Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 14 - 28 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It
Author: Renu

07. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

ரவு முழுதும் தூக்கம் வராமல் புரண்டான் மதி. என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனால் சொல்ல இயலாத வலி. அது உடலிலா அல்லது மனதிலா அதுவும் புரியவில்லை. தொண்டைக்குழிக்குள் ஏதோ ஒன்று அடைப்பது போல யாரோ தன் குரல் வளையை நெரிப்பது போல. இரவு முழுதும் உறக்கம் இல்லாமல் அதிகாலையில் உடல் அசதி அவனை சிறிது தூக்கதிர்க்குள் தள்ளியது. அது காதலோ சகோதர பாசமோ  தாய் பாசமோ ஒருவர் மீது அளவு கடந்த நேசம் கொள்ளும்போது அவர் நம்மை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் அவருக்கு ஒரு தீங்கு நேரும்போது அது அவரிடம் அன்பு கொண்டவர்களுக்கு அதை உணர்த்தி விடுகிறது.

மெல்ல கண்விழித்த மதுவால் அந்த இருளை தாண்டி எதையும் காண இயலவில்லை.  தான் எங்கு இருக்கிறோம் எத்தனை நேரமாக இங்கே இருக்கிறோம் என்று யோசித்தவளுக்கு கிரணுடன் நடந்த போராட்டம் நினைவுக்கு வந்தது. இது எந்த இடம் என்று கண்களை விரித்து திறந்து பார்க்க  முயன்று  தோற்றாள். உடலின் ஒவ்வொரு அணுவும் விண்ணென்று வலியில் தெறிக்க கைகளை ஊன்றி மெல்ல எழமுயற்சித்தவள் கீழே விழுந்தாள். வலியில் அம்மா என்று கத்தியவள் மீண்டும் மயங்கி சரிந்தாள்.

நேற்று இரவில் இருந்து இதோ இப்போது வரை மதுவை தொடர்பு கொள்ள இயலாமல் தவித்தார் மங்களம். இரவில் அவள் அழைப்பை ஏற்க வில்லை என்ற போது வேலையில் பிஸியாக இருப்பாளாயிருக்கும் என்று எண்ணினார். காலையில் எழுந்ததும் அழைத்து பார்த்த போது மொபைல் அனைத்து வைக்கபட்டிருப்பதாக சொல்லவும் இரவில் சார்ஜ் இல்லாமல் அணைந்திருக்கும் சிறிது நேரம் கழித்து அழைக்கலாம் என்று சமையல் வேலை எல்லாம் முடிந்து அவளை அழைத்தார். தினமும் இந்த நேரம் மது அலுவலகம் சென்றிருப்பாள் என்று திரும்பவும் அவளை அழைத்தவருடைய முயற்சி இந்த முறையும் தோல்வியில் முடிய அவருக்கு பயம் தொற்றி கொண்டது. நிச்சயம் மது இவ்வளவு பொறுப்பற்றவள் அல்ல. திவ்யாவும் உடனில்லை. ஒருவேளை அவளுக்கு உடல் நிலை சரி இல்லையோ என்று பதறியவர் அதற்க்கு மேல் ஒரு கணம் கூட தாமதிக்காமல் தங்கள் அறையை நோக்கி ஓடினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"ஏங்க .." என்று மூச்சிரைக்க ஓடி வந்த மனைவியை கண்ட சிவசண்முகம்

"என்ன மங்களம் ஏன் காலிலேயே இப்படி டென்சனொட வர்ற. பொறுமையா வாம்மா." என்று சொல்ல,

"ஐயோ இல்லைங்க நான் நேத்து ராத்திரில இருந்து மதுவோட நம்பருக்கு டிரை பண்றேன் ஆனா கெடைக்கவே இல்லை. சுவிட்ச் ஆப்னே வருது. " -மங்களம்

"சார்ஜ் போட மறந்துருப்பாமா. அதுக்கு ஏன் நீ இப்படி பதட்டபடற?" -சிவசண்முகம்

"இல்லைங்க இந்நேரம் மது ஆபீஸ் போயிருந்தா நிச்சயம் ஆபீஸ் நம்பருல இருந்து கால் பண்ணி விவரத்தை சொல்லிருப்பா. திவ்யா வேற இல்லை. அவ தனியா அங்க... அவளுக்கு ஒடம்புக்கு எதுவும் முடியலையோனு எனக்கு மனசு கெடந்து அடிச்சிக்கிது. " என்ற மங்களத்தின் கண்களில் அதற்குள் நீர் கோர்க்க,

"என்னம்மா... அழாத. இப்போ என்ன உனக்கு மதுகிட்ட பேசணும் அவ்வளவு தான, வா " என்று மங்கலத்தை அழைத்து கொண்டு தங்கள் அறையை விட்டு வெளியே வந்தவர், சரணையும் ரகுவையும் அழைத்தார்.

"சரண் உங்க பெரியம்மா நேத்து நைட்ல இருந்து மதுகிட்ட பேச டிரை பண்ணிருக்கா. மொபைல் சுவிட்ச் ஆப் அப்படினே வருது. ஆபீஸ் நம்பர்ல் இருந்தும் இன்னும் மது கால் பண்ணலை. மதுக்கு ஒடம்புக்கு எதுவும் பிரச்சனையோன்னு பயப்படறா. நீங்க ரெண்டு பெரும் அவ ஆபீஸ் க்கு கால் பண்ணி மதுக்கு பேசுங்கப்பா. " என்றா. சிவசண்முகம்.

"சரிங்க பெரியப்பா. ஒரு நிமிஷம் நான் திவ்யாவுக்கு கால் பண்ணி அங்க ஆபீஸ்ல அவ பக்கத்து டெஸ்க் நம்பர் வாங்கறேன்." என்ற சரண் உடனே திவ்யாவை அழைத்து சுருக்கமாக விவரத்தை சொல்லி அவர்களின் டீம் லீடரின் எண்ணை பெற்றவன், அந்த எண்ணிற்கு அழைத்தான்.

" ஹலோ கேன் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் விநாயக் ? " -சரண்

மறுமுனையில் பதில் வரவும், "ஐ யாம் சரண், மதுமதி'ஸ் பிரதர். கேன் யு ப்ளீஸ் கிவ் தி போன் டு ஹேர் ? " என்றவனுக்கு மறுமுனை பதில் அளிக்கவும், "ஒஹ் ஒகே மிஸ்டர் விநாயக். தேங்க்ஸ் பார் யூவர் இன்பார்மாசன்" என்று நன்றி சொல்லிவிட்டு தன பெரியப்பாவிடமும் பெரியம்மவிடமும் திரும்பியவன்," பெரியப்பா, மது இன்னைக்கு ஒபிஸ் வரலையாம். நேத்து ரொம்ப லேட்டா தான் வீட்டுக்கு போயிருக்கா. " என்று சொல்ல, இப்போது அனைவர் முகத்திலும் கவலை குடி கொண்டது.

"நீங்க கவலை படாதிங்க பெரியம்மா. மது ஹாஸ்டல் பக்கத்துல தான் என் ப்ரெண்ட் வீடு இருக்கு. நான் அவனுக்கு கால் பண்ணி மதுவை நேரா போயி பார்த்துட்டு வர சொல்றேன் " என்ற ரகு தன் நண்பனை அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவனே திரும்ப அழைப்பதாக சொல்லவும் அந்த அழைப்பிற்காக காத்திருந்தனர் அனைவரும். காலை சிற்றுண்டியை உணவு மேசை மேல் வைத்து விட்டு யாரும் உண்ண வராமல் மதுவிற்கு உடலுக்கு என்னவோ என்று கவலையுடன் அமர்ந்திருந்தனர். அவள் உடல் நிலையை தவிர வேறேதும் அவர்களால் யோசிக்க முடியவில்லை. 

ரகுவின் மொபைல் அடிக்கவும் எல்லோரும் ஆர்வமுடன் ரகுவை நோக்கினர்.

"ஹலோ " -ரகு

"...."

"ஒஹ் சரி சரி " -ரகு

"......"

"வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையே, சரி நீ பார்த்துக்கோ கூடவே இரு நான் உனக்கு திரும்ப கால் பண்றேன்  " -ரகு.

" என்ன ரகு என்ன ஆச்சு எதுவும் பிரச்சனை இல்லையே " -பதற்றத்துடன் ரகுவின் முகத்தையே பார்த்திருந்த தன் பெரியம்மாவிடம்," ஐயோ பெரியம்மா, மதுக்கு ஒண்ணும் இல்லை. அவளுக்கு லேசான பீவர். என் பிரெண்டு பாத்துக்கறேன்னு சொல்லிட்டான். அவ இப்போ தூங்கிட்டு இருக்கா. எழுந்ததும் உங்களுக்கு பேச சொல்றேன். சரியா " என்று தன் பெரியம்மாவை சமாதனபடுத்தியவன் "ஒண்ணும் பிரச்சனையில்லை பெரியப்பா. நான் மதுவை பேச சொல்றேன். " என்று கூறி எல்லோரையும் ஒரு வழியாக சாப்பிட செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

அவன் பின்னேயே சென்ற சரண், "என்ன ஆச்சு ரகு ?" என்று திரும்பி நின்றவனின் தோளை தொட்டு திருப்ப, "அண்ணா..." என்று சரணை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினான் ரகு.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Renuga Devi

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிDivya 2016-05-26 12:19
Hellooooo sis very very nice update
Episode start aanathum theriyala mudinjathum theriyala viru viru nu irundhuchu indha episode
Madhu kandipa pozhachiduvanga athellam onnnum aagathu nu namburaen neengalum nambunga
Vera ethuvum solla thonala konjam feelings ah iruku so ithoda En urayai mudithu kolgiraen
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிThansiya 2016-05-26 11:59
nice update mam.. madhu palasu ellam maranthutuvanganu matum solitathinga renu plese.... sikrama next update. kotunga. waiting ya
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிRenugadevi 2016-05-26 18:03
Kandippa appadi solla matten :no:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிRenugadevi 2016-05-25 19:13
பிரெண்ட்ஸ் இந்த முறை 9 பக்கங்களாக வர வேண்டிய பகுதி என் நேரமின்மை காரணமாக மீதமுள்ள பக்கங்கள் அடுத்த பகுதியில் வெளிவரும். அதனாலோ என்னவோ இந்த பகுதி முழுமையடையாததை போல ஒரு தோற்றம் எனக்கு
Reply | Reply with quote | Quote
# SuperKiruthika 2016-05-25 10:38
Nice Update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிDevi 2016-05-25 09:27
Nice update Renuka (y)
Madhu virku accident mattum thaan agiyirukka :Q: Doctor enna solla porar :Q: Mathi ku eppo theriya varum :Q:
waiting to know.. (y)
Reply | Reply with quote | Quote
# Good Update RenukaChillzee Team 2016-05-25 08:05
(y)
Madhu ku ethum agathu la :Q:
Mathi ku ithu therincha avan epdi react panuvan :Q:
Antha kiran enna aanan :Q:

Waiting to know more
Reply | Reply with quote | Quote
# ampmadhumathi9 2016-05-25 07:30
i pray 4 madhu & mathi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிUma. N 2016-05-25 06:43
OMG :no: Please save madhu avalukku onnum aaga koodadhu, waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அனல் மேலே பனித்துளி - 07 - ரேணுகா தேவிChithra V 2016-05-25 06:17
Oh ipo madhu ku ennagum :Q:
Mathi ku matter teriya vandha eppadi feel pannivan :Q:
Waiting to read more :)
Nice update renu (y) (y)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top