(Reading time: 26 - 52 minutes)

ப்பதான் அந்த மாசிரன் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு……ஏன்னா ஆடிடிங் பெர்ம்னா தெரியும் தானே மனு…..இப்ப நேஷன் க்ரூப்ஸுக்கு எந்த எந்த பிஃஸினஸில் என்ன இன்வெஃஸ்ட்மென்ட் இருக்கு….. என்ன லாபம் இருக்கு… எவ்ளவு வருமானம் இருக்கு… எவ்ளவு செலவு இருக்கு…டேக்‌ஸ் எவ்ளவு கட்டனும்…டேக்‌ஸை குறைக்க எங்க எப்டி இன்வெஸ்ட் செய்யலாம்…. அப்டின்னு எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க…அப்பாவோட நேஷன் க்ரூப்ஸ் மாதிரி பெரிய பிஸினஸ் ஃபெர்மில் அதோட சேர்மனுக்கு கூட தனக்கு எங்கல்லாம் எவ்ளவு சொத்து இருக்குன்னு எல்லா நேரமும் ஞாபகம் வச்சுக்க முடியாது…

உதாரணமா நேஷன் க்ரூப்ஸ்ட்ட ஒரு பேங்க் இருக்குது…. இந்தியா முழுக்க அதுக்கு ப்ரான்ச் இருக்கு….அதோட அதுக்கு நிறைய ஆஃபீஸஸ் அதுக்கு….அதுல அதோட டார்ன் ஓவர்..பராஃபிட் இதெல்லாம் தாண்டி….. எத்தனை பில்டிங்க் நம்ம சொந்த பில்டிங்க்…எத்தனை லீஸுக்கு எடுத்தது…. பேங்க்ல இருந்து வர்ற ப்ராஃபிட்டை நாம எங்கல்லாம் எப்டிலாம் இன்வெஸ்ட் செய்துறுக்கோம்….இப்டிலாம் எல்லா நேரமும் நாம ஞாபகம் வச்சுக்க முடியாது…. பேங்க் தவிர நம்மட்ட ஆட்டோமொபைல்ஸ் கம்பெனி இருக்கு அதுக்கு 6 இடத்துல ஃபேக்டரி இருக்கு…..இப்டி ஒன்னொன்னையும் யோசிச்சுப் பாரு…. மொத்தம் 19 டைப்ஸ் ஆஃப் கம்பெனி இருக்கு நேஷன் க்ரூப்ஸ்ல…. இந்த பிஸினஸை பார்க்கிறது மேனேஜ் செய்றதுதான் நாம செய்வோம்….மத்தபடி எல்லாத்தையும் நியாபகம் வச்சுக்க முடியாது…..

அதனாலதான் அம்மாவுக்கோ வர்ஷனுக்கோ இன்பாவுக்கோ அவங்களுக்கு கொடுத்தது போகவும் எனக்கு கொடுக்க அப்பாட்ட ப்ராப்பர்ட்டிலாம் இருக்குன்னு கூட தெரியலை….அப்பாவும் இந்த இந்த பிஸினஸில் இத்தனை இத்தனை பெர்சென்டேஜ் இவங்களுக்குன்னு சிம்பிளா எழுதலை …எது எது யார் யார்க்குன்னு ரொம்ப ஸ்பெசிஃபிக்கா பிரிச்சிறுக்காங்க….. சோ யாருக்கும் இது தவிரவும் இன்னும் அப்பாவுக்கு  இருக்குன்னு தோணலை….

ஆனா ஒவ்வொரு பிஸினஸையும்…அதோட அத்தனை வகை பண விஷயத்தையும்…. அனாலிஸிஸ் செய்து அதுக்கு ஏத்த மாதிரி முடிவு செய்ற ஆடிட்டிங் பெர்ம்க்கு நமக்கு என்ன ப்ராப்பர்டிலாம் இருக்குன்னு நம்மவிட எப்பவுமே தெளிவா தெரியும்…

அப்பா உயில் எழுதனும்னாலே இந்த ஃபெர்மோட ஹெல்ப் தேவைப் பட்டிருகும்….ஆக அம்மாட்ட கொடுக்காம அப்பா வச்சுட்டுப் போன எனக்கான உயில் பத்தி இவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிறுக்கும்…..

அதுவும் அப்பா காலத்துல இந்த ஃபெர்ம பார்த்துக்கிட்டவர் நேதன் அங்கிள்…..அவங்க அப்பாவுக்கு நல்ல ஃப்ரெண்ட்னு எனக்கு தெரியும்….அதனால நேதன் அங்கிள வச்சு உயில் எழுதுன அப்பா…நேதன் அங்கிள்ட்டயே என்னோட பொறுப்பையும் கொடுத்துறுப்பாங்க…..அவங்க இறந்துட்டதால அது மாசிரன்ட்ட வந்திருக்கும்….

அத வச்சு மாசிரன் ஏன் ஏதோ ப்ளான் செய்ய கூடாதுன்னு பட்டுது… ஆக மாசிரனை ரொம்பவும் கண்காணிக்றதுன்னு முடிவு செய்தேன்….

இன்னொரு விஷயம் விஜிலா அண்ணி….வர்ஷனுக்கும் அவங்களுக்கும் ஏதோ இஷ்யூன்னு எனக்கு அம்மா சொல்லி தெரியும்…ஆனா அவங்க உன் வீட்ல இருக்காங்கன்னு அகதன் ஷீட் அவ்ட் அன்னைக்கு நைட் என்னை மீட் பண்ணப்பதான் எனக்கு தெரியும்….

எது எப்படியோ அவங்க கண்டிஷன்ல அவங்களை அந்த நேரத்துல உன் அப்பா வீட்டை விட்டு கிளம்பி வெளிய போற மாதிரி செய்துடக் கூடாதுன்னுதான் அவங்களை அந்த டைம் கொஞ்சம் மிரட்ட வேண்டியதாகிட்டு….. ஏன்னா வருஷக் கணக்கா நான் மோசம்னு நம்பிட்டு இருக்கவங்கள என் கைல எந்த ஆதாரமும் இல்லாம என்னை நம்ப வைக்க முடியாது….

அதனால தான் உன் அப்பா அம்மான்னு எல்லோர் ஃபோன்லயும் அவ்ட் கோயிங் கட் செய்தோம்…..விஜிலா அண்ணி எதோ வகையில ப்ரச்சனைய யூகிச்சு ஹெல்ப் பண்ணனும்னு மீடியா விமன் லிப்னு எதுக்காது போயிடக் கூடாது இல்லையா… இன்ஃபேக்ட் வெட்டிங்குள்ள என் அம்மா இன்பா இப்டி யார்ட்டயாவது உனக்கு ஹெல்ப் செய்ய சொல்லி கேட்டா கூட நம்ம ப்ளான் ஃப்ளாப் ஆகிடும்….

அதனால உன் அப்பாட்ட வெளிய இருக்கிற போலீஸ் செக்யூரிடி பத்தி சொல்லி அவங்க மூலமா எந்த அவுட் கோயிங் கால்னாலும் செய்துக்கோங்க…..மனு என் நம்பர்ல இருந்து உங்கட்ட பேசுவா….கல்யாணம் வரைக்கும் உங்களுக்கு அவுட் கோயிங் வேண்டானு சொல்லி வச்சிறுந்தேன்…..

அதோட அண்ணி வீட்டை விட்டு வெளிய வந்தா அவங்களை சேஃபா திருப்பி அனுப்ப அங்க இருந்த என் ஆட்கள்ட்ட சொல்லி வச்சிறுந்தேன்….

இதுக்கிடையில் அப்பப்ப நீ என்ட்ட இருந்து தப்பிச்சு போக ட்ரைப் பண்ற மாதிரி சீன் க்ரியேட் செய்யனும்னு நான் யோசிச்சுகிட்டு இருந்தேன்…ஏன்னா கல்ப்ரிட் உன்ன வாட்ச் பண்ணுவான்றது என் எதிர்பார்ப்பு….

ஆனா நாம சொல்லாமலே அப்டி முயற்சி செய்தது அண்ணி….மாசிரன் ஆள் அதை கவனிச்சுட்டு இருந்தவன் மாசிரனை காண்டாக்ட் செய்தான்….. நாங்க மாசிரனை மானிடர் செய்துட்டு இருந்தோம்ல… அவன் விஜிலா அண்ணிக்கு ஹெல்ப் செய்ய சொல்லி ஆள் அனுப்பினான்….அப்பவே கன்ஃபார்மா கல்ப்ரிட் அவன்தான்னு தெரிஞ்சிட்டு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.