(Reading time: 14 - 28 minutes)

"கு என்னாச்சு .. நீ அழாம சொல்லு. எனக்கு பயமா இருக்குடா. நீ மொதல்ல வா " என்று ரகுவை இழுத்து சென்று காரில் அமர்ந்தவன் காரை வேகமாக செலுத்தி அருகில் இருந்த கோவிலில் கொண்டு வந்து நிறுத்தினான்.

" சொல்லு ரகு என்ன ஆச்சு ? " -சரண்

"அண்ணா நம்ம மது நேத்து நைட்ல இருந்து ஹாஸ்டலுக்கு வரவே இல்லை.. " என்று ரகு சொல்ல, சரணின் முகம் பயத்தில் வெளிறி போனது.

" இதை சொன்னா வீட்டுல எல்லாரும் ரொம்ப பயந்துடுவாங்க அதனால தான் நான் அப்படி பொய் சொல்ல வேண்டியதா ஆயிடுச்சு. உனக்கு தான் தெரியுமே என் ப்ரெண்ட் அப்பாதான் கமிஷனரா இருக்காருன்னு. அவர்கிட்ட சொல்லிருக்கு. " என்ற ரகுவை அணைத்து கொண்டான் சரண்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இருவரும் வெகு நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர். பின்னர் ஒரு முடிவுடன் நிமிர்ந்த சரண், "ரகு நாம இப்போவே பெங்களூரு போறோம் வீட்டுல யாருக்கும் இப்போ எதுவும் தெரிய வேண்டாம். அங்க போனதுக்கு அப்பறம் நிலைமை என்னனு பார்த்துட்டு அப்பறம் சொல்லிக்கலாம். " என்றவன் சில எண்களை அழைத்து பேசினான். பின்பு டிராவல் அஜென்சியை அழைத்து பிளைட் டிக்கெட் புக் செய்தவன், வீட்டிற்கு சென்று ஒரு முக்கியமான காண்டிராக்ட் விஷயமாக மும்பை செல்வதாக கூறிவிட்டு சரணும் ரகுவும் பெங்களூரை சென்றடைந்தனர்.

"இது என் ப்ரெண்ட் அரவிந்த். இவரு அவங்க அப்பா. கமிசனரா இருக்கார். " என்று தன் நண்பனையும் அவர் வீடினரையும் சரணுக்கு அறிமுகபடுத்தினான் ரகு.

"அப்பா, ஏதாவது விவரம் கிடைச்சுதா " -சரண்

" ஆபிசியலா விசாரிக்க வேண்டாம்னு சொன்னதால எனக்கு தெரிஞ்ச ரெண்டு இன்ச்பெக்டர்ஸ் கிட்ட சொல்லிருக்கேன். இன்னும் ஒரு ஹால்ப் அவர்ல அவங்க இங்க ரீச் ஆயிடுவாங்க. " என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே அந்த இருவரும் வந்து சேர்ந்தனர்.

"சொல்லுங்க ஏதாவது விவரம் தெரிஞ்சுதா. " - கமிஷனர்

"சார், மது நேத்து நைட் ஹாஸ்டலுக்கு போறதுக்காக டாக்ஸி புக் பண்ணிருக்காங்க. ஆனா டிராப்பிக் ரொம்ப அதிகமா இருந்ததால டாக்ஸி சொன்ன டைமை விட ஒரு மணி நேரம் லேட்டா தான் போயிருக்கு. ஆனா அங்க மது இல்லை. மதுவை காண்டாக்ட் பண்ண டிரைவர் முயற்சி பண்ணிருக்காரு. அவங்க கால் அட்டெண்ட் பண்ணலை. அதனால லாஸ்ட்டா அவங்க மொபைல் எந்த எடத்துல சுவிட்ச் ஆப் ஆயிருக்குன்னு கண்டுபிடிக்க சொல்லி சைபர் டீம்ல இருக்குற என் ப்ரெண்ட் கிட்ட சொல்லிருக்கேன் சார். இன்னும் ஒரு 10 மினிட்ஸ்ல அவர் தேவையான இன்பார்மஷனை கொடுத்துருவார். " என்றனர்.

சரணும் ரகுவும் தங்கள் தங்கைக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாது என்று உலகில் உள்ள அணைத்து தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்திருந்தனர்.

சரியாக பத்து நிமிடங்களில் அந்த இன்ச்பெக்டர்களில் ஒருவரின் மொபைலுக்கு அழைப்பு வர அந்த அழைப்பை ஏற்று பேசியவர் இரண்டு நிமிட உரையாடலுக்கு பின் கமிஷனரிடம் " சார் அந்த பொண்ணுடைய போன் எலெக்ட்ரானிக் சிட்டிக்கும் பன்னர்கட்டாக்கும் இடையில இருக்குற ஒரு பாரெஸ்ட் ரேஞ்சுல சுவிட்ச் ஆப் ஆயிருக்கு. " என்று சொல்ல ,

"ஓகே கைஸ், தேங்க்ஸ் போர் யுவர் குய்க் அப்டேட். வில் கோ தேர் " என்று சொல்லி கிளம்ப அவர்களுடன் சரணும் ரகுவும் சென்றனர்.

மதிய வேளையாக இருந்தாலும் அந்த அடர்ந்த காட்டினுள் வெளிச்சம் சற்று குறைவாக இருந்தது. முன்னாள் சென்ற போலிஸ் ஜீப் பின்னாடியே சென்ற சரணும் ரகுவும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இருவர் உள்ளமும் தங்களின் தங்கைக்காக பிரார்த்தித்து கொண்டிருந்தது. எங்கு செல்கிறோம் என்ன செய்கிறோம் என்று அவர்கள் அறியாமல் அவர்களின் கைகள் காரை செலுத்த மனமோ பயத்தின் உச்சத்தில் இருந்தது. இதற்க்கு முன் இது போலொரு பயத்தையோ பதற்றத்தையோ அவர்கள் இருவரும் உணர்ந்தது இல்லை. இப்போதும் மனம் இவர்கள் சொல்வதெல்லாம் தவறு தன் தங்கை அவளுடைய நண்பர்களின் வீட்டிற்கோ அல்லது எதாவது பிக்னிக்கோ சென்றிருப்பாள் என்று எண்ண விழைந்தது. ஆனால் புத்தியோ இவர்கள் சொல்வது தான் சரி மது ஏதோ மிகப்பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்று உணர்த்தியது. நேரம் செல்ல செல்ல வீட்டில் உள்ளவர்கள் மதுவின் அழைப்பிற்காக காத்திருப்பார்களே என்று கலங்கவும் செய்தார்கள்.

சட்டென்று போலீஸ் ஜீப் நிற்கவும் நிகழ்விற்கு வந்தவர்கள் தாங்கள் வந்து நின்ற இடத்தை பார்த்தனர். அடர்ந்த காடு, ஒருபுறம் வானை தொடும் மரங்கள், மறுபுறம் சறுக்கலான பகுதி முட்களும் பாறைகளும் நிறைந்து அடர்ந்து இருந்தது. அந்த சரிவான பகுதி அந்த நேரத்திலும் இருண்டு தெரிந்தது. அந்த இடத்தை பார்க்கும் போது ஆண்களாகிய தங்களுக்கே மனதில் ஒரு விட பயம் படர்வதை அவர்களால் உணர முடிந்தது.

"சார் ஏன் இங்க இறங்கினோம் ?"-ரகு

"இங்கே ஒரு ஆக்ஸிடென்ட் நடந்ததுக்கான அறிகுறிகள் இருக்கு. " என்ற படி அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை ஓட்டினார் அந்த இன்ஸ்பெக்டர்.

அங்கே காரின் உடைந்த கண்ணாடி துண்டுகள் இருந்தது. கார் தாறுமாறாக ஓடியதற்கான தடங்கள் இருந்தன. சற்று நேரம் அந்த கார் டயர் தடங்களை தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் கமிஷனரிடம் பேசினார், பின்னர் சரணிடமும் ரகுவிடமும் வந்த கமிஷனர், "இந்த சரிவுல தேடலாம்னு சொல்றாரு. அதுக்கான ஆட்களை வர சொல்லிருக்கு. அது வரைக்கும் நீங்க காருல வெயிட் பண்றிங்களா. ?" என்றவரிடம் "இல்லை சார் இங்க ஏன் தேடணும், நீங்க உங்களுக்கு என்ன மாதிரியான அச்சம்ஷன் தோனுதுனு சொல்ல முடியுமா ?" என்ற சரணிடம்,

"யாரோ தாறுமாறா வண்டியை ஓட்டி இந்த மரத்துல இடிச்சிருக்காங்க " -கமிஷனர்

"ஆனா அது இப்போ நடந்ததுனு எப்படி சொல்ல முடியும்  அங்கிள்?" -ரகு

"இதோ வண்டி இடிச்சதுல மரத்தோட தோல் உரிஞ்சுருக்கு. ஆனா அது காய்ஞ்சு போகாம பிரெஷா இருக்கு. சோ அக்சிடென்ட் ஆனது ஒரு டென் ஹவர்ச்க்குள்ள தான் இருக்கும் " என்றவர் அந்த இரு இன்ஸ்பெக்டர்களையும் அழைத்தார்.

"இன்னும் ரெஸ்கியூ டீம் வர எவ்வளவு நேரம் ஆகும் ?" -கமிஷனர்

"ஒரு மணி நேரம் ஆகும் சார் " –இன்ஸ்பெக்டர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.