(Reading time: 20 - 39 minutes)

" சும்மா அந்த காலத்து ஹீரோயின் மாதிரி டைலாக் அடிக்காத மித்ரா "

" அதெல்லாம் ஒன்னும் இல்ல டா .. ஒரு குட்டி லாஜிக் தான் .. இதுவே ஷக்தி என்கிட்ட தனியா இந்த விஷயம் பேசி அனுமதி கேட்டிருந்தா எப்படியாச்சும் சமாளிச்சு இங்கயே இருக்கலாம்னு சொல்ல வெச்சு இருப்பேன் .. ஆனா, நான் முடியாதுன்னு சொல்ல மாட்டேன்னு நம்பிக்கையா உங்க முன்னாடி அவன் கேட்கும்போது நான் எப்படி விட்டு கொடுப்பேன் எழில் "

" அம்மா தாயே , உன் காதல் காவியத்தை ஷக்தி கிட்ட சொல்லு . அவன் கேப்பான் .. என்னால முடியாது .. இப்போ என்ன பண்ணுறதா இருக்க ? அதை மட்டும் சொல்லு "

" நான் மதி அண்ணாகிட்ட பேசிக்கிறேன் .. அவர் ஹெல்ப் பண்ணுவார் .. நீயும் கூட இருந்து பார்த்துக்க .. நான் என் மாமா கூட கெளம்பறேன் "

" நான் நாளைக்கு ஆபிஸ் போயாகனும் எழில் .. நீ சமாளிப்பியா ?" அதுவரை அமைதியாய் இருந்த காவியா அவனை பார்த்து கேட்டாள் ..

" என்ன காவியா, இன்னும் மூணு நாள் லீவ்ன்னு தானே சொன்ன நீ ?"

" என்ன பண்ணுறது ? எல்லாம் இந்த கதிர் பண்ணுற வேலை .. ஒரு போன் பண்ணியாச்சும் அவனாய்  என்கிட்ட பேசுறானா ? இவனை தேடி தேடி லவ் பண்ணுறதே என் பொலப்பா போச்சு " என்று மனதிற்குள் பொங்கியவள் ,

" கொஞ்சம் முக்கியமான வேலை எல்லாம் இருக்கு .. ரிஷி அண்ணா தான் போன் பண்ணி சொன்னாங்க " என்று ரிஷி மீது பழி போட்டாள்  காவியதர்ஷினி ..

" அதெல்லாம் இவன் பார்த்துப்பான் காவியா .. நீ வேலைக்கு போ .. இப்போ எல்லாரும் தூங்கலாம் " என்றபடி துள்ளலாய்  ஓடினாள்  சங்கமித்ரா ..

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

" இம்ம்ம் இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வெச்சாலும் , வெச்சோம் எப்படி சேட்டை  பண்ணுறா பார்த்தியா ?" தோழியை பார்த்து ரசித்து சிரித்தபடி கூறினான்  அன்பெழிலன் .. " ரொம்ப பொறாமையா இருந்தா நீயும் கல்யாணம் பண்ணிக்க .. முகில் மேட்டரை எப்போ சொல்லலாம்னு இருக்க ?" என்றாள்  காவியா தீவிரமாய் .. தலையை  இடத்தும் வலதும் ஆட்டினான் எழில் ..

" எல்லாருக்கும் பிரச்சனைன்னா நான் ஐடியா கொடுக்குறேன் .. ஆனா, எனக்கு யாராச்சும் ஐடியா கொடுக்குறிங்களா  ? உங்களை எல்லாம் சமாளிச்சு நான் கல்யாணம் பண்ணுறதுக்குள்ள .. " என்று பெருமூச்சு விட்டவன் ,

" நீ முதலில் கதிரை கவனி ... ஒரேடியா உன் கல்யாணத்தையும் நடத்தி வெச்சுட்டு அதுக்கு அப்பறம் நான் என் கல்யாணத்தை யோசிக்கிறேன் " என்றான் கண்டிப்புடன் .. அவன் குரலில் இருந்த தீவிரம் முகத்திலும் தெரிய நிம்மதியாய் புன்னகைத்தாள்  காவியா ..

" என்ன டி லுக்கு ?"

" நட்புக்கு ஒரு சிலை  வைக்கணும்னா அது உனக்கு தான் டா "

" என் பேருல கொலைகேசு ரெடி பண்ணுவியே தவிர , சிலை எல்லாம் வைக்க மாட்டன்னு  நல்லா தெரியும் .. சும்மா  வளவளன்னு பேசாம தூங்கு போ " என்று அவளை விரட்டிவிட்டு அடுத்து என்னென்ன செய்வது என்று திட்டமிட்டான் அன்பெழிலன் ..

பொழுது புலர்ந்ததுமே ஷக்தியுடன்  புறப்பட்டுவிட்டாள் சங்கமித்ரா .. விடாமல் பேசிக்கொண்டும் , அவ்வப்போது அவனது அருகாமையை ரசித்து கொண்டும்  இனிமையாய் போனது அவர்களது பயணம் ..

" அடி நீதானா அந்த குயில் ? யார் வீட்டு சொந்த குயில் " தனது கரகரத்த குரலில் பாடி கதிரேசனின் கோபமான பார்வையை பரிசாய் பெற்றான் ரிஷி .. வழக்கம் போல கதிரின் அறையில் பேசிக்கொண்டு இருந்தவன் , அறை  கதவை திறந்து கொண்டு காவியா வரவும் அவளை வரவேற்கும் விதமாய் பாடினான் .. அவனது பார்வையை தொடர்ந்து கதிரும் வாசலை பார்க்க அங்கு கோபமாய் நின்றிருந்தாள்  காவியா .. ஒரு தூசியை பார்ப்பது போல கதிரை உதாசினமாய் பார்த்து வைத்தவள் , சட்டென முகத்தில் புன்னகையை படர விட்டு ரிஷியை நெருங்கினாள்  ..

"  அண்ணாச்சி "

" தங்கச்சி "

" எப்படி இருக்கீங்க அண்ணா ?"

" அதை நான் உன்ன பார்த்து கேட்கணும் .. கிட்டதட்ட ஒரு மாசம் மேடம் ஆபிஸ் வரல சரி .. அட்லீஸ்ட் போன் பண்ணியாச்சும் பேசி இருக்கலாம் .. கதிர் சொல்லித்தான் நீ அவன் வீட்டில் இருந்த விஷயமே தெரிந்தது .. ". ரிஷி இயல்பாய் சொல்லி முடிக்கவும் கதிர் எரிச்சலுடன் பேசினான் ..

" டேய் இதுக்கு தான் உன்கிட்ட எதையும் சொல்லுறது இல்ல ..எத்தனை தடவை சொன்னேன் , ஆபிஸ்ல இந்த விஷயம் பேசாதேன்னு " என்றான் அவன் .. அவனை கேள்வியாய்  பார்த்தபடி

" ஏன் , என்னாவாம் அண்ணா ?" என்றாள்  அவள்

" அது ஒண்ணுமில்ல காவியா .. நீ அவன் வீட்டில் இருந்தன்னு  ஆபிஸ்ல தெரிஞ்சா எல்லாரும் கேலி பண்ணுவாங்க .. அல்ரெடி நீ அவனுக்காகத்தான் இங்க வேலை செய்யுறன்னு  பேச்சு வருது "

" ஓஹோ சோ அதுக்காகத்தான் ரெண்டு பெரும் ஒரே நாளில் வேலைக்கு திரும்ப கூடாதுன்னு சார் சீக்கிரமா ஓடி வந்தாரோ " என்று அவனை பார்த்தப்படி ரிஷியிடம் பேசினாள் ..

" சரி அதை விடுங்க அண்ணா.. நீங்க எப்படி இருக்கீங்க ?"

" நான் நல்லா இருக்கேன் காவியா.. உன் காயம் எல்லாம் சரியாச்சா ? மருந்து எல்லாம் சாப்டியா ?" ரிஷி அக்கறையாய் கேட்க , அதே அக்கறையை மனதில் சுமந்தவனாய் கதிரும் அவளது பதிலுக்காக செவிகளை தீட்டினான் ..

" ம்ம்ம் நான் நல்ல இருக்கேன் அண்ணா " என்று சுருக்கமாய் முடித்து கொண்டாள்  அவள் ..

" அப்பறமா காவியா ஒரு முக்கியாமான விஷயம் .. நீ வந்ததுமே சொல்ல வேணாம் பார்த்தேன் .. பட் அப்படி இருக்க முடியல " என்றபடி தயங்கினான் ரிஷி

"அட சொல்லுங்க அண்ணா .. "

" குணா வந்தான்மா ரெண்டு மூணு தடவை "

" ஓஹோ "

" உன்னை தேடிட்டு போயிட்டான் .. கொஞ்சம் பத்திரமா இரு "

குணாவின் பெயரை கேட்டதுமே கைகள் முஷ்டி இறுக எழுந்தான் கதிர் .. " இதை ஏன் என்கிட்ட நீ சொல்லல ரிஷி ?" என்றான் கதிரேசன் .. நண்பனை விநோதமாய் பார்த்தான் ரிஷி .. கதிர் ஆபிஸ் வந்தவுடனேயே முதல் விஷயமாய் காவியாவை பற்றி விசாரித்தான் ரிஷி .. அவளை பற்றி கொஞ்சமாய் விவரம் தந்து பேசியவன்,

" போதும் ரிஷி .. காவியா காவியான்னு ரொம்ப அறுக்காதே .. இன்னைக்குத்தானே வேலைக்கு வரேன் ? என்னை கொஞ்சமாச்சும் வேலைய பார்க்க விடு " என்று எரிச்சலாய் கூறினான் .  உண்மையில் காவியாவுடன் தான் மனதளவில் நெருங்கி விட்டோம் என்பதை உணர்ந்து அவனுக்கு  அதிர்ச்சியாய்  இருந்தது .. தனது மனதில் கிளரும் உணர்வுகளுக்கு பெயரோ , உருவமோ கொடுக்க விரும்பாமல் அவளிடம் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து தான்  வேலைக்கு வந்தான் கதிர் .. இங்கும் ரிஹி காவியா புராணம் பாடவும் அவனுக்கு சட்டென கோபம் மூண்டது .. அந்த கோபத்தை நண்பனிடம் காட்டியதின் பலனாய்  தான் குணாவை பற்றி சொல்லாமல் இருந்தான் ரிஷி .. இப்போது கதிர் இப்படி கேள்வி கேட்கவும் காவியாவின் முன்னிலையில் விளக்கம் அளிக்க விரும்பாமல்

" மறந்துட்டேன் கதிர் " என்று கூறி அதற்கும் திட்டு வாங்கி கொண்டான் ரிஷி ..ரிஷியின் முகத்தை பார்க்க பாவமாய் இருந்தது அவளுக்கு ..

" அண்ணா , நீங்க உங்க இடத்துக்கு போங்க .. நாம அப்பறமா பேசலாம் " என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு கதிரின் முன் கை கட்டி நின்றாள்  காவியா .. அவனே தடுமாறும் அளவிற்கு ஊடுருவும் பார்வையை செலுத்தினாள்  அவள் ..

" என்ன பண்ண ட்ரை  பண்ணுறிங்க  கதிர் ? எதுக்கு ரிஷி அண்ணா மேல இவ்வளவு கோவம் ?"

" .."

" உங்க அக்கறையை நீங்களே மூட்டை கட்டி வெச்சுகோங்க கதிர் .. எனக்கது வேணாம் "

" தர்ஷினி  "

" இருங்க நான் பேசி முடிச்சிடுறேன் "

" ..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.