(Reading time: 21 - 42 minutes)

ய்யோ… டாடி… நான் அன்னைக்கும் அந்த தாலியை மதிக்கலை… இன்னைக்கும் மதிக்கலை… நமக்கு இருந்த ஒரே துருப்புச் சீட்டு அந்த தாலி தான்… அதை வச்சுத்தான் அவனை ஆட்டிபடைச்சோம் இத்தனை நாள்… பட் இன்னைக்கு அது இல்லன்னு ஆனதும், வேற வழி என்ன இருக்குன்னு யோசிச்சேன்… அப்பதான்… எனக்கு இந்த ஐடியா வந்துச்சு… ஒரு வேளை நான் இந்த சம்பவத்தால கொஞ்சம்… ஐ மீன்… நானும் ஒரு பொண்ணு தான்… என்ன தான் கோபமா, அகங்காரமா பேசினாலும், ஒரு பொண்ணா தன் தாலியை இன்னொருத்தர் அறுத்தா ஏற்படுற வலியை முகத்துல காட்டினா என்னன்னு யோசிச்சேன்… அது மூலமா அந்த காவேரியோட கவனத்தை என் பக்கம் இழுக்குறதுக்கான ஒரு சின்ன டிரை தான் அது…”

“நீ சொல்லுறதும் ஒரு விதத்துல ஒகே தான்… பட்… இத்தனை நாளும் நீ அதை மதிக்கலை… அங்க அவ்வளவு கோபமா பேசினப்பவும் திமிரு தான் தெரிஞ்சது உன் பேச்சுல… அந்த தாலியை நீ மதிக்கப்போறதில்லைன்னு நீயே தான் சொன்ன… இன்ஃபாக்ட்… அந்த தாலியை உன் கழுத்தில இருந்து மகத்தே எடுக்கணும்னு தான் ஆசப்பட்ட… ஆனா அதை காவேரி அறுத்து எறிஞ்சது தான் நமக்கு ஷாக்… அப்புறம் நீ அதை எடுத்துட்டாங்கன்னு ஃபீல் பண்ணினா மட்டும் காவேரியோட கவனத்தை திசை திருப்பலாம்னு நம்புறீயா என்ன?...”

“கண்டிப்பா டாடி… அவங்க ஒரு பொண்ணு… ஆயிரம் தான் நான் திமிரா பேசினாலும், அங்க நான் உடைஞ்சு போய் கிடந்ததை அவங்களே பார்த்தாங்க… அப்படி இல்லன்னாலும், அங்க நின்னுட்டிருந்த அந்த அசிஸ்டெண்ட், அப்புறம் அந்த ருணதி… யாராவது ஒருத்தர் கண்டிப்பா இதைப் பத்தி அந்த காவேரிகிட்ட சொல்லும்போது, கண்டிப்பா அவங்க மனசுல என்னைப் பத்தின ஒரு அபிப்பிராயம் வரும்… எனக்குள்ளேயும் பொண்ணு அப்படிங்கிற உணர்வு இருக்குதான்னு ஒரு செகண்ட் என்றாலும் நினைச்சுப் பார்ப்பாங்க… அதை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசுல நம்பிக்கைக்கு உரியவளா நான் மாறணும்… என் திட்டமே அதுதான்… மகத் அந்த காரியத்தை செஞ்சிருந்தா கூட என் மேல காவேரிக்கு அனுதாபம் வருமா தெரியலை… ஆனா காவேரியே செஞ்சதால கண்டிப்பா என் ப்ளான் வொர்க் அவுட் ஆகும்…”

“என்ன கன்யா சொல்லுற?... திட்டமா?...”

“ஆமா டாடி… ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்…” என அவள் சிரிக்க, அவரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்…

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

ப்போது அருள் இல்லத்தில்…

“என்னம்மா…. என்ன யோசனை?...”

“ஒன்னுமில்ல பவித்ரா… மனசுக்கு ஏதுவோ நெருடலா இருக்கு…” - காவேரி

“குழந்தைங்களை நினைச்சாம்மா?...”

“அவங்க கிடைச்சதும் எனக்கிருந்த பயம் போயிடுச்சு நிம்மதியும் வந்துச்சு… ஆனா, இது எதுவோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா…”

“மகத் சார் பத்தி யோசிக்கிறீங்களா?...”

“அவன் நல்லதைப் பத்தி நான் நினைக்காத நாள் ஏது பவித்ரா?...”

“இன்னைக்கு நடந்ததைப் பத்தியே நினைச்சிட்டிருக்கீங்களா?... அந்த கன்யா… ஹ்ம்ம்.. அவங்களா?...”

“ஹ்ம்ம்… ஆமா பவித்ரா…”

“நீங்க செஞ்சதை நினைச்சு வருத்தமா இருக்கா அம்மா?...”

“ஆமாடா… நானே என் கையால… எல்லாத்தையும்…” என சொல்ல முடியாமல் அவர் விசும்ப,

“அழாதீங்கம்மா… நடந்ததை மாத்த முடியாதும்மா… நடக்கப்போறதை யோசிங்கம்மா…”

“உண்மைதான் பவித்ரா… இனி அடுத்ததை தான் யோசிக்கணும்…”

“அப்போ மகத் சாருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களாம்மா?...” பவித்ரா சட்டென்று கேட்டுவிட்ட கேள்வியில் அவர் அமைதியாய் இருக்க,

“நான் எதாவது தப்பா கேட்டுட்டேனாம்மா?...”

“இல்லடா…”

“அப்போ ஏன்ம்மா ஒரு மாதிரி இருக்கீங்க?...”

“கன்யா… அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், எடுத்தெறிஞ்சு பேசுறதும் தான்… அவ அழுது உடைஞ்சி போய் நான் பார்த்ததே இல்லை பவித்ரா…”

“அவங்களும் ஒரு பொண்ணு தானம்மா… அந்த உணர்வு வந்திருக்கலாம்…” என பவித்ரா எதார்த்தமாக சொல்ல, காவேரி யோசிக்கலானார்…

“அப்போ அவ ஃபீல் பண்ணுறான்னு சொல்லிறீயா?... அவ தான் அதை மதிக்கவே இல்லையே எப்பவும்…”

“அவங்க மதிக்கலை அப்படிங்கிறது உண்மைதான்… பட் ஃபீல் பண்ணுறாங்களான்னு எங்கிட்ட கேட்டா ஒருவேளை பண்ணுறாங்களோன்னு தான் தோணுது… உங்க மனசுக்கு என்ன தோணுதும்மா?...”

“பொம்மை மாதிரி தரையில அத்தனையும் இழந்தவளா கிடந்தத பார்த்ததும் என் மனசுக்கு என்னமோ தாங்கலை பவித்ரா…”

“அவங்க அந்த தாலியை வச்சுத்தான மகத் சாருக்கு இன்னொரு கல்யாணம் பண்ண விட மாட்டேன்னு மிரட்டினாங்க… அதை நீங்க எடுத்ததும், இருந்த ஒரு வழியும் போச்சே, இனிமே என்ன செய்யன்னு யோசிச்சு கூட அழுதிருக்கலாம்… எல்லாமே யூகம் தான்மா… நாம என்ன அவங்க மனமா அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு சரியா சொல்லுறதுக்கு…” என சற்று கன்யாவின் பக்கம் சாய்ந்திருந்த காவேரியை கொஞ்சம் நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது பவித்ராவின் பேச்சு…

ம்மா….” என சிணுங்கியபடி முழித்த துருவனை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள் ருணதி…

“துருவ்… அம்மா… இங்க தான் இருக்கேண்டா… ஒன்னுமில்ல கண்ணா.. ஒன்னுமில்ல…” என அவள் மகனை மார்போடு அணைத்துக்கொள்ள,

“ஹ்ம்மா… நதிகா எங்க?...”

“அவ தூங்குறாப்பா… என்ன துருவ்?... நதிகாவைப் பார்க்கணுமா?..”

“ஆமாம்மா… நானும் அவளும் விளையாடிட்டிருந்தோம்… அப்போ திடீர்னு தூங்கிட்டோம்… என்னை அவ தான் எழுப்பினா, எந்திச்சு பார்த்தா வேற எங்கேயோ இருந்தோம்… அப்போ இரண்டு அங்கிள் வந்து எங்களுக்கு பால் கொடுத்தாங்க… அப்புறம் மறுபடியும் தூங்கிட்டோம்.. எந்திச்சு பார்த்தா நீ இருக்க…” என அவன் சொன்னதும், அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது…

“மயக்க மருந்து கொடுத்ததோடு விட்டார்களே… வேறேதும் துன்புறித்தி இருந்தால், கடவுளே… அவளால் தாங்கியிருக்க முடியுமா?...” அந்த நினைவில் அவள் கண்ணீர் சிந்த

துருவ் அதனை மென்மையாக துடைத்துவிட்டு, “ஏன்மா அழற?... நான் நிறைய தூங்குறேன்னா?... இனி தூங்க மாட்டேன்ம்மா… சரியா… நீ அழாதம்மா… எனக்கும் அழுகை வருது…” என அவன் சொல்ல,

விரைந்து கண்களை துடைத்தவள், புன்சிரிப்புடன், “அழலை… நான்… நீ அழவேக்கூடாது… சரியா?...” என சொல்லிவிட்டு, அவனைப் பார்க்க, அவனும் சரி என்றான் அழகாய்…

“மகத்…” என முணுமுணுத்துக்கொண்டு எழுந்த நதிகா, பக்கத்தில் இருந்த மகத்திடம் ஒண்டிக்கொண்டாள்…

“ஒன்னுமில்லடா… அப்பா இங்க தான் இருக்குறேன்… அப்பா உனக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரட்டா?..”

“வேண்டாம்ப்பா… சாப்பிட்டாலே நான் தூங்கிடுறேன்… அப்படித்தான் பொம்மை முகமூடி போட்ட அந்த இரண்டு அங்கிள் கொடுத்த பால் குடிச்சிட்டு தூங்கிட்டேன்… எதுக்குப்பா எனக்கு இன்னும் தூக்கம் வருது?... எனக்கு காய்ச்சல் அடிக்குதாப்பா?....”

“இல்லடா… உனக்கு எதுவுமே இல்லை…” என்றவன், மகளின் தலையில் தன் கன்னத்தினைப் பதித்துக்கொண்டான்…

“ஆமாப்பா… அந்த இரண்டு அங்கிள் யாரு?...”

அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று அவன் யோசிக்க,

“அவங்க துருவனுக்கு சொந்தக்காரங்களா?... அவனைத்தான் ஃபர்ஸ்ட் தூக்கினாங்க… அப்புறம்  துருவ் என் கையை பிடிச்சிட்டிருந்ததை பார்த்துட்டு என்னையும் தூக்கினாங்க… எங்கிட்ட பேசிட்டே இருந்தாங்க… அப்படியே நாங்க இரண்டு பேரும் தூங்கிட்டோம்…” என சொன்னவள்,

“துருவ் எங்க மகத்?... நான் போய் அவனை பார்த்துட்டு வரேன்…” என துருவனை பார்க்க ஒடிச் சென்றாள் நதிகா…

மகத் நதிகா சொன்னதை அசை போட்டவாறு அவர்கள் யார்?... என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.