(Reading time: 8 - 15 minutes)

19. கிருஷ்ண சகி - மீரா ராம்

து வேற யாருமில்லை… என் கூடப்பிறந்தவன் தான்…” என்றபடி வந்து நின்றான் விஜய்…

விஜய்யை பார்த்து ஒரு கணம் என்றாலும் ஆச்சரியப்பட்டு போனான் மகத்…

“நீங்க….” என மகத் இழுக்க

krishna saki

“குழம்பிக்க வேண்டாம் மகத்… நான் விஜய் தான்….” என வந்தவன் சொல்ல

அவன் சொன்னதைக் கேட்ட மகத் என்ன சொல்ல என்று தெரியாமல் இருக்க,

சதாசிவம் தாத்தாவோ அவன் சொன்னதின் அர்த்தம் யாது என யோசித்தார்….

“தம்பி நீங்க சொல்லுறது எனக்குப் புரியலை…”

“தெளிவாவே சொல்லுறேன் ஐயா…. என் பேரு விஜேந்தர்… என் அப்பா அம்மாவுக்கு என்னைத்தவிர இன்னொரு பையனும் உண்டு… அவன் பேரு ஜிதேந்தர்… எனக்கு இரண்டு வயது மூத்தவன்… ஆனாலும் நானும் அவனும் பார்க்க ஒரே ஜாடையில் இருப்போம்… அதனால எல்லாரும் கொஞ்சம் குழம்பிப்போவாங்க… அது தவிர, நான் அவன் மாதிரியே இருக்குறதாலேயோ என்னவோ, அவனுக்கு என்னைப்பிடிக்கலை… என்னை வெறுத்தான்… நானும் அவனை விட்டு ஒதுங்கியே இருந்தேன் பல வருஷமா… பட் இப்போ என் அம்மா அப்பா கூட இருக்குற சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சும் அதுல கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை அவனால…”

“நீ சொல்லுறதை வச்சி பார்த்தா உன் அண்ணன் உன்னை தான கடத்தியிருக்கணும்… ஆனா அவன் எதுக்குப்பா குழந்தைங்களை கடத்தணும்?...”

“அப்படி கடத்தினா தான் ருணதியை தன் பக்கம் கொண்டு வர முடியும்னு அவன் நினைச்சிட்டான்… அதான்…”

“என்னப்பா சொல்லுற?...” என சற்றே வியப்பாய் சதாசிவம் கேட்க

“நேத்து மனசு நிம்மதிக்காக கொஞ்சம் வெளியே கிளம்பி போனேன்… அப்பதான் அவனோட உண்மையான முகம் எனக்கு தெரிய வந்துச்சு….” என்றான் விஜய்…

நேற்று…

வீட்டில் நடந்ததை நினைத்து பார்க்கில் இருந்த பெஞ்சில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான் விஜய்…

அப்போது, “டேய்…. நீ இங்க தான் இருக்குறீயா?... உனக்கு போன் பண்ணிட்டே இருந்தேன் நீ ஏண்டா எடுக்கலை?...” என்றபடி வந்தான் தருண் பாதி போதையில்…

விஜய்யோ, “யார் இவன்… நம்மிடம் என்ன உளறுகிறான்?...” என எழுந்து கொள்ள முயற்சித்த போது தருண், ஜித் என்றழைக்க, எழுந்து கொள்ள முயற்சித்த விஜய்யின் கால்கள் அப்படியே அமர்ந்தன…

“விடுடா… மச்சான்… இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும்…. அப்போ நம்ம ப்ளானை மறுபடியும் நடத்திடலாம்… நீ எதும் வொரி பண்ணாத மச்சான்… சரியா?...” என தருண் சொல்ல,

விஜய் அவனை சுருக்கிய கண்களோடு பார்த்தான்…

“என்னடா பார்க்குற?... இன்னைக்கு உன் தம்பியால எல்லாம் கேன்சல் ஆச்சு… ஒத்துக்குறேன்… ஆனா மறுபடியும் நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்… அன்னைக்கு துருவனை மறுபடியும் கடத்திடலாம்… அப்புறம் ருணதியை ஈசியா உன் வழிக்கு கொண்டு வந்திடலாம்… கவலையை விடுடா…” என தருண் சொன்னதைக் கேட்டு விஜய்க்கு தன் அண்ணனின் சுயரூபம் புரிந்தது…

கைமுஷ்டி இறுக, அவன் பல்லைக் கடித்த போது, “அட ஏண்டா நீ வேற?... இப்போ எதுக்கு கோபப்படுற?... நடந்து முடிஞ்சதையே நினைச்சிட்டிருந்தா அடுத்து பண்ணப்போறதை எப்படி நீ யோசிக்க முடியும்?... அதனால தான் சொல்லுறேன்… தேவை இல்லாம இங்க உட்கார்ந்து ஃபீல் பண்ணுறதை விட்டுட்டு போய் அடுத்த வேலையைப் பாரு…” என சொல்வதற்குள் போதை தலைக்கேறியது தருணுக்கு…

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த விஜய்யின் முன் வந்து நின்றவன், “மச்சி… எனக்கு ஒரு அர்ஜண்ட் வொர்க் இருக்குடா… நான் கிளம்புறேன்… நீயும் பார்த்து வீட்டுக்குப்போ... சரியா?...” என சொல்லிவிட்டு தள்ளாடியபடி தருண் செல்ல…

ஜிதேந்தரின் உண்மையான முகத்தை அறிந்த விஜய்க்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது….

நேரே வீட்டிற்கு சென்றவன்,

தாயிடத்தில், “அம்மா ஒரு அவசர வேலை… வெளியூருக்கு போக வேண்டியிருக்கு… போயிட்டு இரண்டு மூணு நாளில் வந்துடுவேன்… நான் எங்க போயிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லவேண்டாம் இந்த வீட்டுல… நீங்க பார்த்து பத்திரமா இருங்க…” என கூறிவிட்டு சென்னை கிளம்பினான்….

விஷயம் தெரிஞ்சதும், உங்களைப் பார்த்து உடனே சொல்லணும்னு தோணுச்சு… அதான் வந்தேன் மகத்… அவன் செஞ்சது பெரிய தப்புதான்… அவனுக்கு நிச்சயம் அவன் பண்ணினதுக்கு தண்டனை கிடைக்கும்… ஆனாலும் அவன் பண்ணினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்… மன்னிச்சிடுங்க மகத்….” என இருகை கூப்பி வேண்டியவனின் கைகளை ஒரு நொடி கூட தாமதிக்காமல் பிடித்து,

“கூடப்பிறந்த அண்ணனாகவே இருந்தாலும் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சதும், உடனே வந்து மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சீங்களே… பெரிய மனசு விஜய் உங்களுக்கு… எங்கிட்ட நீங்க இப்படி கைகூப்ப வேண்டாம்… ப்ளீஸ்….” என சொன்ன மகத் விஜய்யின் கைகளை கீழே இறக்கினான்…

“விடுப்பா… அவன் செஞ்சதுக்கு நீ எதுக்கு மன்னிப்பு கேட்குற?... விடு… ஆனா எனக்கு சில விஷயம் புரியலை…” என சதாசிவம் தாத்தா விஜய்யைப் பார்த்து கூற,

“கேட்க நினைச்சதை கேளுங்க…” என்றான் விஜய்…

“துருவன் வேற யாருமில்லை… உன் அண்ணன் பையன் தான… அப்படி இருக்கும்போது அவன் பையனையே அவன் எப்படி கடத்த முன் வந்தான்?... எதுக்காக இதெல்லாம் அவன் செய்யுறான்?...”

“அது வந்து…” என விஜய் சற்று யோசிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.