(Reading time: 10 - 20 minutes)

" ராப்பிச்சைக்காரனை  எல்லாம் எவன் டீ காலேஜ்ல சேர்த்தது ?" அவன் காதில் விழும்படி நந்துவிடம் பேசிக்கொண்டே எதிரில் அமர்ந்தாள்  அனு ..

" வந்துட்டாய்யா ...வந்துட்டாயா .. இனிமே திணற திணற கலாய்ப்பாளே ! " என்று முணுமுணுத்தான் அருண் ..

" பேருக்கு தான் ஆண் சிங்கம் ..ஆனா அசிங்கம் டீ .. முகத்துக்கு நேரா பேசவே பயப்படுறான் பாரேன் " என்று சீண்டினாள்  அனு  ..

" இன்னைக்குன்னு பார்த்து நம்ம தல இங்க இல்லாம போயிட்டானே " என்று வாய்விட்டே சொன்னான் செல்வம் சோகமாய் ..

" வந்திருந்தா மட்டும் என்ன கிழிச்சிருப்பான் ? என் கதிர் பேரை சொன்னாலே  தெறிச்சிகிட்டு  ஓடுவான் உன் தல  "

" ஓஹோ அப்போ உன் பேருக்கு கெத்து இல்லையா அனு  ?" என்று வாய்விட்டான் அருண் ..  அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு கேலியாய் சிரித்தாள் அனு ..

" என் கெத்தை  நீ பார்க்கணும் .. அவ்வளவு தானே ? நாளைக்கு பாரு " என்று வில்லத்தனமாய் சிரித்துவிட்டு ,

" ஆமா  கவீன்   எங்க டா ?"  என்றாள் .. சரியாய் அதே நேரம் தீப்தி வந்துவிட,

" எங்களை கேட்டா எப்படி ? தீப்தியை தான் கேட்கணும் . கவீன்  இப்போ எல்லாம் அவ கூடத்தானே இருக்கான் ?" என்று குறைபட்டு கொள்ளும் தொனியில் உரைத்தான் செல்வம் ..

" நந்து  , வா போகலாம் " என்று அனு  எழுந்துகொள்ள முயல அவளை அடக்கினாள்  நந்து  ..

" குட் மார்னிங் தீப்தி " என்று சிரித்தாள் .

" குட் மார்னிங் "

" கவீனை  பார்த்தியா ?"

" கவீனா ? இல்லையே அவன் உங்ககூட தானே இருப்பான் ? " என்றாள் தீப்தி சாதாரணமாய் ..

" நம்ம கூடவா ? அவனை நம்ம கிட்ட இருந்து கொஞ்சமா கொஞ்சமா பிரிச்சிட்டு அவளுக்கு நக்கலை பார்த்தியா ?" என்று காது கடித்தாள்  அனு .

" ஷ்ஷ்ஷ்ஷ் .. நீ சும்மா இரு டீ ..எப்பவும் கூலா இருப்ப .. ஏன் தீப்தியை பார்த்து மட்டும் இப்படி  டென்ஷன் ஆகுற .. விடு பொறுமையா பேசு " என்றாள்  நந்து ..

" செல்வம் அருண் , உங்களுக்கு தெரியாதா கவீன்  எங்கன்னு ?" என்றாள்  தீப்தி .. சரியாய் அந்த நேரமாய் அவளது செல்போன் அடிக்க , அவள் முகத்தில் புன்னகை அரும்பியது ..

" என்னடீ பேய் , ரொமாண்டிக்  லுக் விடுது ?" என்றாள்  அனு ...நந்துவிற்கு அணுவின் பாவனை சிரிப்பாய் இருந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் இருந்தாள் .. தங்களது நண்பர்கள் அங்கு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்து அருகில் வந்தாள்  ஜெனி ..

" ஜெனி, கவீன்  எங்க ?" . ஜெனியோ பதில் சொல்லாமல் தீப்தியை பார்த்தாள் ...

" என்னை ஏன் கேட்குற  அருண் ?  உனக்கு தெரியாதா அவன் யாரிடம் பேசுவான்னு ".. தீப்தி முன்பு தோற்றுவிட்டவள்  போல  முகத்தை வைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் ..

" ஹும்கும் .. பேருக்குத்தான் டா இந்த பக்கம் ஒன்னு , அந்த பக்கம் ஒன்னுன்னு காலண்டர் இருக்குற முருகர் மாதிரி நம்ம மச்சான் போஸ்ட் கொடுக்குறான் .. ஆனா அவனை காணோம்னா ஒரு பக்கி கூட கவலை படுறது இல்ல .. அவனை காணோமான்னு ஒரு வார்த்தை கேட்டாளுங்களா  பார்த்தியா ? இதான் மச்சி சொல்லுறது , காதலை விட நட்பு தான் பெட்டெர் .. காதல் சோறு போடாது மச்சி .. ஆனா நட்பு பிரியாணியே தரும் .."

" இதோ பாருடீ .. நட்பு பிரியாணி தருமாம் . நந்து அப்போ சாப்பாடுக்கு நீ காசு கொடுக்காத .. டேய் நண்பா நீ தந்திடு சரியா ?" என்று சிரித்த அனு , நந்துவின் கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப , அப்போதுதான் அது நடந்தது .. (என்ன நடந்தது ? ரொம்ப நாள் ஆச்சுல புவி ட்விஸ்ட் வெச்சு ? ஹா ஹா அதை அப்பறமா சொல்லுறேன் .. அதுக்கு முன்னாடி இன்னொரு சீன் பார்ப்போம்)

குப்பறைக்கு வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து எதையோ ஆர்வமாய் படித்து கொண்டிருந்தான் வின்சன்ட்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொன்னது சரிதான் என்பதை பிரதிபலித்தது அவனது முகம் .. ஆருவிடம் மனம் விட்டு பேசிய பின்பு மிகவும் நிம்மதியாய்  உணர்ந்தான் அவன் .. அது அவனது முகத்திலும் பிரதிபலித்தது .. இதழில் லேசாய் புன்னகையை படரவிட்டு , அமர்ந்திருந்தான் அவன் .. முக்கியமாய் ஆருவின் கண்களுக்கு அவன் இன்னும் அழகாய் தெரிந்தான் .. அவனை தூரத்தில் இருந்து பார்த்தவளுக்கு அவனிடம் பேசலாமா வேண்டாமா என்று தயக்கம் எழ, அவளது கால்களோ " போடீ "என்று திட்டிவிட்டு அவன்முன் நின்றன ..

" வா ஆரு  " என்றான் அவன் நிமிராமலே ..

" பார்க்காமலே சொல்லுற ?"

" அதெல்லாம் தெரியும் " என்றபடி நிமிர்ந்தான் ..

" உட்காரு வா "

" இல்ல வேணாம் , பரவாயில்ல" என்றவள் தயங்கவும் , அவன் எழுந்து நின்று

" இப்போ உட்காரு ப்ளீஸ் " என்றான் ..

" ரொம்பதான் பண்ணுறான் இவன் ..இப்படியெல்லாம் பண்ணா இம்ப்ரஸ் ஆகிருவோமா ?" என்று மனதிற்குள் நினைத்துகொண்டாள்  அவள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.