(Reading time: 53 - 105 minutes)

ணத்துக்காக ஆட்களை கடத்துறதுல இருந்து எல்லாம்….”

மிரண்டு எச்சில் விழுங்கினாள் தங்கை.

“எந்த பார்டி கேட்டுகிட்டாலும் அவங்களுக்காக கலவரம் அடிதடி கடை அடைப்பு… ஸ்மக்ளிங்…..இப்டி எல்லாம் செய்வேன். என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் தொழில்….அதோட தொழில் வேற ஃபேமிலி வேற…..அதாவது அந்த விஷயத்துல நான் செங்கிஸ்கான் மாதிரிதான் இருந்துறுக்கேன்….ஆனா அப்ப அது புரியலை….. ஒரு ஸ்டேஜ்ல ஒரு டான்க்கு ரொம்ப க்ளோஸாகிட்டேன்….அப்றம் அந்த ஆளு மண்டைய போட….அப்றம் நான்தான் அந்த கேங்குக்கு எல்லாம்….கோடில புரள ஆரம்பிச்சேன்….”

“…………………….”

“அப்பதான் நவ்யாவ பார்த்தது. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்….எதுனால எனக்கு அவளைப் பிடிச்சுதுன்னு தெரியாது…. ஆனா பிடிச்சுது……என்னைப் பொறுத்தவரை அவ என் ஃபேமிலி…..அவட்ட ஆரம்பத்துல இருந்து நான் உண்மையா ஒழுங்கா தான் இருந்தேன்….அவளைத் தாண்டி எனக்கு உலகம்னு எதுவும் கிடையாதுதான்….பட் என் ப்ரொஃபஷனைப் பத்தி அவட்ட நான் சொன்னது இல்லை…. பிஸினஸ் வேற மேரேஜ் வேற …… ஒரு ஸ்டேஜ்ல அவளும் என்னை விரும்ப ஆரம்பிச்சா….கல்யாணம் செய்துகிட்டோம்…..ரொம்ப ரொம்ப சந்தோஷமான பீரியட் என் லைஃப்ல அதுதான்….அவிவ் பிறந்தான்…”

அவிவைப் பத்தி நவ்யா எழுதிக் கொடுத்திருப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே…. இப்பொழுது எதை நம்ப வேண்டும் இவள்….? இசை விழித்த விதத்தில் புரிந்தது போல் சதீஷிற்கு….

“ ஒரு ஸ்டேஜ்ல நவிக்கு என் பிஸினஸ் பத்தி தெரிஞ்சிட்டு…..அதை விட்ற சொல்லி கேட்டா…. உன் தொழிலையும் அதுல சம்பாதிச்ச எல்லாத்தையும் விட்டுட்டு வா….பாவமும் வேண்டாம்….அதால வந்த பணமும் வேண்டாம்னு சொன்னா….எனக்கு அதை ஒத்துக்க முடியலை….திரும்பவும் பணம் இல்லாத பஞ்ச வாழ்க்கைக்கு எப்டி போறதாம்….அதுவும் இப்ப எனக்கு நவி அவிவ் நு ரெண்டு பொறுப்பு வேற இருக்குது…..ஆக அவளை கன்வின்ஸ் செய்ய ட்ரைப் பண்ணினேனே தவிர….என்னை மாத்த நான் நினைக்கவே இல்லை…....இதுல என் ஆட்கள் கிட்நாப் செய்த ஒரு குழந்தை ஆக்சிடென்டலி இறந்து போச்சு…. அவளால அதை தாங்க முடியலை….அப்பதான் அவ என்னை விட்டுட்டுப் போய்ட்டா….அவிவ் அவட்ட இருந்தா எப்படியும் என்  கைக்கு வந்துடுவான்னு பயந்து போய் ஒளிச்சு வச்சுட்டா….அதான் ஆர்ஃபனேஜ்ல சேர்த்திருக்கா…… அவன் என்னை மாதிரி வந்துடக் கூடாதுன்றதுதான் அவளோட ஒரே லட்சியம்.

அவ அப்பாவோட சேவிங்ஸ் இருந்துது அவட்ட……மதுரன் அவள் கசின் இல்லையா அவர் கூட வந்து காலேஜில ஜாய்ன் செய்துட்டா….படிச்சு வேலைக்குப் போகனும்னு அவளுக்கு ப்ளான்….அவ ப்ரதர் பக்கத்துல இருந்தா நான் ஓபனா எதுவும் தொந்தரவு செய்ய மாட்டேன்….கொஞ்ச நாள் துரத்திட்டு திரும்பிப் போயிருவேன்னு அவளுக்கு நினைப்பு…..எப்பவும் மதுரன் கூட மட்டும் தான் ரூமை விட்டு வெளிய வருவா…..என்னாலயும் மதுரன் முன்னாலயோ அடுத்தவங்க முன்னாலயோ என் கதையை பேச முடியாது….இப்படி ஒரு டைம்ல தான் நீ வந்த அந்த காலேஜுக்கு….அப்ப உன்னை யாருன்னு எனக்கு தெரியாது….

மதுரனையும் நவியையும் எப்பவும் வாட்ச் பண்ணுவேன்…அப்பதான் மதுரன் உன்னை விரும்புறார்னு புரிஞ்சிது…. அதை அவர் உன்ட்ட காமிச்சுகிடுறதுக்கு முன்னாலயே எனக்கு ஒரு ப்ளான்….எப்படியும் மதுரன் உன்ட்ட பழக ட்ரை பண்ணுவார்…அதானால நான் உனக்கு ஃப்ரெண்டாயிட்டா எப்பவும் மதுரன் கூடவே சுத்ற நவியை மீட் பண்ண…கன்வின்ஸ் செய்ய வழி கிடைக்கும்னு நினச்சேன்……

அதுக்குதான் அன்னைக்கு உன் கார் டயரை பஞ்சராக்கிட்டு   வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…..அப்ப நீ இக்னோர் செய்துட்டு போய்ட்ட….அப்றம் அந்த ஹோர்டிங் அது வச்சது கூட நான் தான்…”

“வாட்….?!!!!!!”

“ஆமா அப்ப அந்த சிச்சுவேஷன்ல நீ எப்டியும் டவுணா ஃபீல் பண்ணுவ உன்ட்ட ஆறுதலா பேசி சப்போர்டிவா பிகேவ் செய்து உனக்கு ஃப்ரெண்டாயிடலாம்னு நினச்சேன்….ஆனா அப்பதான் உன்னைப் பத்தி விசாரிக்க சொல்லியிருந்த என் பசங்க ரிப்போர்ட் கொண்டுவந்தாங்க….

செங்கிஸ்கான் பொண்ணுனாலும் என் தங்கச்சி இல்லையா…. என்னமோ எனக்கு உன்னை வேற ஆளா பார்க்க முடியலை….என்னைப் பொறுத்த வரைக்கும் நீயும் அவிவ் மாதிரிதான்…என் குடும்பம்…. அப்றம்  உனக்காகவும் யோசிக்க ஆரம்பிச்சேன்…….மதுர் மேல எனக்கு எப்பவும் நல்ல ஒபினியன் தான்….உன்னை நல்லா வச்சுப்பாருன்னு நினச்சேன்…. ஹீம் ……” பெரு மூச்சு விட்டான் சதீஷ்.

“இதையெல்லாம் பேசினா உனக்கு மனசு கஷ்டமா இருக்காதே….”

“இல்ல சொல்லு…ங்க…”

சின்னதாய் சிரித்தான் அவன்.

“என்ன க்ரைம் லிஸ்ட்டை கேட்டு மரியாதை கூடிட்டுப் போகுது….”

“அது இல்ல…என்ன ஆனாலும் நான் உ…ங்க தங்கைனா…..அப்டி தானே நீங்க எனக்கும்….”

இப்பொழுது அவன் முகத்தில் கனிவு. அவள் தலையில் கை வைத்து அதை சின்னதாய் ஆட்டியவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.