(Reading time: 10 - 20 minutes)

03. என் மனதை தொட்டு போனவளே - VJ G

டுத்த நாளே அவன் வேலையை ஆரம்பித்தான், அவனுக்கு ரொம்ப உதவி செய்த சிவகுமார் என்ற பையன் அந்த பாங்கில் ரொம்ப நெருங்கியவன் ஆகி விட்டான், பிறகு பெர்சனலாக பேசும் அளவுக்கு நெருங்கிவிட்டான், அவன் ஒரே பையன் தனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க தன் அம்மா ஆசைப் படுகிறாள், தினம் வீட்டுக்கு போனால் ஒரே தொனக்கிறாள், என்று சொன்னான்

இவனும் சிரித்து விட்டு, ‘ஏன் உங்களுக்கு அந்த ஆசை இல்லையா,’ என்று கேட்டான்

‘அதில்லை ருத்ரா, எனக்கு இன்னும் கொஞ்ச நாள் போலாமே என்று பார்க்கிறேன், அதுவும் மேனேஜர் ஆவதற்கு ஒரு  பரீட்சை எழுதனும், இந்த நேரத்தில் கல்யாணம் செய்துக் கொண்டால்,நான் வரும் மனைவியை நல்லா கவனிக்கனும் அவளை வெளியே கூட்டிக்கொண்டு போகணும்,  இல்லையின்னா அவள்  முறுக்கிக் கொள்வாள், இதெல்லாம் நினைத்தாலே பயமாயிருக்கு,'

en manathai thottu ponavale

‘நல்ல தெளிவாயிருக்கீங்க, என்னவோ நிறைய கல்யாணம் பண்ணி அனுபவம் பெற்ற மாதிரி பேசுறீங்க? ' என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,

'அனுபவமெல்லாம் தேவை இல்லை, எல்லாம்தான் தினம் டிவியிலும், சீரியலிலும்  பார்க்கிறோமே,' என்றான்

‘டிவியும், சினிமாவும், வாழ்க்கையில்லை, குமார்,’ என்றான் ருத்ரா,

‘அதென்ன நீங்கள் குமார் என்கிறீர்கள், என் பெயர் சிவா என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள்,’ என்றான் சிவா

‘சிவா என்பது என் அப்பா பெயர் கூட.. அதனால், நான் குமாரென்று உங்களை கூப்பிடுவது, எதுவும் ஆட்சேபனை இல்லையே, ' என்று கேட்டான்

'கண்டிப்பாக இல்லை, உங்க அப்பா மேல்அவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்களா? ' என்றான் குமார்

என் அப்பா, ராமர் எந்த அளவுக்கு தன் தந்தையிடம் மரியாதையும்,அன்புமாக,இருந்ததாக இதிகாசம், கூறுகிறதோ அதே போல், என் அப்பா, அவர் தந்தையிடம் இருப்பார், அதில் ஒரு பங்காவது நான் அவரிடம் காட்ட வேண்டாமா,' என்றான்

‘உங்கள் வீட்டுக்கு நான் வரவேண்டும்,’ என்றான் சிவகுமார்

அதுக்கு முன்னாடி' உங்களுக்கு எந்த மாதிரி பெண் வேடுமென்று நினைக்கிறீர்கள்?' என்று கேட்டான் ருத்ரா

'அட, உங்களுக்கு என்ன, இவ்வளவு ஆர்வம்?'

‘ஒன்றுமில்லை ஒரு சிநேகிதனுக்கு உதவி செய்யத்தான்,மேன்னுதான், இஷ்டமிருந்தா சொல்லுங்க இல்லையின்னா இட்ஸ்... ஓகே... ...' என்று சொன்னான்

அவனும் சிரித்துக் கொண்டே 'ஒன்றும் பெரிதாக இல்லை, என்னைப் புரிந்துக் கொள்பவளாக, என்னுடன் ஒரு சிநேகிதிப் போலவும்,என் அம்மாவுக்கு ஒரு பெண் போலவும் வேண்டும் வேலைக்கு போவதும் போகாததும் அவள் இஷ்டம், வீட்டிலேயே இருந்தால் மிகவும் சந்தோஷம்,' என்றான்

'சரி படிப்பை பத்தி ஒன்றும் சொல்லவில்லையே?' என்றான்,

'படிப்பைப் பற்றி ஒன்றும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை, அட்லீஸ்ட் ஒரு டிக்ரீயாவது வேண்டுமென்று நினைக்கிறேன் அவ்வளவுதான் ,’ என்றான்

‘என்னை தவறாக நினைக்க மாட்டீர்களே குமார் என்னுடைய கசின் சிஸ்டர் இருக்கா, அவளுக்கு படிப்பில் ரொம்ப ஆர்வம் இல்லை, பன்னிரெண்டாவது முடிக்க போகிறாள், நல்ல மார்க் வாங்கினால் காலேஜ் அனுப்பி படிக்க வைக்கலாம், இல்லை என்றால் கரஸ்சில் படிக்கட்டுமென்று நினைக்கிறோம், உங்களுக்கு பரவாயில்லை என்றால் சொல்லுங்கள், நான் வீட்டில் பெரியவர்களிடம் பேசுகிறேன்,' என்றான்

‘உங்கள் தங்கை பன்னிரெண்டாவதுன்னா ரொம்ப சின்னப் பெண் ஆச்சே,'

‘ஆமாம், பதினெட்டு வயசு தான்,கரஸ்சில் படிக்கப்போறான்னா , வீட்ல வைத்துக் கொண்டிருப்பதை விட கல்யாணம்  செய்துவிட்டால் நல்லது, எப்படியிருந்தாலும், எப்படியும் ரெண்டு வருஷத்தில் கல்யாணம் செய்துக் கொடுக்கத்தான் வேண்டும், நான் எப்படியும் என் தங்கைக்கு ஒரு நல்ல பையன் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன், நான் பழகின வரையில், உங்களை எனக்கு மிகவும்  பிடிச்சிருக்கு  , என்றான் ருத்ரா

“உங்கள் தங்கைக்கு இப்போது கல்யாணம் செய்துக் கொள்வதில் இஷ்டமா என்று கேட்டீர்களா?”

'கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்லமாட்டாள்,'

' ஒரு பையனைப் பார்த்த பிறகுதான் பேச வேண்டும் என்று இருந்தேன்,அதனால் உங்கள் பதிலைப் பொறுத்து அவளிடம் பேசுவேன், ஆனால் எனக்காக நீங்கள் பார்க்கக் கூடாது, உங்களுக்கு எப்படி இஷ்டமா இல்லையா என்று யோசித்து சொல்லுங்கள், ஒன்றும் அவசரமில்லை,' என்றான் ருத்ரா

எனக்கு எப்படியும் அம்மா பார்க்கும் ஏதோ ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணப் போறேன், அதுவும் இனிமேல் தான் பார்க்க வேண்டும் அதனால், அந்தப் பெண் உங்கள் தங்கையாக இருப்பது எனக்கு விருப்பம் தான் நீங்கள் சொன்ன மாதிரித்தான், எனக்கும் உங்களைப் பிடித்திருகிறது, நீங்கள் என் மேல் காட்டும் அக்கறை ஒரு புறம்,' என்றான், 'சரி சொல்லுங்கள் எப்போது உங்கள் தங்கையைப் பெண் பார்க்கலாம்?' என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.