(Reading time: 10 - 20 minutes)

'தப் பார்ரா..... அவசரத்தை,' என்று கூறி சிரித்தபடியே, 'நாம் ஒன்று செய்வோம், நாளைக்கு அவளை பீச்சுக்கு அழைத்து வரேன் நீங்களும் அங்கு வந்து விடுங்கள்.. ரெண்டு பேறும் பார்த்து பேசுங்கள், உங்கள் இரண்டு பேருக்கும் பிடித்தமென்றால், பிறகு, நான் வீட்டில் பேசி முறையாக,உங்கள் அம்மாவைப் வந்து பார்த்து, எங்க வீட்டு பெரியவங்க வந்து பேசுவார்கள்

உங்கள் அம்மாவும், நீங்களும் வந்து பெண் பாருங்கள், பிடிக்க வில்லை என்றால், அப்படியே விட்டு நாம் இருவரும் இப்போ போலே சிநேகிதர்களாக இருப்போம்,' என்றான் ருத்ரா

'எவ்வளவு அழகாக புரிந்து பேசுகிறீர்கள், 'என்று சொன்னான்

இருவரும் கொஞ்ச நேரம், மற்ற விஷயங்கள் பேசி விட்டு கிளம்பினார்கள் ‘நாம் நம் வேலையை நாளைக்கு பார்ப்போம்,’ என்று கூறிவிட்டு கிளம்பினான் ருத்ரா

வீடு வந்து சேர்ந்தவுடன் குளித்து விட்டு வந்து டிபன் சாப்பிட்டான், பிறகு தங்கைகளுக்கு டியுஷன் எடுக்கச் சென்றான்

அவர்கள் எல்லோரும் ரெடியாக இருந்தனர், பெருமையாக இருந்தது, எல்லோருக்கும் பாடத்தை முடிக்க மணி எட்டாகி விட்டது, எல்லோரும் ஸ்டடி ரூமிலிருந்து வெளியே போகும் போது வனிதா கொஞ்சம் இங்கே வா என்று கூப்பிட்டான், உன் டெஸ்ட் மார்க் முன்ன விட இப்போ ரொம்ப பரவாயில்லை இதை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்க சரியா, அப்புறம் என்னோட சிநேகிதன் ஒருத்தன்,பேர் சிவகுமார், நல்ல பையன், அவங்க வீட்டில் அவனுக்கு பெண் பாக்கறாங்கலாம், உனக்கு இஷ்டம்னா, உனக்கு அந்த பையன பாக்காலாம்னு இருக்கேன்,  நீ என்ன சொல்ற?’என்றான்

‘நீங்கதானே அண்ணா, டிகிரீயாவது இருக்கணும் என்றீர்கள்,' என்றாள்

ஆமாம், நான் தான் சொன்னேன், அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள் நான் உன்னைப் பத்திப் பேசினேன், அவன் சரி பார்க்கலாம் என்றான், உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசையிருந்தால் சொல்லு... அவனை நாளைக்கு பீச்சில் பார்க்கலாம் நீங்க பேசிக்குங்க, உங்க ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தால், பிறகு பெரியவர்களிடம் பேசலாம் என்ன...’ என்றான்

‘அவருக்கு என்னை பற்றி எல்லாம் தெரியுமா?,’ என்று கேட்டாள்

‘நான் ஒன்றும் சொல்லவில்லை, அது உன் இஷ்டம் சொல்லுவதும், சொல்லாததும், என்னைக் கேட்டால் சொல்லுவதுதான் முறை, அதுவும் நீயே சொல்வதுதான் முறை, 'என்றான் ருத்ரா

'அண்ணா, அதைக் கேட்டதும், என்னை வேண்டாமென்று சொல்லிவிட்டால்,'

'அவர் வேண்டாமென்று சொல்லிவிட்டால், அவர் உன்னைப் போல் ஒரு நல்ல, பெண் கிடைக்க கொடுத்து வைக்கவில்லை, அவ்வளவுதான், அது மட்டுமில்லை, யாருக்கு, யார் என்று கடவுள் போட்ட முடிச்சு, அதனால் உனகென்று ஒருவன் கண்டிப்பாக வருவான், என்ன புரிஞ்சுதா, நாளைக்கு போறோமா பீச்சுக்கு?,’

அவள் வெட்கத்துடன் தலை ஆட்டினாள், அவனுக்கு சிரிப்பு வந்தது, அவளை தோளோடு அனைத்து, அவள் தலையில் முத்தம் வைத்தான்,

‘சரி வா, சாப்பிடப் போகலாம்,’ என்றான்

எல்லோரும்,கிண்டலடித்துக் கொண்டு சாப்பிட்டார்கள், ‘வர வர,  நம்ம கார்த்திக் இங்கு வருவதே இல்லை,’ என்றார் சிவகாமி, ருத்ரா சிரித்துக் கொண்டான், அவனுக்குத் தெரியும் ஏனென்று, லீவு நாட்களில் அவன் காதலியை பார்பதற்கு போய்விடுகிறான்,இங்கு ஏன் வரப் போகிறான், இவன் தன் B  E , MBA  முடித்து விட்டான் அவன் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான் வேதனையாக இருந்தது, அவன் படிக்க வேண்டும் என்பதற்காக,அந்தப் பெண்ணைப் பார்த்து பேசி, அவளே அவனை படித்தால்தான் கல்யாணம் என்று சொல்ல வைத்தான், பிறகுதான் கொஞ்சம் அக்கைறை எடுத்து படிக்கிறான், என்று நினைத்துக் கொண்டான்,

டுத்தநாள் காலையில், கிளம்பி வனிதாவை அவள் ஸ்கூலில் விட்டு, தன் வேலையைப் பார்க்க போனான், அது முடிந்ததும் பாங்குக்கு குமாரைப் பார்க்கப் போனான், அங்கே வாசலில் தன் சிநேகிதியுடன் ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள், அவளைப் பார்த்தவுடன், அவன் ஒரு புருவத்தை தூக்கி தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினான், அவளும் வெட்கத்துடன், தலையை ஆட்டினாள்.

அவள் தன் தோழியிடம்,”நீ உன் வேலையைப் பார்த்துவிட்டு வா, எனக்குத் தெரிந்தவர் வந்திருக்கிறார், பேசிவிட்டு வருகிறேன்,” என்றாள்

அவள் பேசுவதைப் பார்த்துப் புரிந்துக் கொண்டு, இவனும் அவளுக்ககாக வெயிட் செய்தான்,

அவள் வெட்கப் பட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தாள்,

‘உங்க பேர்..’ என்று அவன் ஆரம்பிக்க, அவன் பேரைக்  கேட்கிறான் என்று நினைத்து, அவள் சொல்லப் போகையில் 'சித்ரா' என்றான் அவன்,

அவள் ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தாள், ‘எப்படி தெரியும்?’ என்று அவள் கேட்கையில், ‘ஐயாவாலே, முடியாததே கிடையாது, ‘என்று அலட்டிக் கொண்டான், அவள் சிரித்துவிட்டாள், அவன் குனிந்து எதையோ தேடினான்

'என்ன தேடறீங்க?'என்று கேட்டாள்

அவனோ ' இங்கே, ரொம்ப சில்லரைங்க, விழுந்த சப்தம் கேட்டுதுங்க அதான் பார்த்தேன்,' என்றான்

'அது ரொம்ப சில்லறையா இருக்கு,' என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.