(Reading time: 20 - 39 minutes)

23. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

விடவே மாட்டேன் என்பதுபோல ஷக்தியை  இறுக அணைத்து  அண்ணார்ந்து அவனை பார்த்தாள்  சங்கமித்ரா .. களைந்து கூந்தலும் , காதல் ததும்பிய முகமுமாய் அதிகாலை பனித்துளி இலை மீது வரையும் ஓவியம் போல மிளிர்ந்தவள் பார்த்து தடுமாறித்தான் போனான் அவன் ..

" உனக்கு இந்த விஷ பரிட்ச்சை தேவையா ஷக்தி ? இவ மேல கோபப்பட்டா பின்விளைவுகள் உனக்குத்தான் ஆபத்துன்னு உனக்கு தெரியாதா டா ? ராட்சஸி எப்படி லுக்கு விடுறா பாரு " என்று தன்னைத்தானே பேசிகொண்டான் ஷக்தி .. ம்ஹ்ம்ம் இதற்குமேல் இவளது அருகாமையில் இருப்பது மிகவும் கஷ்டம் என்றே உணர்ந்தவன்,

" ஹே அத்தை பொண்ணு , உன்னை மன்னிச்சுட்டேன் .. வா உள்ளே போலாம் " என்றான் .. அவன் " அத்தை பொண்ணு " என்று அழைத்ததுமே அவளது முகத்தில் சந்தோசம் கொப்பளித்தது ..

Ithanai naalai engirunthai

" ஹும்கும் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல மாமா ?" என்றவள் எம்பி அவன் கன்னத்தில் சட்டென முத்தமிட்டு ஒன்று தெரியாதது போல முகத்தை மாற்றி கொண்டு , " உன்னை யாருடா இப்படி நாடு ராத்தியில வண்டிய கெளப்பி கொண்டு வர சொன்னா " என்று விசாரணையை ஆரம்பித்து வைத்தாள்  நம்ம லாயரம்மா !

" அடிப்பாவி , என் கோபத்தை போக வெச்சுட்டு இப்போ நீ கோபமாய் பேசுறியாக்கும்  சரியான கேடி " என்று அவளது குரும்பை மனதிற்குள் ரசித்தாய் ..

" சொல்லு உன்னத்தான் கேக்குறேன் .. அர்த்த ராத்திரி ல இவ்வளவு வேகமாய்  வண்டி ஒட்டி இருக்க நீ ? சாப்பிடவும் இல்ல தானே ? என்ன நெனச்சுகிட்டு இருக்க நீ ?" என்று கோபமாய் அவள் கேட்க ஷக்தி அசையாமல் நின்றான் ..சிறிது நேரம் அவனை முறைத்து விட்டு , பிறகு நெற்றியில் சலிப்பாய் அடித்து கொண்டாள்  மித்ரா ..

" வேஸ்ட்  மாமா நீ ... உனக்கு கோபம் வந்தப்போ , நான் உன்னை எவ்வளவு அழகாய் சமாதானம் பண்ணினேன் .. ஆனா நீயும் தான் இருக்கியே ..ச்ச வேஸ்டுடா" எனவும் "அடிங்க்  " என்றபடி ஷக்தி அவளை துரத்த , அவன் கையில் சிக்காமல் ஓடுகிறேன் என்ற பெயரில் அன்பெழிலன்  காவியதர்ஷினி , இருவரையும் கிள்ளி  எழுப்பி விட்டாள்  சங்கமித்ரா ..

" ஹே குரங்கே, ஏன் டீ கிள்ளி  வெச்ச ? இரு உன் மாமா வரட்டும் உன்ன பத்தி போட்டு கொடுக்குறேன் " -எழில் ..

" என்னப்பா இங்க சத்தம் ?"

" ஹே ஷக்தி " காவியா எழில் இருவரும் கோரசை  அவனை வரவேற்றனர் ..

You might also like - Oru kootu kiligal... A family drama...

" நானேதான் "

" என்ன ஷக்தி இப்படி பயமுறுத்திட்டிங்களே  ? மித்ரா எங்களை தூங்க விடல " என்றாள்  காவியா சோர்வாய் ...

" ஆமா ஆமா , நாம உள்ள ஓடி வரும்போது கூட எப்படி கொட்ட கொட்ட முழிச்சு இருந்தாங்க பார்த்தியா மாமா ?"

" ஓடி வந்திங்களா ஏன் ?" என்றான் அன்பெழிலன் இன்னும் கலையாத தூக்கத்தில் ..

" அதுவா , ஓடி போயி கல்யாணம் பண்ணுற சான்ஸ் தான் கிடைக்கல ..அதான் கல்யாணம் பண்ணி ஓடிரலாமான்னு பார்த்தோம் "

" ஐயோ முருகா , இவ போடுற மொக்கைய கேட்குறதுக்கு நான் தூக்குல தொங்கிறலாம் "

" அவ்வளோ தானே நண்பா ? நானே என் கேசுக்கு கைதி தேவை படும்போது உன்னை போட்டு கொடுத்து தண்டனையும் வாங்கி  தரேன் ..கவலைய விடு" என்றபடி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்  சங்கமித்ரா .. அடுத்த அந்து நிமிடத்தில் , சுட சுட தோசையுடன் ஷக்தியின்  அருகில் அமர்ந்து ஊட்டி விட எத்தனித்தாள் ..

" அஹெம் அஹெம் , நாங்களும் இங்கதான் இருக்கோம் "

" ஹே தோச மாவு இன்னமும் இருக்கு , போயி சாப்பிடு காவியா " என்றாள்  மித்ரா ..

" காவியா என்னை கொலை கேசுல மாட்டிவிடுறேன்னு சொல்லி, இவளே கொலை முயற்சி பண்ணுறா பாரேன் .. இரு நான் செல்போன் ல சாட்சி எடுத்துக்குறேன் " என்றபடி ஷக்திக்கு மித்ரா ஊட்டி விடுவதை படம் எடுத்து கொண்டான்  அன்பெழிலன் ..

" ஹே எங்க ஜோடி பொருத்தம் செம்மையா இருக்கு , ஒரு போட்டோ எடுத்துகுறேன்னு சொன்னா முடியாதுன்னா சொல்ல போறேன் ? இதுக்கு போயி ஏன் சாட்சி அது இதுன்னு பொய் சொல்லுற " என்று சிரித்தாள் சங்கமித்ரா .. அவனுடன் வழக்காடி கொண்டு இருந்தாலும் , பொறுமையாய் பார்த்து பார்த்து தனக்கு உணவூட்டிய மனைவியை ஆசையாய் பார்த்தான் ஷக்தி ..

" எனக்கு பசின்னு எப்படி தெரியுமாம் ? இப்போதான் சமைத்தாளோ  ? சின்ன பொண்ணுன்னு பார்த்த , பெரிய வேலை பார்க்குறா " என சிலாகித்து கொண்டான் .. (அஹெம் அஹெம் ஷக்தி சார் , தோசை ஊத்தி வைக்கிறது எல்லாம்  ஒரு பெரிய வேலையா ? முடியல போங்க )

" தேங்க்ஸ் காவியா " என்றான் ஷக்தி..இருவரும் புரியாமல் அவனை பார்க்க , மித்ரா அவனது பசியை தீர்ப்பது மட்டுமே தனது கடமை என்பது போல கண்டுகொள்ளாமல் இருந்தாள் ..

" எதுக்கு ஷக்தி தேங்க்ஸ் எல்லாம் ?"

" இல்ல மிதுவை பார்த்துகிட்டதுக்கு .. "

" டேய் ஷக்தி, சின்ன வயசுல இருந்து இந்த லூசை சமாளிக்கிரேனே , எனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும் தோணிச்சா உனக்கு ?"

" அது உன் கடமை அன்பு "

" அதானே , என்னை வார மட்டும் உங்களுக்கு நல்லா வாய் வருமே "

" ஹ்ம்ம் .. சரி நாங்க காலைல ஊருக்கு கெளம்பறோம் " என்றான் ஷக்தி  மித்ராவை பார்த்தப்படி .. ஏற்கனவே அவன் திடீர் வருகையை பற்றி கேள்வி கேட்க இருந்தும் மறந்தவளாய் இருந்தவள் இப்போது சரியென தலையாட்ட , அவனுக்குள் இதமாய் ஓர் உணர்வு பரவியது .. எழில்தான் மானசீகமாய் தலையில் அடித்து கொண்டான் .. " லூசு லூசு .. வெள்ளை காக்கா பறக்குதுன்னு இவன் சொன்ன கூட ஆமா மாமா ன்னு சொல்லுவா போல .. எவ்வளவு வேலை இருக்கு .அதெல்லாம் விட்டுட்டு ஊருக்கு போறாளாம் ..வேற வழி இல்லை அன்பு ..நீதான் டா வாய திறக்கனும் " என்று மனதிற்குள் பேசியவன் ,

" அதெப்படி ஷக்தி முடியும் ? இனியா இருக்காளே , அவ அப்பாகிட்ட தானே  மித்ரா ஜூனியரா ஜாய்ன்  பண்ண போறா .. இன்னும் ஒரு வாரத்துல அவளை கூட்டிடு வர்றதா நானே அங்கிள் கிட்ட சொல்லி இருக்கேன் "

" மிதுவுடைய ரிசால்ட்டே இன்னும் வரலியே அன்பு .. இப்போதானே காலேஜ் முடிஞ்சது .. கொஞ்சம் ப்ரேக் எடுக்கட்டும் .. " என்றான் ஷக்தி மனதிற்குள் அவளை பிரிந்து இருப்பது கடினம் என்ற காரணத்தை மறைத்தபடி .. எழில்  மித்ராவை பார்க்க , அவளோ இயல்பாய் இருந்தாள் .

" என்ன மித்ரா , நீ அடுத்து என்ன பண்ண போறன்னு ஷக்திகிட்ட டிஸ்கஸ் பண்ணலையா ? நீ பாட்டுக்கு அங்கிள் கிட்ட வரேன்னு சொன்னியே " என்று கோபமாய் கேட்பது போல நாடகம் ஆடினான் எழில் .. அவளோ

" அங்கிள் நான் சொன்னா புரிஞ்சுப்பார் நண்பா " என்றாள் ..

" பிசாசு , இப்படி சொதப்பறா  ! " என்று பற்களை கடித்தவன் ஒரு பெருமூச்சுடன்

" சரி ரெண்டு பேரும்  போயி தூங்குங்க , காலைல பேசிக்கலாம் " என்றான் ..ஷக்திக்குமே பயணக்களைப்பாய் இருக்க , மித்ராவின் அறையில் உறங்கிபோனான் .. சிறிது நேரம்  காத்திருந்த எழில் , மித்ராவை போனில் அழைத்து மாடிக்கு வரும்படி கட்டளையிட்டான் ..

" சொல்லுடா கரடி "

" அடி வாங்க போற நீ "

" ஹீ ஹீ ஏன் கோவம் நண்பா ?"

" மித்ரா எவ்வளவு கஷ்டபட்டு கடை திறக்குற வேலை எல்லாம் போயிட்டு இருக்கு .. நீ பாட்டுக்கு நாளைக்கு கெளம்பறேன்னு  சொல்லுற ?"

" ப்பா ... இதுக்குதான் இவ்வளவு கோபமா ?"

" இது உனக்கு சின்ன விஷயமா?"

" இல்லைதான் அதுக்காக என்னை என்ன பண்ண சொல்லுற ? ஷக்தியே , என்னோடு வான்னு சொல்லும்போது அதை என்னால மறுத்து பேச முடியாது "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.