(Reading time: 21 - 42 minutes)

வர்கள் அடுத்த தெரு செல்வதற்கும், மகத் அங்கே அப்போது வருவதற்கும் சரியாக இருக்க, இருபுறமும் கண்களை பதித்துக்கொண்டு வந்தவன், சாலையின் ஓரமாய் படுத்துகிடந்த நிலையில் குழந்தைகளை கண்டதும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டு, அவர்களின் அருகில் ஓடினான் மகத்…

“துருவ்… நதி… இங்க பாருங்க…” என கன்னத்தில் தட்டி எழுப்ப, அவர்களிடம் எந்த அசைவும் இல்லை…

நாடி பிடித்து பரிசோதித்தவன், நிலைமையைப் புரிந்து கொள்ள, இருவரையும் தூக்கி காரினுள் படுக்க வைத்து விட்டு விஜய்க்கு போன் செய்து விவரத்தை சொல்லிவிட்டு, நேரே அருள் இல்லத்திற்கு விரைந்தான்…

மகத், இருவரையும் தூக்கிக்கொண்டு உள்ளே வர, ருணதி அவனருகே ஓடினாள்…

நதிகாவை அவனிடமிருந்து வாங்கிவிட்டு, “நதி… இங்க பாரு… நதிகா…” என எழுப்ப,

“அவ மயக்கத்துல இருக்குறா… கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவா… பயப்படாத…” என மகத் சொல்ல

“என்ன மயக்கமா?...”

“ஹ்ம்ம்… ஆமா… கடத்தினவங்க… மயக்க மருந்து கொடுத்திருக்காங்க சாப்பாடுல கலந்து…”

You might also like - Oru kootu kiligal... A family drama...

“அய்யோ… பயப்படும்படி எதும் இல்லல?...”

“இல்ல… லேசான மயக்கம் தான்… குழந்தைங்க அப்படிங்கிறதுனால ரொம்ப லைட்டா தான் கொடுத்திருக்காங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க…”

“சரி... அவங்க மறுபடி எனக்கு போன் பண்ணலையே… அப்புறம் எப்படி நீங்க இவங்களை?...”

“ரோட்டுல ஒரு ஓரமா படுக்க வச்சிட்டு போயிருக்காங்க…”

“நீங்க வெளியே கிளம்பி போனது கூட நல்லதுக்குத்தான்… கண்ணா… காப்பாத்திட்டப்பா…” என அவள் கண் மூடி விரலால் இதழ் ஒற்றிக்கொள்ள, அவன் அவளையே பார்த்தான்…

அவன் பார்வை உணர்ந்து அவள் திரும்பிக்கொண்டு முன்னே நடக்க… அவள் நதிகாவையும், அவன் துருவனையும் சுமந்து கொண்டு உள்ளே சென்றனர்…

காவேரி, பவித்ரா… என அனைவருக்கும் அப்போது தான் சுவாசம் வந்தது போல் இருந்தது குழந்தைகள் இருவரையும் கண்டதும்…

களை அழைத்துக்கொண்டு வந்த குருமூர்த்தி, அவளை சோபாவில் அமரவைத்துவிட்டு அவளருகில் அமர்ந்தார்…

“கன்யா…”

“……”

“ப்ளீஸ்… எதாவது பேசு….”

“…….”

அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவர், “அங்க நடந்தது உனக்கு இவ்வளவு ஷாக் கொடுக்கும்னு நான் நினைக்கலை கன்யா…” என சிரித்துக்கொண்டே சொல்லவும்,

அவளும் பதிலுக்கு பலமாக சிரித்துவிட்டு, “நீங்க மட்டும் என்னவாம்… தரையில் விழுந்து கதறி பெர்மார்மன்ஸ் பண்ணீங்களே… அதைவிடவா நான் பண்ணிட்டேன்…” என அவளும் விடாது சொல்ல,

இருவருக்குமே சிரிப்பு வந்தது… அங்கே நடந்ததை நினைத்து…

“தேங்க் காட்… டாடி… இனிமே அவன் கட்டின அந்த தாலியை கழுத்துல சுமந்திட்டிருக்க வேண்டாம் நான்… அவன் நிம்மதியை கெடுக்குறேன்னு சொல்லிட்டிருந்த எனக்கு… ஷ்… அப்பாடா… இன்னைக்குத்தான் ரொம்பவே நிம்மதியா இருக்கு நிஜமா…”

“நீ எப்பவும் சுதந்திரமா தானடா இருக்குற?.. அப்பா உன்னை அப்படித்தான வளர்த்தேன்… இடையில நீயா சில முடிவுகளை எடுத்த… அது உனக்கு சாதகமா இல்ல… அதை கூட அப்பா தூர அகற்றிட்டு உனக்கு இவனை கல்யாணம் பண்ண முடிவு செஞ்சேன்… பட் நீ ஒத்துக்கலை… அந்த நேரம் மகத் மதர் மதர்னு உருகுறானே அந்த காவேரி தான் உன் கல்யாணத்துக்கு மூல காரணமே… அந்த காவேரி இல்லன்னா அந்த தாலி உன் கழுத்துல ஏறியிருக்காது…”

“பட் அந்த ஓல்ட் லேடியினால தான டாடி இன்னைக்கு அது என் கழுத்துல இல்லாமலும் போனது…”

“உண்மைதாண்டா… காவேரி அப்படி செய்வாங்கன்னு நானே எதிர்பார்க்கலை ஒரு நிமிஷம்…”

“அவங்க எங்கிட்ட இருந்து அந்த அசிஸ்டெண்டை காப்பாத்துறதுக்கு தான் அப்படி செஞ்சிருப்பாங்க…”

“உங்கிட்ட இருந்து தப்பிச்சாலும், எங்கிட்ட இருந்து அவன் தப்பிக்க முடியாதுடா… நிச்சயம்…” என்ற குருமூர்த்தியின் கண்களில் குரோதம் பளபளத்தது…

“டாடி… அவன் நம்மகிட்ட இருந்து கண்டிப்பா தப்ப முடியாதுதான்…” என்றாள் அவளும்…

“ஆமாடா… நீ எப்படி அங்க வந்து அந்த ருணதிக்கு ஹெல்ப் பண்ணுறன்னு சொன்ன?... துருவனை யாரோ கடத்திட்டாங்கன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?...”

“நீங்களும் தான் என் பின்னாடியே அங்க வந்துட்டீங்க… அப்போ உங்களுக்கும் தெரியும்னு நானும் சொல்லவா?...”

“கன்யா… என்னடா இது… நீ அங்க போறதை கவனிச்சேன்… அதான் பின்னாடியே வந்து என்ன நடக்குதுன்னு பார்க்க வந்தேன்… அவ்வளவுதான்…”

“ஓ… ஓகே டாடி…” என்றவள், “துருவனை கடத்தினப்போ நான் அங்கதான் இருந்தேன்…” என்றாள் அசட்டையாய்…

“வாட்?... என்ன கன்யா சொல்லுற?... அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா?...”

“யெஸ் டாடி… அவங்க கார் நம்பரை நான் நோட் பண்ணி வச்சிருக்கேன்…”

“குட் கன்யா… பட் இந்த கடத்தல் ப்ளான் நாம தான போட்டோம்…”

“கரெக்ட் டாடி… பட் நமக்கு முன்னாடி அவங்க முந்திகிட்டாங்க… கண்டிப்பா அது அந்த ருணதிக்கு விரோதியாத்தான் இருக்கணும்…”

“ஓ… அப்ப நமக்கு வசதியாப்போச்சு… எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்…”

“அப்படி சொல்லிட முடியாது டாடி… எனக்கென்னமோ அப்படித்தான் தோணுது… பட் ஒன் திங்க் டாடி… நாம கடத்த நினைச்சதும் துருவனை தான்… அவங்க கடத்த நினைச்சதும் துருவனைத்தான்… அவனை கடத்தும்போது அந்த அசிஸ்டெண்ட் பொண்ணு அவ பேரென்ன?...” என அவள் யோசிக்கையில்,

“நதிகா…” என எடுத்து கொடுத்தார் குருமூர்த்தி…

“ஆ… யெஸ்… அந்த ஊர் பேர் தெரியாதவளும் பக்கத்துல இருந்தான்னு அவளையும் சேர்த்து கடத்திட்டாங்க… நமக்கு துருவனை கடத்த வேண்டிய வேலை மிச்சம்னு நான் பார்த்துட்டு சும்மா இருந்துட்டேன்…”

“எல்லாம் சரி கன்யா… எனக்கு சில கேள்வி மனசை அரிச்சிட்டே இருக்கு… உங்கிட்ட கேட்கலாமா?...”

“கேளுங்க டாடி…”

“நிஜமாவே உனக்கு வருத்தம் இல்லையா காவேரி செஞ்ச காரியத்தால?...”

“ஒரு துளி கூட இல்ல டாடி… அது சரி ஏன் இப்படி கேட்குறீங்க?..”

“இல்லடா… உன் கண் ரத்தமா சிவந்திருந்துச்சே…”

“நான் ஆசப்பட்டது தானப்பா நடந்துச்சு…”

“சரிதாண்டா… பட் நீ அவ்வளவு அழுது நான் இன்னைக்குத்தான் பார்த்தேன்… உன்னை முதல் முறையா சுக்கு நூறா உடைஞ்சி போனவளா இன்னைக்கு நான் பார்த்தேன்… நிஜமாவே நீ வருத்தப்படுறீயா?...”

“எதுனாலும் எங்கிட்ட தெளிவா சொல்லிடுடா… ப்ளீஸ்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.