(Reading time: 20 - 39 minutes)

" வ்வளவு அக்கறை உள்ளவர் எனக்கொரு போன் கூட பண்ணல .. நானாக பேசினாலும் அவாய்ட்  பண்ணுறிங்க  .. என்னை ஹர்ட் பண்ணிட்டு , என் மேல இப்போ அக்கறையை காட்ட வேணாம் கதிர் .. எனக்கு அது வேண்டவே வேணாம் .. குணாவை நேரடியா சமாளிக்கனும்ன்னு எனக்கு அறிவுரை சொன்னதே நீங்கதான் ... என்னை நான் பார்த்துக்குறேன் .. உங்களை நீங்க பார்த்துகோங்க "

" இப்போ நீ என்ன சொல்ல வர ? ஏன் இவ்வளவு சின்ன விஷயத்தை பெருசு பண்ணுற ? ஏதோ கொஞ்சம் பிசி ஆகிட்டேன் .. அதனால பேச முடியல ... அதுக்காக ஏன் சண்டை போடுற ?"

" ஓ .. சோ நமக்குள்ள எல்லாம் சரியா இருக்கு ? எந்த பிரச்சனையும் இல்ல .. எவரிதிங் இஸ்  நார்மல் அப்படிதானே ? ஓகே கதிர் .. நீங்களே  அப்படி சொன்னதுக்கு அப்பறம் நான் மட்டும் ஏன் சண்டை போட போறேன் .. நாம ப்ரண்ட்ஸ்  ஓகேயா ? இப்போ நான் போயி என் வேலையை பார்க்குறேன் .. நானும் இன்னைக்கு தான் வேலையை ஸ்டார்ட் பண்ணுறேன் .. சோ பிசியாவே இருப்பேன் .. அதனால நாம பேசமுடியாமல் கூட போகலாம் .. ஏதோ நானே உங்களை அவாய்ட்  பண்ணுற மாதிரி பீல் ஆகலாம் .. பட் நீங்களும் தப்பா எடுத்துக்காதிங்க ..சரியா கதிர் ?" கோபத்துடன் போலியாய் சிரித்துவிட்டு , அந்த அறையில் இருந்து விடுவிடுவென நடந்தாள்  காவியதர்ஷினி ..

தென்றல் போல நுழைந்தவள் , புயலாய் புறப்பட்டு போனாள் .. அவளது கோபத்தின் அளவு அவனுக்கு தெரியாமல் இல்லை .. தான் விலகி போவதை புரிந்து கொள்ள முடியாத அளவு அவள் வெகுளி இல்லை என்பதை தெரிந்தே வைத்திருந்தான் கதிர் .. ஆனால் , அதை சரிபடுத்தி கொள்ளத்தான் அவனுக்கு தெரியவில்லை .. ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் தனது இருக்கையில் அமர்ந்தான் .. சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு வேலையில்  மூழ்கியும் போனான் ..

You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!

ந்தையின் மடியில் படுத்து கொண்டே நாளிதழ் படித்து கொண்டிருந்தாள் தேன்நிலா .. " அப்பா , இந்த பக்கம் நான் இன்னும் படிச்சு முடிக்கல .. திருப்பாதிங்க " என்று அவள் அதட்டவும்

" சரிம்மா " என்றபடி அவளுக்கு வாட்டமாய்  நாளிதழை தூக்கி பிடித்தார் மனோ ..

" ம்ம்ம் அப்படியே பாப்பாவை மடியில உட்கார வெச்சுகோங்க " என்று குரல் கொடுத்தார் பாக்யம் ..

" ஏன்பா, உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது ?"

" ஏன்மா கேக்குற ?"

" சும்மா சொல்லுங்களேன் .. "

மனைவியின் கூர்மையான பார்வையை பார்த்தபடியே மகளிடம் குனிந்து " அதெல்லாம் நியாபகம் இல்ல பேபி .. எதுக்கு இப்படி கோர்த்து விடுற ?" என்று ரகசியமாய் கெஞ்சினார் தந்தை .. அதை கேட்டு களுக்கென சிரித்தவள்

": ஓஹோ , இத்தனை வருஷம் ஆகியும் கூட அம்மாவுக்கு உங்க மேல பொசசிவ்னஸ்  குறையல பார்த்திங்களா அப்பா ? நான் உங்க மடியில் படுத்து இருக்குறது பார்த்து அவங்க பொறமை படுறாங்க .. லைட்டா கருகுற ஸ்மெல்  வருது பாருங்க " என்றாள் ..

" அடபோடி .. என் புருஷன் கிட்ட நான் உரிமை பாராட்டுறேன் ..உனக்கென்ன ? ஏன் மாப்பிளைகிட்ட நீயும் அப்படித்தான் இருப்ப " என்றார் பாக்கியம்.. உடனே முகத்தில் லேசாய் சலிப்பு பரவ

" ஆமா அப்படியே பொறாமை பட்டுட்டாலும் " என்று முனகினாள் தேன்நிலா ..

" நிலாகுட்டி " என்று மகளை மெல்ல அழைத்தார்  அவள் தந்தை.. அவரது முகத்தை அண்ணார்ந்து பார்த்தாள்  நிலா ..

" என்னப்பா ?"

" என்னவோ சரி இல்லையே டா "

" என்ன சரி இல்லை "

" எப்பவும் துருதுருன்னு இருப்ப.. போன் ல மாத்திகிட்ட பேசுவ .. ரெண்டு நாளாய் அவர் கிட்ட நீ பேசுறது இல்லையோ "

" ஐயோ அப்பா சத்தம் போட்டு பேசாதிங்க .. அப்பறம் அம்மா வேற அறிவுரை சொல்லுறேன்னு ப்ளேடு போடுவாங்க "

" ஹா ஹா .. சரி மாப்பிளை கூட என்ன சண்டை "

" சண்டை எல்லாம் ஒண்ணுமில்ல .. ஊடல் "

" அடடே .. அந்த அளவுக்கு என் பொண்ணு பெரிய பொண்ணா  ஆகிட்டாளா  ? அப்போ சீக்கிரமா கல்யாணத்தை நடத்திற வேண்டியதுதான் .. "

" அட போங்கப்பா .. அவ்வளவு சீக்கிரம் என்னை மதுகிட்ட மாட்டி விடலாம்னு பார்க்காதிங்க  "

" ஆமா மாமா , நான் இன்னும் கொஞ்ச நாள் சுதந்திரமா இருக்கேனே " என்று சிரித்தபடியே உள்ளே வந்தான் மதியழகன் .. " நெனச்சேன் செல்போன் ஆப் பண்ணதுமே வந்து நிப்பான்னு " என்று மனதிற்குள் உரைத்தவள் சட்டென மாடிக்கு ஓடினாள் ..

" நிலா இறங்கி வா " என்று அவள் தயார் அதட்டவும், "அட விடுங்க அத்தை .. அவ என்னைக்கு இறங்கி வந்திருக்கா ? நானே பார்த்துக்குறேன் " என்று சிரித்தான் மதியழகன் .. ஆனால் உடனே சமாதானம் படுத்த போகாமல் அத்தை மாமா இருவரிடமும் பெசிகொண்டிருந்தான் மதியழகன் ..

" லூசு ... மக்கு .. சரியான மக்கு .. காதலை சொல்லத்தான் லேட் பண்ணான் .. இப்போ சமாதானம் பண்ணுறதுக்கு கூட லேட் பண்ணுறான் .. இவனை .......... இன்னைக்கு வரட்டும் " என்று பற்களை கடித்து கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தாள் ..

துவுமே நடக்காததுபோல அழுத்தமான காலடிகளோடு அவளை தேடி வந்தான் மதி ..

" ஹே குட்டிமா இங்க தான் இருக்கிங்களா ?" என்று கொஞ்சவும் செய்தான் ..

".."

" பாருடா .. மேடம் பேச மாட்டாங்களா ?"

" .. "

" சரி பேசலைன்னா பரவாயில்ல " என்றவன் அவள் எதிர்பாராத நேரம் அவளது மடியில் சாய்ந்து கொண்டான் ..

" ஹே என்ன பண்ணுற நீ ? எழுந்திரி ?" என்று திருவாய் மொழிந்தாள்  நிலா ..

" அதெல்லாம் முடியாது "

" உன்மேல கொலை வெறியில இருக்கேன் மது ..எழுந்திரி "

" நீ மட்டும் உங்க அப்பா மடியில படுத்துக்கலாம் .. நான் யாரு மடியில படுப்பேன் " என்று சோகமாய் கேட்டான் அவன் .. லேசாய் மனம் அசைந்தாலும்

" அதெல்லாம் அம்மு பாட்டி மடியில படுக்கலாம் .. சும்மா சாக்கு போக்கு சொல்லி என் மனச மாத்தலாம் பார்காதே ..எழுந்திரி " என்று அவனை உலுக்கினாள் நிலா ..

" பச்ச் .. கொஞ்ச நேரம் எதுவும் சொல்லாத குட்டிமா .. எனக்கு நிஜம்மாவே ஒரு ஆறுதல் வேணும் .. ப்ளீஸ் உன் மடியில படுத்துக்குறேன்  டா " என்றான் மதி ஆழ்ந்த குரலில் .. என்னதான் அவன் மீது கோபமாய் இருந்தாலும் அதை காட்டுவதற்காக நேரம் இதில்லை என்று தோன்றியதால்  அவன் கேசத்தை விரல்களால் அளந்தாள்  தேன்நிலா .. அவன் முகத்தை பார்க்க , பார்க்க கோபம் எங்கோ மறைவது போல தோன்றியது .. அவன் கன்னத்தோடு கன்னம் இழைத்து கண் மூடி கொண்டாள்  அவள் ..

" என்னாச்சு மது ?" என்றாள்  மென்மையாய் ..

" நீ ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டுற  ? நாம திரும்பி வந்ததுல இருந்தே " என்று குறை பட்டு கொண்டான் மதியழகன் .. லேசாய் அவன் கன்னத்தை கிள்ளி  வைத்தாள்  அவள் ..

" ஸ்ஸ்ஸ்  ஆஅ .. வலிக்கிறது டீ "

" நல்லா வலிக்கட்டும் .. ராஸ்கல் .. நான் சொல்ல வேண்டியதை நீ சொல்லுறியா ? சார் தான் வந்ததுமே வேலைக்கு போனிங்க , உங்க தங்கச்சிக்கு உதவி பண்ண போனிங்க .. என்கிட்டே சரியா பேசவே இல்ல .. அதான் நானும் கண்ணாமூச்சி ஆடலாம்னு பார்த்தேன் .. மத்தப்படி உன்கிட்ட எப்படி பேசாம இருப்பேன் ... நீதான் என் வாய்ஸ்  கேட்கல .. ஆனா நான் உன் குரலை கேட்டுடு தானே இருந்தேன் "

" ஓஹோ , ரேடியோ கேட்டியாக்கும் "

" அதே.. அதே ..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.