(Reading time: 8 - 15 minutes)

20. கிருஷ்ண சகி - மீரா ராம்

ண்டி என்னடி பண்ணிட்டிருக்குற?... ஒரு மனுஷி கேட்டுண்டே இருக்குறேனே… எதாவது பேசேண்டி?...”

“……”

“அப்படி என்னடி கனா காணுற?... காலங்கார்த்தாலேயே… வேலைக்கும் போகாம…” என கோகிலவாணி கேட்க கேட்க ருணதி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்…

krishna saki

“இவளை… கிராதகி…. நான் பாட்டுக்கு கத்திண்டிருக்கேன்… என்ன ஏதுன்னாச்சும் கேட்டுத்தொலைக்கிறாளா பாரு?... திமிர் பிடிச்சவ… இருடி வந்து உன்னை பேசிக்கிறேன்…” என அவளைத்திட்டியபடி ருணதியை தேடி அவள் அறைப்பக்கம் வந்தார் கோகிலவாணி…

வந்தவர், கதவு திறந்து இருப்பதைப் பார்த்துவிட்டு, “கதவை திறந்து வச்சிட்டு தான் நான் பேசுறது கேட்காத மாதிரி இருந்தாளா?... என்ன ஆச்சு இந்த நதிக்கு?...” என வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு சென்றவர்,

அங்கே அவள், கட்டிலில், சில புகைப்படங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அவளருகே சென்றார்….

“என்னடி நதி பண்ணிட்டிருக்குற?...”

“ஹேய்…. பாட்டி… இங்க வா….” என்றவள் அவரிடம் பேசிக்கொண்டே கையில் வைத்திருந்த ஒரு புகைப்படத்தை இன்னொரு புகைப்படத்தின் பின் மறைத்து வைத்தாள்…

“நான் வர்றது இருக்கட்டும்… ஆமா ஒரு மனுஷி அப்ப இருந்து கத்திண்டிருக்கேனே… நோக்கு கேட்டுச்சா கேட்கலையா?... அத முதலில் சொல்லு…”

“சாரி கோகி… நான் கவனிக்கலை…” என்றவளுக்கு அப்போதும் புகைப்படத்தின் மீதே கண் இருக்க,

“கவனிக்கலையா?... அது சரி… ஆமா வேலைக்கும் போகாம இப்படி இங்க உட்கார்ந்து இந்த போட்டாவை பார்த்துட்டிருக்கியே… என்ன விஷயம்?...”

“அதெல்லாம் எதுவுமில்லை பாட்டி… துருவனுக்கு விளையாடுறதுக்கு பரண் மேல எதாவது கிடக்குதான்னு தேடுனேன்… அப்ப தான் இந்த ஆல்பம் என் கண்ணுல தட்டு பட்டுச்சு… அதான் எடுத்து வச்சு பார்த்துண்டிருக்கேன்…”

“எந்த ஆல்பம்… இங்க குடு பார்ப்போம்…” என அவளிடமிருந்து வாங்கிய கோகிலவாணியின் கண்களில் சந்தோஷமும், துக்கமும் ஒருங்கே வந்து சேர,

“என்னாச்சு கோகி?... ஏன் ஒருமாதிரி ஆயிட்ட?...”

“ஒன்னுமில்லடி… உன் அப்பா நியாபகம் வந்துட்டு… அதான்…” என சொல்லியவருக்கு லேசாக கண்கள் கலங்க,

“கோகி…. என்ன இது…?...” என்றவளுக்கும் தன்னை மீறி துக்கம் தொண்டை அடைத்தது…

“எதுவுமில்லை… சரி… சரி… துருவன் எங்க?.. ஆளையேக் காணோம்…”

“அவனும் பக்கத்து வீட்டுப் பொண்ணும் வீட்டுக்கு பின்னாடி விளையாடிட்டிருக்காங்க…”

“ஓ சரி… சரி… நீ இதெல்லாம் பார்த்துட்டு இரு… நான் இப்போ வந்திடுறேன்…” என்ற கோகிலவாணி அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை…

ருணதியை விட்டு தனியே வந்த கோகிலவாணியின் கண்களில் நடந்து முடிந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்திருந்தன வரிசையாய் அணிகோர்த்து…

“பாட்டி…. உனக்கு எத்தனை தடவை சொல்லுறது… இப்படி என் பேரை சொல்லாதன்னு…” என்ற ருணதியின் வார்த்தைகள்…

“அம்மா… நீதான் விடேன்… அவளை போட்டு ஏன் பாடா படுத்துற?...” என்ற சேஷாத்திரியின் வார்த்தைகள்…

“என் அப்பா தானா இது?... எனக்காக பரிஞ்சு பேசுறது?...” என ருணதி நம்பமுடியாமல் கண்ணை உருட்டிக்கொண்டு கேட்ட விதம்…

“அம்மா நாம கிளம்பணும்… சீக்கிரம் கிளம்புங்கோ….” என சொன்னதும், இத்தனை நாள் இருந்த அந்த ஸ்ரீரங்கத்தை விட்டு கிளம்ப முடியாமல் தவித்த தருணங்கள்…

ஊர் விட்டு ஊர் வந்து சேர்ந்ததும் கிடைத்த பழைய உறவுகள்…

விட்டுப்போன பந்தம் கிடைத்த திருப்தி நிலைக்காமல் சேர்ந்த துயரம்…

ஆண்டுகள் செல்ல செல்ல துயரம் மறைந்து காயங்கள் ஏற்பட்ட நேரம்…

காயங்கள் மாறி ஆறி தழும்பாக மாறி இருந்த தருணம் பேரிடியாக அமைந்த சில நிகழ்வுகள்…

அதிலிருந்து மீண்டு வெளிவராது அதனுள்ளே ருணதியை தள்ளும் நோக்கத்துடன் செயல்படும் கோகிலவாணியின் முயற்சிகள்…

அவளுக்குள் இருக்கும் ஆசைகள், எண்ணங்கள், மனதின் விருப்பங்கள், என எதையுமே அறியாமல் அவர் எடுத்து வைத்த அடிகள்…

அது தெரிந்தும் யாதொரு மறுப்பும் சொல்லாது கோகிலவாணியின் முயற்சிக்கு உயிர் கொடுக்க முடியாவிடினும் சிறிது சுவாசமாவது கொடுக்கலாம் என்றெண்ணி அவள் மேற்கொண்டிருக்கும் தவ வாழ்க்கை…

அவளின் மன நிலையை கண் கூடாக காண முடியாத போதிலும், அவளின் மனதினுள் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பைத் தேடி மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே வந்த பொழுதுகள்…

அதன் பின்னர் சந்தித்த ஜித்தின் அறிமுகங்கள் கோகிலவாணியை மீண்டும் அவளை தான் எண்ணிய வாழ்க்கைக்குள் திணிக்க முயற்சிக்க…

செய்வதறியாது இறைவன் மீது பாரத்தை போட்டு நகர்த்திக்கொண்டிருக்கும் நாட்கள்…

கேசவனின் மனதை மாற்ற போராடிக்கொண்டிருக்கும் வைஜெயந்தியின் காதல்…

துருவனின் எதிர்காலம்?... ருணதியின் வாழ்க்கை?... ஜித்தின் காத்திருப்பு… என அனைத்தையும் மனதினுள் ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொண்டார் கோகிலவாணி…

அவரின் மனதினை புரிந்த ருணதியும் அமைதியாக அவர் சென்ற திசையையே பார்த்திருந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.