(Reading time: 21 - 42 minutes)

16. கிருஷ்ண சகி - மீரா ராம்

ருணதியின் பார்வை மகத்தையும், அவள் கைகளில் வைத்திருந்த தாலியினையும் மட்டுமே பார்த்திருந்தது…

“இப்போ என்ன செய்ய?...” என்ற பாவனையுடன் அவள் நிற்க,

மகத், அவளது பார்வைக்கு பதில் சொல்லாது, அவன் தனது செல்போனை எடுத்து எண்களை அழுத்தினான்…

krishna saki

“ஹேய்… மகி… எப்படி இருக்குற?... நானே உனக்கு போன் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேண்டா… அதுக்குள்ள நீயே பண்ணிட்ட…”

“ஒரு முக்கியமான விஷயம்டா… உன் உதவி கொஞ்சம் வேணும்… பிரபு…”

“என்னடா என்ன விஷயம்… சொல்லு… உன் குரலே ஒருமாதிரி இருக்கு… என்ன பிரச்சினைடா…” என பிரபு கேட்டதும், மகத் துருவனோடு சேர்த்து நதிகாவும் காணவில்லை என்ற தகவலை எடுத்து சொல்லிவிட்டு,

“நீ இப்போ எங்க இருக்குறடா…” என கேட்க

“மகி… சாரிடா… நான் இப்போ திருச்சியில இல்லை… நேத்து நைட் தான் நான் இங்க இருந்து சென்னைக்கு கிளம்பினேன்… என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க…”

“ஓ… சரிடா… நான் பார்த்துக்கறேன்… உன்னை தொந்தரவு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்… சாரி…”

“டேய்… நீ இன்னும் திருந்தவே இல்லையா… தொந்தரவும் இல்லை ஒரு மண்ணும் இல்லை… குழந்தைங்களை சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்…” என்றவன் “ஒரு நிமிஷம் இருடா… நானே கூப்பிடுறேன்…” என சொல்லிவிட்டு மகத் அழைப்பை துண்டித்தான்…

பிரபு சொன்னது போலவே அடுத்த சில நிமிடத்திலேயே அவனும் மகத் எண்ணிற்கு போன் செய்தான்…

“சொல்லு பிரபு…”

You might also like - Ithanai naalai engirunthai... A family oriented romantic story...

“மகி… நான் என் ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டேன்… அவங்கிட்ட உன் நம்பரும் குடுத்துட்டேன்… அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கால் பண்ணுவான்… அவன் உனக்கு ஹெல்ப் பண்ணுவாண்டா…”

“சரி பிரபு… தேங்க்ஸ்டா… குழந்தைங்க விஷயம்… வெளிய யாருக்கும் தெரிஞ்சதுன்னா அவங்க எதும் பிரச்சினை பண்ண வாய்ப்பிருக்குடா…”

“நீ என்னை நம்புறல்ல… நான் வேற அவன் வேற இல்லடா… அவன் இதே மாதிரி நிறைய கேஸ் டீல் பண்ணிருக்கான்… இதுல அவன் எக்ஸ்பெர்ட் கூட…”

“ஹ்ம்ம்… சரிடா பிரபு… அவர் பேரு என்ன?...”

“டேய்… அவனுக்கும் நம்ம வயசு தான்… அதனால நீ அவனை என்னை கூப்பிடுற மாதிரியே கூப்பிடலாம்… அவன் பேரு விஜய்…”

“சரிடா…” என மகத் சொல்லிமுடிக்கவும், அவனுக்கு இன்னொரு போன் வரவும் சரியாக இருந்தது…

“பிரபு, விஜய் தான் கால் பண்ணுறார்னு நினைக்கிறேன்… நான் பேசிட்டு உனக்கு தகவல் சொல்லுறேண்டா… வச்சிடுறேன்…” என அவசரம் அவசரமாக பிரபுவின் அழைப்பை கட் செய்துவிட்டு, அந்த புது எண்ணின் அழைப்பை ஏற்றான் மகத்…

“ஹலோ… நான் விஜய்… நீங்க டாக்டர் மகத்ரு?...”

“யெஸ்… பிரபு உங்ககிட்ட பேசினேன்னு சொன்னான்…”

”கவலைப்படாதீங்க டாக்டர் மகத்… பிரபு எல்லாம் சொன்னான்… நீங்க இப்போ எங்க இருக்குறீங்க?...”

“அருள் இல்லம்…”

“சரி… இப்போ நீங்க இங்கயோ, இல்ல நான் அங்கயோ வந்தா அவங்களுக்கு நாமளே க்ளூ கொடுத்த மாதிரி ஆகிடும்… அதனால போன்-ல மட்டும் பேசிக்கலாம்…”

“சரி விஜய்…”

“மகத் உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?...”

“சந்தேகம்….” என்று யோசித்தவனுக்கு சட்டென்று கன்யாவின் நினைவே வந்தது… எனினும் அவள் இப்படி செய்திருப்பாளா என்ற எண்ணமும் உடன் உதிக்க, அவன் இல்லை என்றான் விஜய்யிடம்…

“ஓகே… மகத்… போன் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?...”

“ஒரு அரை மணி நேரம் இருக்கும்…”

“அடுத்து அவங்க போன் பண்ணினதும் எனக்கு தகவல் கொடுங்க… பணம் பறிக்கத்தான் இப்படி எல்லாம் கடத்தி வச்சு மிரட்டுவாங்க… யூ டோன்ட் வொர்ரி… நான் பார்த்துக்கறேன்…”

“தேங்க்யூ விஜய்… போன் வந்ததும் உடனே உங்களுக்கு தெரியப்படுத்துறேன்…” என சொல்லிவிட்டு போனை அவன் வைத்து முடித்ததும்,

“என்னாச்சு?... துருவ் பத்தி எதாவது தெரிஞ்சதா?...”

“சீக்கிரம் தெரிஞ்சிடும்… நீ தைரியமா இரு…”

“நதிகா… நதிகா எங்க?...”

“தெரியலை… ருணதி… அவ எங்கன்னு தெரியலை…”

“என்ன சொல்லுறீங்க?... நதிகா எங்க போனா?... ஒருவேளை அவங்க தான் நதிகாவையும்…”

“இருக்கலாம்… ஆனா உறுதியா தெரியலை ருணதி… அடுத்த போன் வந்தா தான் தெரியும்…”

“அப்போ இவ்வளவு நேரம் யார்கிட்ட போனில் பேசினீங்க?...”

“அது… என்னோட பிரெண்ட்… நீ கவலைப்படாம இரு… நான் வெளியே தேடிப்பார்த்துட்டு வரேன்…” என்றவன் சட்டென்று காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்…

டேய்… என்ன ஆச்சு… எதும் தகவல் வந்துச்சா?...”

“இல்லடா மச்சான்… இன்னும் எதுவும் வரலை…”

“என்னடா இது… இப்படி கடத்திட்டு வந்து போனும் செஞ்சு மிரட்டியாச்சு… அடுத்து என்ன செய்யணும்னு மேற்கொண்டு தகவல் வந்தாதானே நாம அந்த ருணதிக்கு போன் செய்ய முடியும்?...”

“அதுவும் சரிதாண்டா மச்சான்… ஆனா நமக்கு வர வேண்டிய போன் வரலையே… இப்போ அதுதானே பிரச்சினை…”

“சே… கடுப்பா இருக்குடா…” என கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் பேசிக்கொண்டிருந்த போது,

“துருவ்… எழுந்திரு… துருவ்… இங்க பாரு…” என நதிகா அவனை எழுப்பிக்கொண்டிருந்தாள்…

“டேய்… உள்ள அந்த பொண்ணு முழிச்சிட்டா போல… நீ போய் பாரு…” என ஒருவன் சொல்ல,

“ஆமாடா… அந்த பையனை கடத்தும்போது இந்த பொண்ணு வேற பார்த்து தொலைஞ்சுட்டா… அதனால இவளையும் சேர்த்து கடத்த வேண்டியதா போச்சு… நல்ல வேளை நாம முகமூடி போட்டிருக்குறதால நம்மளை இவங்க அடையாளம் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை…”

“டேய்… நீ அப்படி வேற நினைக்குறீயா?... குழந்தைங்க ரொம்ப ஷார்ப்டா… கொஞ்சம் அசந்தா இந்த காலத்து குழந்தைங்க விட்டா நம்மளையே கடத்திடும்… அந்த அளவுக்கு புத்திசாலிங்க…” என சொல்லிக்கொண்டிருந்த போது, ஒருவனின் செல்போன் சத்தம் எழுப்பியது….

“சொல்லுங்க பாஸ்… அடுத்து என்ன செய்யணும்?... உங்க போனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம்…”

மறுமுனையில் என்ன பதில் வந்ததோ, போன் பேசிக்கொண்டிருந்தவன் முகத்தை தொங்கபோட்டபடி அமைதியானன்..

“டேய்… என்னடா… என்ன ஆச்சு?...”

“பாஸ்… குழந்தைங்களை அங்க திருப்பி கொண்டு விட சொல்லுறார்…”

“என்ன?....” என கேட்டவன் அதிர்ச்சியாகி, “இவனுக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு… கடத்த சொல்லுவானாம்… இப்போ வேண்டாம்னு விட சொல்லுவானாம்… சே… ரிஸ்க் எடுத்த நமக்குள்ள தெரியும் அதோட வேல்யூ…”

“சரிடா… விடு… அவர் சொல்லித்தான கடத்தினோம்… இப்போ அவரே வேண்டாம்னு சொல்லுறார்னா, அவர் வேற எதுவோ ப்ளான் போடுறார்னு நினைக்கிறேன்…”

“என்ன மண்ணாங்கட்டி ப்ளானோ?...” என திட்டியவன்,

“சரி…வா…” என்று மற்றொருவனையும் அழைத்துக்கொண்டு குழந்தைங்களுக்கு பாலில் மயக்கம் மருந்து கொடுத்து குடிக்க வைத்துவிட்டு, அவர்களை யாருக்கும் தெரியாத வண்ணம் அருள் இல்லத்திற்கு அருகில் உள்ள தெருவில் ஒரு ஓரமாய் கிடத்திவிட்டு சென்றுவிட்டனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.