(Reading time: 27 - 54 minutes)

05. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 5

ந்த அறை விட்டு நகன்று போக ஆரம்பித்திருந்த பாலாஜியின் காதிலும் பொன்னி சொன்னது விழுந்திருக்க குதூகலித்துடன்

“சிக்கிட்டியா!!!”, என்று குதூகலத்துடன் முகம் முழுவதும் பல்லாக திரும்ப....

அங்கே பவதாரிணி கலங்கிப் போய் நின்றிருந்தார். அதைக் கவனித்த சங்கரி,

Puthir podum nenjam

“வாயை மூடு!”, அஞ்சனாவின் மீதிருந்த கோபத்தை அவனிடம் காட்டினார்.

அஞ்சனாவின் கண்களோ பவதாரிணியை விட்டு அகலவில்லை.  அவர் திட்டினால் கூட தாங்கி விடுவாள்.. அவர் வருந்தினால் உடைந்தே விடுவாள்.. அவர் முகத்தை பார்க்க திடமின்றி அவரிடம் ஓடிச் சென்று கட்டிக் கொண்டவள்.

“நல்லா இருப்பேன்னு விஷ் பண்ண தானே பாவா... அப்புறம் எப்படி எனக்கு ஏதாவது நடக்கும்?”,

“சோ... பர்த் டே அதுவுமா... நீங்க வருத்த பட்டு... இந்த பர்த் டே பேபியை வருத்த பட வைக்க  கூடாது....ப்ளீஸ் பாவா..”,

அந்த கெஞ்சலில் குரல் தேய்ந்திருக்க...

பவதாரிணியிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக.... அத்தனை நேரம் பட்டாம் பூச்சியாய் சுற்றி வந்தவளுக்கு அதுவரை இருந்த குதூகலமெல்லாம் காணாமல் போக. கண்கள் நொடிப் பொழுதில் கலங்கியது. இன்னும் அவரை கட்டிக் கொண்டே தன்னை விலக்காமல்,

“பேச மாட்டியா பாவா!”, ஏக்கத்துடன் கேட்டவளது குரல் தேய்ந்து.. கண்ணில் நீர் கோர்த்தது.

அவள் கெஞ்சலில் சங்கரி உருகி போனார்.

“அண்ணி விட்டா அழுதுடுவா போல.. பேசுங்க!”, என்று கவலையுடன் அவளுக்கு சிபாரிசு செய்ய ...

பவதாரணியே,

“ப்ச்ச்... விடு என்னை”,

You might also like - Barath and Rathi... A free English romantic series

என்று முகத்தை சுழித்த படி.. அவளை உதறி விடுவது போல தன்னிடமிருந்து விலக்க... அந்த செயலே... அவருக்கு கவலை போய் கோபம் தொற்றியிருப்பதை உணர்த்த...

‘இனி அஞ்சனா அசால்ட்டா சமாளிப்பா’, என்றவளுக்கு உள்ளுக்குள் இருந்த பதட்டம் போய் நிம்மதி பரவியது.

சற்று முன் குளம் கட்டிய கண்ணீர் போக வழியின்றி இமைச் சுவரை தாண்டி தளும்ப... அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல முகத்தில் மீண்டும் குறும்பு அரும்ப... அவர் தோளை பற்றி அவரை நோக்கி,

“இருபத்தியோரு வயதில் அடியெடுத்து வைத்த முதல் நாளே ஒரு உயிரை போராடி காப்பாத்தியிருக்கேன்! துணிச்சலான நீச்சல் வீராங்கனைக்கு  பாராட்டு  கிடையாதா பாவா...”,

என்று சொல்லிக் கொண்டே தன் கன்னத்தை காட்டிவளின் கண்களில் இருந்த ஈரம்  அவரின்  கொஞ்ச நஞ்ச கோபத்தையும் மறக்கடித்து விட்டது...

அப்பொழுது பாலாஜி,

“நல்லா கன்னத்தை காட்டுறா! இது தான் சான்ஸ்!!!! சும்ம்மா  காட்டு காட்டுன்னு காட்டுங்க”, என்று காட்டத்துடன் அவன் சொல்ல... இருவரும் அவனை முறைக்க..

சங்கரியும் தன் பங்கிற்கு அவனை முறைத்த படி,

“உனக்கென்ன இங்க வேலை! நல்ல நாள் அதுவுமா குளிக்காம சுத்திகிட்டு...”, என்று விரட்ட...

சும்மா இருப்பாளா? அஞ்சனா!

“போடா.. நீ அடிக்கிறதை கூட தாங்கிடுவேன்.. உன்  மேலே அடிக்கிற ‘கப்’ பை தாங்கவே முடியலை!”,

என்று தன் மூக்கை பிடித்த படி சொல்ல..

“கப் அடிக்குதா.. அடிக்கும் அடிக்கும்.. ஏன் சொல்ல மாட்டா!  பாஜின்னு மட்டும் சொல்லிட்டு என் பின்ன வந்தே.....!”,

என்று வாக்கியத்தை முடிக்காமல்... விரலால் மட்டும் பத்திரம் காட்டி, தன் கோபத்தை அடக்கியவனாய்  அங்கிருந்து விருட்டென்று செல்ல...

“பாஜி வேண்டாம்னா... பஜ்ஜின்னு சொல்லிட்டு வர்றேன்.. ஹூம்.. யாருகிட்ட? மானம், ரோசமெல்லாம் நம்ம பரம்பரைக்கே கிடையாதுல்ல!”,

அவன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்ட போதிலும் வாயை மூடாமல் இவள் பீற்றிக் கொண்டிருந்த...

அவள் காதைப் பிடித்து திருகிய பவதாரிணி அவளைப் பார்த்து,

“வாய் பேசாமா... மொதல்ல சொல்றதை கேட்டு பழகு!“, என்று கண்டிப்புடன் சொல்ல...

“கேட்கிறது வந்தா தானே... கேட்டு பழக ஆசை வரும் ?”, என்று விழிகளை பெரிதாக விரித்த படி... அவர் பக்கமாக தன் கன்னத்தை காட்ட...

“எதுன்னாலும் விளையாட்டா போச்சு உனக்கு...”, செல்லமாய் கோபித்த பவதாரிணி அவள் கன்னத்தில் முத்தமிட...

இந்த காட்சியை  கண்டு புன்னகைத்த படியே அவர்களை கடந்து சென்ற சங்கரியை கைப்பற்றி நிறுத்திய அஞ்சனா,

“இந்த பக்கம் என் மாமியார் கவனிக்கணும்.....”, என்று அவர் முகத்தருகே சென்று தன் மறு கன்னத்தை காட்ட..

அப்பொழுது...

“பாப்பூ...”, என்று வரவேற்பரையில் இருந்த  சிவகிரியின்  குரல் கேட்க....

அவள் சங்கரியிடம்,

“சீக்கிரம் டெலிவர் பண்ணுங்க! மாமா பார்த்தார்ன்னா காப்பி ரைட் மீறல்ன்னு  பிரச்சனையை  கிளப்புவார்!”, என்று சொல்லி கண்ணடிக்க..

“வாயாடி!”, என்று சிரித்துக் கொண்டே அவள் கேட்ட ‘பாராட்டை’ கொடுத்தார்..

‘அய்யோ... லேடீஸ்சை சமாதான படுத்தியாச்சு.. நம்ம வீட்டு ஜென்ட்ஸ்ஸ அப்படி இப்படி சமாளிச்சிடலாம்.. ஆனா, நம்ம குடு குடு க்ரானி... தங்கா ஆச்சியை கரக்ட் பண்றது கஷ்டமாச்சே’, யோசித்த படியே மாமனை பார்க்கச் சென்றாள்...

ந்தவளை, எதுவும் பேசாமல் வாசல் புறம் அழைத்துச் சென்ற சிவகிரியின் முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை.

அங்கே ஒரு தம்பதியர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தையை தான் அஞ்சனா காப்பாற்றி இருந்தாள்.

குழந்தையை வெள்ளத்தோடு போராடி கரை சேர்த்த அஞ்சனா நீச்சலோடு லைஃப் கார்ட் பயிற்சியையும் கற்று தேர்ந்திருந்ததால், அந்த சிறுமியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு சிரமப் படவில்லை. சுயநினைவிற்கு வந்த அந்த குழந்தை முகவரியை தெளிவாக சொல்லாமல்,

“அம்மன் கோவில் பக்கம்”, என்று திணறலோடு சொன்னதும், சட்டென்று பொறி தட்டியது சிபிக்கு...

“க்கா அது நம்ம எஸ்டேட்ல வேலை பார்க்கிறவங்க இருக்கிற ஏரியா. போற வழியில் நம்ம எஸ்டேட் மேனேஜரையே இந்த பாப்பாவோட வீட்டை விசாரிச்சு விட்டுட சொல்லலாம்”, என்று யோசனை சொல்ல அஞ்சனாவிற்கும் அதுவே சரியெனப் பட்டது..

தாமதம் ஆக ஆக வீட்டில் தேடுவார்களே என்ற பயமும் அஞ்சுவின் மனதை அப்போது ஆக்கிரமிக்க... அந்த மானேஜரிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினர்.

திட்டமிட்டது போல பாலாஜியிடம் மாட்டி கொள்ளாதவாறு  சிபி தன் நண்பன் வீட்டிற்கு ஓடி விட.... இவளின் பால்கனி பிரவேசம் நிகழ்ந்து..

எப்பொழுதும் நாம் தீட்டும் திட்டங்கள் எல்லாமே சரியாக நடந்து விடுமா, என்ன? குழந்தையை காப்பாற்றப் போய் இவள் மாட்டிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.