(Reading time: 8 - 15 minutes)

பின்னர் எழுந்து வந்து கதவை சாத்திவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த அந்த புகைப்படத்தை கையிலெடுத்தாள்…

குழி விழும் கன்னத்துடன் கொள்ளை கொள்ளும் பார்த்ததும் மயக்கும் வசியப்புன்னகையுடனும், காந்தத்தன்மையை கண்ணிலே நிலையாய் அழகாகக் கொண்டும் இருந்த குட்டிச்சிறுவன் பள்ளிச் சீருடையில் கண்கவரும் வகையில் நின்றிருந்தான்….

“எவ்வளவு அழகு…. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…” என்றவள், புகைப்படத்தில் இருந்த அந்த குட்டிச்சிறுவனது முகத்தினை வருடினாள்…

ப்போது,

“டேய்… என்னடா?... என் கிருஷ்ணா தான்னு சொல்லிட்டு இப்படி முகத்தில கைவச்சிட்டு நின்னா என்ன அர்த்தம்?...” என பிரபு மகத்திடம் கேட்டுக்கொண்டிருக்க,

அவனோ, மயக்கும் புன்னகையுடன், “ஹ்ம்ம்… எதுவோ, முகத்துல… ஹ்ம்ம்… எதுமில்லடா…” என்றான்…

“அப்படியா?... எனக்கென்னமோ அப்படி தெரியலையே… உன் சிரிப்பை பார்த்தாலே தெரியுது… எதுவோ இருக்குதுன்னு…. என்னடா ட்ரீம் எதாவது போயிட்டியா என்ன?...” என்றான் பிரபு சற்றே கிண்டலுடன்…

“ட்ரீம் இல்லடா… உண்மையாவே முகத்துல வருடின மாதிரி இருந்தது…” என தனக்குள் சொல்லிக்கொண்டவன், வெளியே பிரவிடத்தில், “ஒன்னுமில்லடா…” என்றபடி தலைஅசைத்தான்…

“எது… ஒன்னுமில்லையா?... என்னடா விளையாடுறீயா?... உன்னோட பிளாஷ்பேக் சொல்லுவேன்னு நாங்க ரொம்ப நேரமா ஹ்ம்ம்…. அதை நேரம்னு கூட சொல்லக்கூடாது… போன வாரத்துல இருந்து நான் வெயிட் பண்ணுறேன்… நிறைய பேர் பல எபிசோட் வெயிட் பண்ணுறாங்க… நீ என்னடான்னா ரொம்ப சிம்பிளா ஒன்னுமில்லைன்னு சொல்லுற?...” என பிரபு குதிக்க ஆரம்பிக்க,

“எது எபிசோடா?... என்ன சொல்லுற பிரபு… எனக்கு புரியலை…” என்றான் மகத்…

“அதெல்லாம் உனக்கு புரியாது… புரிய வேண்டிய எங்களுக்கு புரியும்… நீ கதையை மட்டும் சொல்லு… சீக்கிரம்…”

“ஹ்ம்ம்… சரிடா பிரபு…” என்றான் மகத், நடந்தவற்றை கண் முன் கொண்டு வந்து சொல்லும் எண்ணத்துடன்…

“கிருஷ்ண ப்ராணாதிகா…”

டியே… கிருஷ்ண ப்ராணாதிகா… என்னடி பண்ணுற?... ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு?... இன்னும் வாசல்ல என்னடி பண்ணிட்டிருக்க?...” என கோகிலவாணி வாசலுக்கு விரைந்தார்…

அழகான மயில் வண்ணத்தோகையை விரித்து ஆடுவது போன்ற கோலத்தை வரைந்து முடித்து எழுந்து நின்றாள் கிருஷ்ண ப்ராணாதிகா…

வாசலில் வந்து நின்ற கோகிலவாணியைப் பார்த்ததும்,

“எப்படி இருக்கு பாட்டி என்னோட கோலம்?...” என்றாள் அவள் இடுப்பில் ஒருவைத்து கேட்டபடி…

“எல்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆமா நோக்கு ஸ்கூலுக்கு போற எண்ணம் இருக்கா இல்லையா?...”

“இருக்கே… ஏன் இல்லை?...” என்றாள் அவளும் பதிலுக்கு சட்டென்று…

“அதான இந்த வெட்டி வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றார் கோகிலவாணி முகத்தினை தோள்பட்டையில் இடித்துக்கொண்டே…

“நோக்கு மட்டும் என்னவாம்?... வாய் கொஞ்சமாவா இருக்கு?...” என்றாள் அவளும் வரிந்துகட்டிக்கொண்டு…

“ஏண்டி நான் என்ன பண்ணினேன்?... எதுக்குடி இப்ப எங்கிட்ட சண்டைக்கு வர்ற?...”

“ஆ…. எனக்கு ஆச பாரு… உங்கூட சண்டை போடணும்னு… சரிதான் போ பாட்டி… பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி ஆக்டிங்க் பண்ணிகிட்டு…” என்றாள் அவள்…

“இதென்னடீ கொடுமையா இருக்கு… அது உன்பேரு தான?... அப்ப நான் அப்படி தான கூப்பிடுவேன்…” என்றார் கோகிலவாணி சிரித்துக்கொண்டே…

“கோகி…. உன்னை….” என்றபடி அவர் மேலே பாய்ந்தாள் அவள்…

“ஏய்… ஏய்… விடுடீ… கிராதகி… விடு….”

“உனக்கு எத்தனை தடவை சொல்லுறது அப்படி கூப்பிடாதன்னு…”

“அப்படிதாண்டீ கூப்பிடுவேன்… கிருஷ்ண ப்ராணாதிகா… கிருஷ்ண ப்ராணாதிகா…”

“ப்ளீஸ் பாட்டி… அது பையன் பேரு மாதிரி இருக்கு… ஹ்ம்ம்…” என அவள் சிணுங்க…

“ப்ராணாதிகா… பொண்ணு பேரு தானடீ?... அப்புறம் என்ன?...”

“உனக்கென்ன தெரியும் என் பேரை எப்படி எல்லாம் எல்லாரும் கொலை பண்ணுறாங்கன்னு?...”

“ஏண்டி நதி என்னாச்சு?...”

“இதான்… இதுதான் பிரச்சினை…” என்றாள் அவள் இப்போது கோகிலவாணியை கைகாட்டி…

“என்னடி சொல்லுற?... புரியலை… என்ன பிரச்சினை அதும் என்னால…”

“நீ நதி சொல்லுற…. முழு பேரையும் சொல்லுற….. என் க்ளாஸ்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுறாங்க… கடுப்பா இருக்கு தெரியுமா?... அதிலேயும் ஒரு பையன் இருக்கான்… அவன் என்ன எப்ப பாரு ரா….” என அவள் சொல்லிக்கொண்டே இருக்கும்போது,

“இன்னும் அவ கிளம்பலையாம்மா?... என்ன பண்ணிட்டிருக்குறா அவ?...” என உள்ளிருந்து சேஷாத்திரி குரல் கொடுக்க,

“அய்யோ… பாட்டி… அப்பா…..” என வீட்டின் பின்புறம் ஓடினாள் அவள்…

“ஹாஹா… உனக்கெல்லாம் அவன் தான் சரி…” என்றபடி சிரித்துக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தார் கோகிலவாணி…

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.