(Reading time: 19 - 38 minutes)

ந்த  வேலைய சிறப்பா செய்துட்டு க்ரவ்ண்ட்ல இருந்து……. அதாவது குளத்துல இருந்து…….ஆமாம் சம்மர்லலாம்  குளத்திலிருக்கும் தண்ணீர் அளவு குறைந்து சுருங்கி ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட….அந்த காய்ந்த சிவப்பு மண் குளத்தரைதான்  ப்ளே கிரவ்ண்ட் எல்லோருக்கும்…..

மழை வந்த பிறகு ஊர் மைதானம் டெம்ரரியா அந்த கடமை ஆத்தும். ஆக இப்ப குளத்திலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவன்…… இப்டி சைக்கிள் ஓட்றது அவரது ஃபிட்னெசின் ரெண்டாவது ரகசியம்….

‘ பவிட்ட எப்டி கம்யூனிகேட் செய்றது…… இப்டி மொபைலை அட்டென் செய்யாம…..வீட்டுக்குள்ள வேற போய் இருந்துகிட்டான்னா…..எப்டி மெசேஜ் பாஸ் பண்றது…. அழுதுகிட்டே போனாளே….’ என்ற சிந்தனையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவன் கண்ணில் படுகிறாள் அனு…. டாக்‌ஸியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

“வரே வா…..அண்ணா நேத்து அவ்ளவு ஃபீல் பண்ணான்…..அண்ணி இன்னைக்கு என்ட்ரி கொடுத்தாச்சு…..சீக்கிரமா வீட்டுக்குள்ளயும் என்ட்ரி கொடுக்க வைக்கேன்….” இவன் மனம் குதிக்காத குறையாக துள்ள

அதற்குள் அனு இவன் வீட்டிற்குள்தான் போனாள்.……டாக்‌ஸி வெயிட்டிங்…….ஓ வீட்டுச் சாவி வாங்க போறாங்க…..

Related: You might also like... 

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

Don't miss it... 

‘ஆகா அபை அடுத்த கல்யாண வேலைய ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துட்டுடா…… அதுக்கு முதல்ல அண்ணிய பத்தி நல்லா தெரிஞ்சுக்கனும்….’ என்ற முடிவோடு வேக வேகமாக தன் வீட்டை நோக்கிப் போனான்…

இவன் வீட்டை அடையும் முன் அவள் வெளியே வந்து கொண்டிருந்தாள்…. நேருக்கு நேராக அவள் பார்வையில் வரவும்…

 “ஹாய் அனு….(அண்ணின்னு சொல்லத்தான் ஆசை…..இவங்க கூட ஒத்துப்பாங்க….தப்பித் தவறி அதி காதுல அது விழுந்து அவன் அலர்ட் ஆகிடக் கூடாது…) வெல்கம் பேக்….”என்று வரவேற்றான்….

போனதடவை வந்து போனதைவிடவும் அவள் இன்னுமாய் ஒரு மாதிரி மெலிந்து…..வெளிறி ….ஏதோ சாப்டாமல் கிடந்தவள் போல்….ஆனால் முன்பைவிட ஒருவித அழுத்தமாய் அவள் இருப்பதாய் படுகிறது இவனுக்கு….

“ஹாய் அபயன்…” என அவள் புன்னகைத்தாலும்…. “ஆன்டி கார்ல வெயிட் பண்ணிட்டு இருகாங்க….அப்றம் பார்க்கலாம்….” என்று உடனடியாக விடைபெற்று நடந்துவிட்டாள்.

அபயனுக்கு சட்டென புரிகிறது….. ‘அனு அண்ணி ரொம்பவும் பண கஷ்டத்துல இருக்காங்க போல…. ‘ போனதடவை அவள் நடந்து தானே இந்த கொண்டல் புரத்திற்கு வர முயன்றாள்……இப்டி டாக்சி எடுத்துறுக்கலாமே…. இப்பவும் பார்க்க பஞ்சத்துல அடிபட்ட மாதிரி ஒரு தோற்றம்….

அதி கூட இவங்க மேரேஜ் நடக்கிற டைம்ல நடக்கும்….ஆனா அதுக்கும் முந்தி இப்ப உடனடி தேவைய கவனிச்சாகனும் போலயே…. என்ன செய்யலாம்…..?

யோசனையுடன் இவன் தன் சைக்கிளை நிறுத்த வீட்டின் பின் புறமிருந்த ஷெட்டை நோக்கிப் போக….. அங்கு

“ஏய் உனக்கு மாங்கா வேணும்னா இங்க வான்னு சொன்னேன்….” என காம்பவ்ண்ட் சுவருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த யாரையோ பார்த்து நிலவினி சொல்லிக் கொண்டிருப்பது இவன் கண்ணில் படுகிறது….

சுவர் குட்டை சுவர் என்பதால் வெளியில் நடப்பது இவனுக்கு நன்றாகவே தெரிகிறது…

ஓடிக் கொண்டிருந்த சிறுவன் நின்று திரும்பிப் பார்க்கிறான்…

“இங்க பார் கேட்காம பறிச்சாதான் எனக்கு பிடிக்காது……கேட்டா தரத்தான் செய்வேன்….” சுவரின் உட்பக்கம் இங்கு நின்று இவள் பேச….பையன் அந்த பக்கம் யோசனையாக பார்த்தபடி சுவரை நோக்கி வந்தான்.

இவர்கள் வீட்டு மாமரத்தில் காய் திருட வந்திருப்பானாய் இருக்கும் என இவனுக்கு புரிகிறது…

“கேட்காம பறிச்சா அது திருட்டு….. நானே போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்…..ஆனா உனக்கு வேணும்னா இனிமே என்ட்ட வந்து கேட்கனும் சரியா…..?” இவள் கேள்விக்கு யோசனையாய் தலையாட்டுகிறான் பையன்….

உள்ளே விழுந்து கிடந்த மாங்காய் இரண்டை எடுத்து அந்த பையனிடமாக இவள் கொடுக்க……அதே நேரம் யவி அங்கு வர இவன் திரும்பி வந்துவிட்டான்…..

‘அவங்க டைம்ல இவன் போக வேண்டாம்….’ என்பது இவனுக்கு….

ஆனாலும் அனு விஷயத்தில் யாரிடம் உதவி கேட்கலாம் என்பதும் இவனுக்கு புரிகிறது….. ‘வினி அண்ணிட்ட பேசனும்….’ முடிவு செய்து கொண்டான் இவன்.

தூத்துக்குடியில் போய் பவிஷ்யா வீட்டில் பேசிவிட்டு….அடுத்தும் தன் மில்லுக்கு சென்றுவிட்ட அதிபன் இரவு இருட்டிய பின்தான் வீடு திரும்பினான்…..

வீட்டின் பின் புறம் போய் கார் பார்க் செய்யப் போகும் போது இயல்பாய் வழக்கம் போல் அவன் பார்வை அனு வீட்டின் மீது சென்று திரும்ப அங்கு எரிந்து கொண்டிருக்கிறது மின்விளக்கு என்றது அது….…..

 ‘ஓய்…..வந்துட்டா வெள்ளக் கோழி….’ துள்ளுகிறது இவன் மனம். நிம்மதியும்தான் அதில் இப்போது….

அவ்வபொழுது அவன் மனதில் வந்து கொண்டிருந்த அவள் நினைவு நேற்றிலிருந்து அலை அலையாய் அவனை அலைகழிப்பதில்….. அவளை அப்போதே சென்று பார்த்துவிடுவது என தோன்றிவிட்டது அவனுக்கு…. அவள் வீட்டை நோக்கிச் சென்றான்….

அவன் போகமல் இருந்திருக்கலாமோ?.....இல்ல போனதுதான் சரியா….?

தொடரும்!

Episode # 17

Episode # 19

{kunena_discuss:929}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.