்பிய அப்பட்டமான குற்றம்சாட்டும் தொனி இவள் குரலில்…

இப்பொழுது இவள் உயிரை வருடும் ஒரு பார்வையால் பெண் முகம் பார்த்தவன்… தன் வலக்கையில் அவள் இடக்கன்னத்தை ஏந்தி

 “தெரியும் மனு…..நீ என்னை முழுசா நம்புற…… என்னை புரிஞ்சுகிடுவன்னு எனக்கு நல்லா தெரியும்…..அந்த தைரியத்துல தான் நான் இந்த ப்ளானுக்கே போனேன்…” தளிர் தீண்டும் தென்றல் போல ஒருவித மென் குரலில், தான் என்ன சொல்கிறேன் என உணர்ந்து தான் சொல்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் நிதானமேறிய அழுத்த தொனியில் அவன் சொல்ல

சட்டென அவன் கையை தட்டிவிட்டாள் மனோ. “ஓ அப்ப உங்கள நம்புனதுதான் என் தப்பா? நம்புனவங்கள இப்டிதான் பனிஷ் செய்வீங்களா?” இப்போது கொதிப்பு ஏறியது அவள் குரலில். இன்னுமாய் அவன் பிடியில் இருந்த அவள் கையை உருவிக் கொண்டு எழுந்தும்விட்டாள்…

“ என்ன விஷயம்னு முழுசா கேட்க மாட்டியா மனு?” படுக்கையில் அமர்ந்திருந்தவன் எழுந்து நின்ற இவளை நோக்கி தன் கண்களை உயர்த்திக் கேட்க….

இப்பொழுது மீண்டுமாக அமைதியாக அமர்ந்து கொண்டாள் இவள்…….ஆனால் முன்பைவிட அவனைவிட்டு விலகி தூரமாக…..

“அந்த ஷூட் அவ்ட் அன்னைக்கு நைட் உன்ட்ட விஜிலா அண்ணி பேசுனதை ஏதேச்சையா கேட்டுட்டு……அந்த நிமிஷமே உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கனும்னு அடிச்சு பிடிச்சு என்ட்ட ஓடி வந்தாங்க அகதன்…..அதுக்குள்ள ஃபோர்ஸ் செய்து உன்னை மேரேஜ் செய்ற மாதிரி ட்ராமா செட் அப் செய்தா தான் ப்ரச்சனையை ஹேண்டில் செய்ய முடியும்னு எனக்கு தோணி இருந்தாலும்…….என்ட்ட எக்‌ஸாக்ட் ப்ளான் எதுவும் கிடையாது….அகதன்ட்ட நான் விஷயத்தை சொல்லிட்டு எனக்கு இதுக்கு இதுதான் தீர்வா தெரியுதுன்னு சொன்னேன்…..

இதுல நீ புரிஞ்சுக்க வேண்டிய முக்கிய விஷயம்…. கல்ப்ரிட் 6 வருஷத்துக்கு மேல என்னைத் துரத்திட்டு இருக்றவன்…..அதுவும் 6 வருஷமா மாட்டிக்காம காயை மூவ் பண்றவனும் கூட….அவன் இப்ப மட்டும் நான் உன்னை மேரேஜ் செய்துட்டேன்னு தெரிஞ்சவுடனே ஓடி வந்து  ஒரே வாரத்துல மாட்டிப்பான்னு எப்டி எதிர்பார்க்க?

லாஜிகலி எப்டி யோசிச்சுப் பார்த்தாலும் கல்ப்ரிட் நம்மட்ட மாட்ட குறஞ்சது ஃப்யூ மந்த்ஸாவது ஆகும்னு எனக்கும் அகதனுக்கும் பட்டுது…… அதாவது நீ ஒரு மூனு நாலு மாசமாவது என் மேல  கோபத்துலயும் வெறுப்புல என்னை விலகிப் போற மாதிரி தினம் 24 மணிநேரமும் நடிக்கனும்…… ஏன்னா எந்த டைமல எங்க இருந்து எப்படி நம்மை வாட்ச் பண்ணுவாங்கன்னு யாருக்குத் தெரியும்?..... அதோட அது ஆறேழு மாசமாகவும் போகலாம்….”

“……………”

“நான் உன்னைப் பார்த்த முதல் மீட்டிங் ஞாபகம் இருக்கா மனு?”

“ம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.