(Reading time: 12 - 24 minutes)

07. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 7

"உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில பக்கங்களே கொடுக்க முடிந்தது! அடுத்த அப்டேட் நிறைய பக்கங்கள் கொடுக்க முயல்கிறேன்! Thank you all readers! "

ஞ்சனாவின் குடும்ப பின்னணியை ஸ்ருதியிடம் சசி சொல்லவும், வியப்பில் விழி விரித்தவள்,

“இப்படி ஒரு  அன்பான ஜாயின்ட் பேமிலி கிடைக்க அஞ்சனா கொடுத்து வைச்சிருக்கணும்..“, என்று ஏக்கப் பெருமூச்சு விட, ஆமோதிப்பதாக தலையசைத்த சசி,

“அஞ்சனா மாதிரி ஒரு ஃப்ரண்ட் கிடைக்க அதை விட கொடுத்து வைச்சிருக்கணும்! இந்த ஆர்யமன் ஏதோ செய்து எங்க ஃப்ரண்ட்ஷிப்பை பிரிச்சிட்டானே!”

Puthir podum nenjam

தோழியை பிரிந்து உழண்ட மனம் பின்னோக்கி சென்றது..

ன்று எத்தினிக் டே. புடவையை கட்டிக் கொண்டு சசி கிளம்பிய சமயம் மழை பெய்ய ஆரம்பிக்க, சிறிது நேரம் காத்திருந்து விட்டு மழை ஓய்ந்ததும் கிளம்பினாள்.

பத்து பதினைந்து நிமிட ஆதிக்கத்தில் ரோட்டின் குண்டு குழிகளை நீரால் நிரப்பி இருந்தது மழை! இப்படி மழைக் காலத்தில் கந்தலாகி போகும் ரோட்டில் ஸ்கூட்டியை ஓட்டுவது சற்று சிரமமாக இருந்தது சசிக்கு!

‘ஆபிஸ் பஸ்லே வந்திருக்கலாம்!’

சில நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்து விடலாம் என்ற போதிலும்.. சிக்னலில் அந்த சில நொடி காத்திருப்பே அவளுக்கு மலைப்பாக தோன்றியது...

அப்பொழுது தான் அவள் அருகில் ஊர்ந்து வந்து நின்றது அந்த விலை உயர்ந்த porsche கார்! அனிச்சையாக அந்த காரின் பக்கம் தலை திருப்பியவளை  அழைத்த அந்த டிரைவர் மேக்ஸ்சாஃப்ட்டின் வழியைக் கேட்க..

“இந்த சிக்னல்லே ரைட் எடுத்து..”, என்று சசி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவளை கடந்து சென்ற ஆட்டோ ஒன்று அவள் சேலையில் சேரை வாரி இறைக்க...

திடுக்கிட்டு அவள் திரும்பும் முன்னே அந்த ஆட்டோ பறந்து விட்டது... ஆட்டோகாரன் மீது கோபம்.. சேலை பாழானதில் கவலையும் சேர்ந்து கொள்ள...

“இப்படியா கண்ணு மன்னு தெரியாம ஓட்டுவான்”, என்று அட்ரஸ் கேட்டவரின் அக்கறையான பேச்சு கூட அவளுக்கு எரிச்சலை வரவழைக்க... 

“ப்ச்!!!”, என்று அலுத்துக் கொண்டே அவரை நோக்கி திரும்பிய பொழுது தான் அவர் அருகில் அமர்ந்திருந்த அஞ்சனாவை கவனித்தாள். அவள் கண்களிலும் அதே பரிதாபப் பார்வை! இது சசியின் எரிச்சலை அதிகபடுத்த.. அதே சமயம் சிக்னலும் போட்டு விட... அவர்களை தன்னைத் தொடருமாறு சொல்லி விட்டு சென்று விட்டாள்.

மேக்ஸ்சாஃப்ட் அலுவலகத்திற்குள் நுழைந்த சசியை தொடர்ந்து வந்த அஞ்சனாவின் காரும் அவளருகிலே நிறுத்தப் பட..  காரிலிருந்து இறங்கியவள்,

“ஹலோ மேம்”, என்று தன்னை நோக்கி வந்தவளின்  பார்வை தன் சேறாகி போன தன் சேலை மீதே நிலைத்திருப்பதைக் கண்ட சசி...

‘நீ என்னம்மா ஜம்முன்னு காரில் வந்துட்ட... நட்ட நடுரோட்டில் நின்னு உனக்கு அட்ரஸ் சொல்ல போய் தான் இப்படி நிலைமை’,

அந்த பரிதாபப் பார்வையில் அவள் மீது குறை கண்டுபிடித்தது சசியின் மனது! ஆனால் நோக்கி வந்தவளோ,

“என்னாலே தான் மேம் உங்க சேலை பாழாகிடுச்சு! ஸாரி!”,

என்று மன்னிப்பு கோர... அதை எதிர்பார்க்காத சசியின் மனது இப்பொழுது குத்த...

“ஆட்டோக்காரன் செய்த தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க...”,

அஞ்சனாவைத் தேற்ற சொல்லவது போல, தனக்கு தானே சொல்லிக் கொள்ள, அஞ்சனாவோ,

“நோ மேம் ஐ ம் ரெஸ்பான்ஸிபிள்!”, என்றாள் இன்னும் சமாதானமடையாமல்..

எந்த பகட்டும் இன்றி கெஞ்சலாக கோரிய பாங்கு வெகுவாக கவர்ந்தது சசியை! சிலரை  பார்த்தாலே  பழக வேண்டும் என்று தோன்றும் அல்லவா! அப்படி தான் அஞ்சனாவை பார்த்த பொழுது அவளுக்கு தோன்றியது!

“அதை விடுங்க! என்னை சசின்னே கூப்பிடுங்க! நீங்க என்ன ஃப்ரஷ்ஷரா?”, புன்னகைத்த படி பேச்சை திசை திருப்பினாள் சசி. இருவரும் பேசிக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழையும் பொழுது சசியை எதிர்கொண்டான் சசியின் காதலன் முகுந்த்!

“வாவ்... கார்ஜியஸ்!!!”, வைத்த கண் வாங்காமல் சசியைப் பார்த்து வாயார புகழ்ந்த படி வர... பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள் என்பது கூட தெரியாமல் ஜொள்ளு வடிப்பவனை கண்களால் கண்டித்த சசி,

“என்ன கார்ஜியஸ்? நானே சேறாகி போயிடுச்சேன்னு கவலையில் இருக்கிறேன்”, என்றாள் வருத்தத்துடன்.. அதைக் கண்டதும் கவலையுற்ற அஞ்சனா,

“ஐ எம் ரெஸ்பான்ஸிபிள் சசி! ஸாரி!”, என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட... இப்பொழுது தான் விழித்துக் கொண்டவன் போல முகுந்த் சசியின் அருகில் நின்றவளைப் பார்க்க..  அவன் பார்வையில் இருந்த கேள்வியை புரிந்து கொண்ட சசி அஞ்சனாவை அறிமுகம் செய்ய,

அவன் அஞ்சனாவிடம், “நீங்களே சொல்லுங்க அஞ்சனா! என் ஆளு சேற்றில் பூத்த செந்தாமரை தானே?”,

“செந்தாமரையா????”, என்று விரலால் நாடியை தட்டி யோசிக்கும் பாவனையில்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.