(Reading time: 13 - 26 minutes)

" பிரேம் .. நில்லு ... நில்லு பிரேம் " என்று அவள் கூக்குரலிட அந்த குரலை மனதிற்குள் பதித்து கொண்டு அவள் வீட்டில் இருந்து கிளம்பியே விட்டான் பிரேம் .. " இப்போதான் ஒன்னு முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா?" என்று சுபிக்காக நாம எல்லாரும் புலம்புறதுக்கு முன்னாடியே

" நீ எப்படியும் பேச மாட்டன்னு நம்பிக்கையில் ஆட்டோ கூப்ட்டுட்டேன் டீ .. ரொம்ப நேரம் வெயிட் பண்ணா மீட்டர் சூடாகிடும் ... அதான் ஓடிட்டேன்  ;) " என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் பிரேம் .. அதை அவன் பாவனையில் கற்பனை செய்து பார்த்தவள் , களுக்கென சிரித்தாள் .. இப்படிதாங்க அந்த மேஜிக் நடந்தது .. !

அன்றைய இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் முடிந்தது ... கதிரிடம் செல்ல சண்டைகள் போட்டுவிட்டு சந்தோஷமாய் உறங்கினாள்  அனு.. சந்துரு ஏன் இன்று நாள் முழுக்க பேசவில்லை என்ற குழப்பத்துடன் உறங்கினாள்  நந்து .. நாளை பிரசாந்தை சந்திக்க வேண்டும் , என்ற கோபத்துடன் உறங்க முயற்சித்தாள்  தீப்தி .. தீப்தி தங்களை  புரிந்து கொண்டாள்  என நிம்மதியாய் உறங்கினான் கவீன் .. தான் நினைத்த அளவிற்கு தனது வாழ்க்கை ஒன்று சிரமம் ஆகிவிட வில்லை என்ற களிப்பில் உறங்கினாள்  ஜெனி .. பிரேமும் சுபியும் குற்ற உணர்வின்றி படுத்த உடனேயே உறங்கி இருந்தனர் .. சந்துரு நந்துவை எண்ணிக்கொண்டே உறங்காமல் கிடந்தான் .. இவர்களுக்கு இடையில் வின்சண்ட் இடம் பேச வேண்டும் என்று தோன்றிய ஆவலை சமாளிக்க முடியாமல்  நடந்து கொண்டிருந்தாள் ஆரூ ..

" ஏன் என்னால முடியல .. அவனை மன்னிச்சுட்டேன் தான் .. ஆனா அனு  மாதிரி நான் ஏன் அவன்கிட்ட இயல்பாய் பேசல ? "

" மக்கு அனுவும்  நீயும் அவனுக்கு ஒண்ணா ? " அவள் உள்மனம் கேள்வி கேட்டது .. அவனிடம் பேச வேண்டும்  என்று தோன்றிட , போனை எடுத்தாள் .. இரவு மணி 11.30 . இந்த நேரத்துல பேசித்தான் ஆகணுமா ? கண்டிப்பா அவனை நாம காதலிக்கிறோம்ன்னு நினைபான் .. எதுக்கு ரிஸ்கு ?  வேணாம் .. என்று நினைத்தவள் சலிப்புடன் பேஸ்புக் வர , அவனிடம் பேசுவதற்கு அவளுக்கு காரணம் கிடைத்தது ! .. அந்த நேரத்தில் வின்சன்ட் ஆன்லைன்லின் இருக்க " மவனே நீ செத்த " என்று நினைத்தபடி போனை எடுத்தாள்  அவள் ..

" ஹெலோ  ஆரூ ... என்ன இந்த நேரத்துல ? ஏதும் பிரச்சனையா ?"

" நீ என்ன பார்ட் டைம் ஆ வாட்ச் மேன்  வேலை பார்க்குறியா ?"  . அவள் சம்பந்தம் இல்லாமல் இப்படி ஒரு கேள்வி கேட்கவும் " ஞெ " என்று முழித்தான் அவன் .. அதை அனுமானித்தவள்

" திருதிருன்னு முழிக்காத " என்றாள் ..

" என்னாச்சு ஆரூ ?"

" இந்த நேரத்துல பேஸ்புக் ல என்ன வேலை உனக்கு " என்றாள் .. " அப்படி வா டீ என் பட்டு குட்டி .. நீ மட்ட்டும் இந்த நேரத்துல என்ன பண்ணுறியாம் ? உன்கூட விளையாடி ரொம்ப நாள் ஆச்சுல .. விளையாடலாமா ?" என்று மனதிற்குள் சிரித்தவன்

" சும்மாதான் சேட்டிங்  " என்றான் ..

" இந்த நேரத்துல எவன் கூட பேசிட்டு இருக்க நீ ?" என்றாள்  அவள் ..

" எவன் இல்லம்மா எவ ன்னு கேளு " என்று எடுத்து கொடுத்தான் அவன் ..

" ஓஹோ .. இந்த நேரத்துல  எவ கூட கடலை போடுற நீ  ?"

" உன்கூடத்தான் "

" ஏய் "

" ஐ மீன் , இப்போ நாமதானே போன் ல பேசிட்டு இருக்கோம் "

" அது எனக்கும் தெரியும் .. என்கிட்ட பேசுற முன்னாடி யாருகிட்ட பேசின "

" அதுவா .. அது ஹேமா கூட" என்றான் வின்சண்ட் ..

" யாரு அது "

" ப்ரண்ட் .."

" உனக்கு பகல் நேரத்துல ப்ரண்ட்  கிட்ட பேச முடியாதா ?"

" இதென்ன டா வம்பா போச்சு . எப்போ தோணுதோ அப்போ கொஞ்சி பேசிக்க வேண்டியது தானே ?"

" கொ .....கொஞ்சி பேசிட்டு இருக்கியா ?" என்று பற்களை கடித்தாள்  ஆரூ ..

" ஆமா ஆரும்மா . நானும் எவ்வளவு நாளுதான் நல்லவனாகவே நடிப்பேன் "

" ஓஹோ "

" ஓஹோ தான் .. "

" சரி குட் நைட் "

" ஒ.. அவ்வளவு தானா ?"

" ஆமா "

" கோவமா இருக்கியா ஆரூ ?"

" நானா ? நான் எதுக்கு கோபப்படனும்  ?"

" அதானே நீஎதுக்கு கோபப்படனும் .. நான் யாருகூட பேசினாலும் நீ கண்டுக்க போறியா இல்ல கோபப்பட போறியா " என்று அவன் துள்ளலாய் கூற

" ம்ம்ம்ம் கொல்ல  போறேண்டா மவனே " என்று மனதிற்குள் கூறியவள்

" பாய் " என்று போனைவைத்தாள் ..

நாளை சமாதானபடுத்துகிறேன் என்ற பெயரில் அவளை சந்திக்கலாம் என்ற சந்தோஷத்தில் உறங்க சென்றான் வின்சென்ட் .. விடிந்ததும் எங்க எல்லாம் இடி இடிக்கிதுன்னு அது எபிசோட்ல பாப்போம் ..

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 29

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 31

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.