'அகல்யா... திரும்ப திரும்ப அதையே சொல்லாதப்பா...' என்றான் இதமாக. 'உன் மனசு எனக்கு புரியலைன்னு நினைக்கறியா??? சரி... நான் ஒண்ணு சொல்றேன் அதை யோசிச்சு பாரு.... இப்போ நீ உள்ளே வந்ததும் என்ன நடந்தது?
பதில் சொல்லாமல் அவனை கேள்வியாகவே பார்த்தாள் அஹல்யா.
'உன் மனசை பத்தி யோசிக்காம நான் கொஞ்சம் அவசரப்பட்டேன்... உடனே நீ என்னை தள்ளிவிட்டு பயந்து பின்னாலே என்ன இருக்குனு சரியா பார்க்கமே தள்ளிப்போனே, தடுமாறி கீழே விழுந்தே அதுக்கப்புறம் சமாளிச்சு என் தோளிலே சாஞ்சிட்டே...சரியா.??? கொஞ்சம் யோசிச்சு பாரு நம்ம வாழ்க்கையிலும் நடந்தது இதுதானே??? வியப்பு மேலோங்க விழி விரித்தாள் அஹல்யா.
'நடந்தது அவ்வளவுதான்டா இதிலே ரொம்ப யோசிக்க ஒண்ணும் இல்லை. அதுக்காக எனக்கு இதுக்கு முன்னாடி உன் மேலே கோபம் இருந்ததே இல்லைன்னு சொல்ல மாட்டேன். உன்னை வெட்டி கடலிலே வீசி இருக்கணும்ன்னு கத்தி இருக்கேன். ஆனா இப்போ யோசிச்சு பார்த்தா நானும் பப்ளிக்லே உன்கிட்டே கேட்காம கொஞ்சம் அவசரபட்டுடேன்னு தோணுது
அதுக்குமேலே நீ எனக்கு கொடுத்த காயத்தை விட நேத்து நீ கொடுத்த நிம்மதி தான்டா மனசிலே நிறைஞ்சு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம பழசை எல்லாம் மறந்திடுவோம். புதுசா எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணுவோம் சரியா???'
அவள் இமைக்காமல் அவனையே பார்த்திருக்க, 'அடியே ஏதாவது புரிஞ்சதுன்னா தலையாட்டணும்டி...' என்றான் அவன். சின்ன புன்னகையுடன் தலை அசைத்தாள் அவள்.
'நான் அதுக்காக எல்லாம் உடனே சரியாயிடணும்ன்னு சொல்லலை. பட் என்னை விட்டு விலகி விலகி இருக்காதேடா. நீ தனியா ஏதாவது யோசிச்சு யோசிச்சு அது உன்னை டிப்ரஷன்லே தான் கொண்டு விடும் புரியுதா?
'ம்...'
'சரி நாம ஒரு பத்து நாள் எங்கேயாவது போயிட்டு வருவோமா? நாளைக்கே கிளம்புவோம். எங்கே போவோம் சொல்லு.'
'எங்கேயாவது ஒரு காட்டுக்குள்ளே. நம்மளை யாருக்கும் தெரியாத ஒரு காட்டுக்குள்ளே ' என்றாள் அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடியே.
அழகாக சிரித்தான் சஞ்சா. 'நாளைக்கு அம்மாவும் தங்கச்சியோட ஊருக்கு போறாங்க. அவளை அங்கே விட்டுட்டு கொஞ்ச நாள் அக்காவோட இருந்திட்டு வரப்போறாங்க. நாமும் எங்கேயாவது சுத்திட்டு வருவோம்' என்றான் உற்சாகமாக.
அறிந்திருக்கவில்லை அவன்.!!! அவன் இல்லாத இந்த பத்து நாட்களில் ரிஷியின் வாழ்கையில் நடக்க போகும் விளையாட்டுக்களை பற்றி அவன் அறிந்திருக்கவில்லை.
மறுநாள் காலை பத்து மணிக்கு சஞ்சாவின் வீட்டை வந்து அடைந்து இருந்தான் ரிஷி. அவனுடன் அருந்ததியும் குழந்தையும்.
'ரொம்ப டயர்டா இருக்குடா இருக்குடா. ஊருக்கு போறதுக்குள்ளே ஒரு நாள் வீட்டுக்கு வரேன்னு சஞ்சா கிட்டே சொல்லிடு' வர மறுத்துவிட்டிருந்தனர் சந்திரிக்காவும், ராமனும்.
வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி. அந்த வீட்டினுள்ளே தன்னை பெற்ற ஜீவன் தனக்காக காத்திருப்பதை அறியாமல்....
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.