(Reading time: 25 - 49 minutes)

துக்கு தார்கி நீ இப்டிலாம் செய்ற…..? மாட்றப்ப உனக்கு எவ்ளவு பெரிய பனிஷ்மென்ட் கிடைக்கும் தெரியுமா?” அவளையும் மீறி அக்கறையும் இரக்கமும் சரி பங்கு கலந்திருந்தது இந்த கேள்வியில்….

ஒரு மாதிரி சமாளித்து சிறு புன்னகையாய் சிரித்தாள் தார்கிகா “தப்பு செய்தா தண்டனைய அனுபவிச்சுதானே ஆகனும்…” அவள் கண்ணில் நீர் கட்டுகிறதோ….குனிந்து சமாளித்தாள் அவள்….

இதில் விழுந்தே போனாள் மனோ….  ‘

தார்க்கிய யாரும் இப்படி செய்ய வைக்காங்களோ…..? கொஞ்சம் குழந்தை தனமான பொண்ணை எதையோ சொல்லி ஏமாத்தி மாட்டிவிடப் பார்க்காங்க போல…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

தார்க்கிகாவுக்கு அம்மாவோ கூடப் பிறந்தவங்களோ யாரும் கிடையாதுன்னு சொன்னாங்களே அண்ணி…. இப்ப அப்பாவும் கூட இல்லைனதும் பிடிச்சு வச்சு மிரட்டுறாங்களோ....???

இல்ல இப்டில்லாம் செய் உன் அப்பாவை காப்பத்தலாம்னு நம்ப வைக்காங்களோ.....அப்பா மட்டுமே உலகம்னு வளந்த பொண்ணுக்கு அப்பா மேல பாசம் இருக்கும்தானே…. அப்பாக்காகன்னு அவளுக்கு பிடிக்கமலே இதையெல்லாம் செய்றாளோ...?

அவள் செய்ற காரியம் இவளுக்கு எள்ள்ளவும் உடன்பாடு இல்லை எனினும் அப்பாக்காக இருக்குமோ என்ற நினைவில் மனோ தடுமாறிப் போனாள்….. மனோ மனதில் அவள் அப்பாவோட இடம் அப்படி….

ஆனால் அடுத்து எதுவும் இவள் சொல்லும் முன்னும் விரைத்தாள் தார்க்கிகா… “என்ன  வந்த வேலையைப் பார்க்காம உளறிட்டு இருக்க…? உயிர் மேல ஆசை இல்லையா உனக்கு….?” எரிந்து விழுவது போல ஒரு தொனி…

அப்படின்னா இங்க நடக்கிறத எல்லாம் யாரோ வாட்ச் செய்து இந்த தார்க்கி என்ன பேசனும்னு வரை கைட் பண்றாங்க…..தார்க்கிகாட்ட ப்ளூடூத் எதுவும் இருக்கும் போல….

மனோவும் இப்போது அமைதியாக தான் செய்ய வந்ததை மட்டுமாய் செய்வதாய் காட்டிக் கொண்டாள்.

அங்கிருந்த ஒரு சேரில் சென்று அமர்ந்தவள் தன் லேப்டாப்பை திறந்தாள். ஆனால் மனம் முழுவதும் இப்ப என்ன செய்யனும் …என்ன செய்யனும் என்ற கொந்தளிப்பு

அந்த நொடி வீல் என்ற வீறிடல் எங்கிருந்தோ காதில் வந்து விழுகிறது இவளுக்கு…..

இன்பா!!!!!!

இவள் துள்ளி எந்திருக்கும் முன்னம் கதவை நோக்கி பாய்ந்திருந்தாள் தார்கிகா …”ஐயோ என்னாச்சு….” என

அவளை தொடர்ந்து இவளும் ஓடினாள்….

“டேய் பிடிடா அவள…..”

“முதல்ல அவ வாய மூடுடா….”

“ஓங்கி மண்டைல ஒன்னு போடுடா மயங்கி விழட்டும்…. நமக்கு வசதியா இருக்கும்…”

ஓட ஓட ஒவ்வொரு குரலாய் காதில் விழ…..தார்கிகா கையில் பிஸ்டலை உருவி இருந்தாள் எனில்…..மனோவுக்கு மனதிற்குள் மல்யுத்தம்…

சற்று தொலைவில் முன்னால் பூட்டு தொங்க தனியாய் நின்ற இன்னொரு வீட்டு பின் பகுதிக்கு ஓடினாள் தார்கி….

அவளும் மனோவும் உள்ள போறப்ப…

இன்பா தரையில் விழுந்து கிடந்தாள்…..வாய்க்குள் ஏதோ திணிக்கப்பட்டு ஓர வாயில் இரத்தம் வழிந்தது….  அவள் இரு கைகளையும் இரு புறமும் இழுத்து விரித்து ஒவ்வொரு கையிலும் ஒருவன் கால் வைத்து மிதித்து அசையவிடாமல் அவளை…. அருகில் அடுத்து நின்றவன் என்ன செய்ய இருந்தானோ…

சற்று தொலைவில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒருவன் தலை உடைந்து ரத்த அருவி…. அவன் அருகில் விழுந்து கிடந்தது ஒரு மர நாற்காலி….

இதற்குள் கையிலிருந்த பிஸ்டலால் தார்க்கிகா எதையோ குறி பார்க்க……அவள் கையில் விழுகிறது ஒரு ஆண் காலின் இரும்பு உதை. பிஸ்டல் எங்கோ பறக்க…கையை பிடித்து கொண்டு “அண்ணா….!!!!” என்றபடி துள்ளிப் போய் விழுந்தாள் அவள்…..

“அண்ணா இங்க வாண்ணா…..” தார்க்கி கத்தும் போது அவள் மீது பாய்ந்திருந்தான் இன்னொருவன்….

“இவளை முதல்ல கவனிக்கனும்டா….ரொம்ப நாளா கைல சிக்காம சுத்துது லூஸு….”

“டேய் அது விக்கி தங்கச்சிடா..”

“அதுக்கென்ன…...இன்னைக்கு விஷயத்தை அவன் யார்ட்ட சொல்ல முடியும்…..? செய்றதெல்லாம் இன்னைக்கே செஞ்சுகிடனும் நாம…”

நடப்பதில் ஒரு கணம் நிலை புரியாமல் நின்றாலும், மனோ மனம் அவசர கதியில் சூழலைப் படிக்க… ஒன்று மட்டும் அவள் அறிவுக்கு படுகிறது…. பெண்கள் மூவருக்குமான இப்போதைய பாதுகாப்பு விழுந்து கிடக்கும் பிஸ்டல் தான்…..

பின் வாசல் போகும் பாதையில் விழுந்து கிடக்கும் அதை நோக்கி அவள் ஓடி…. குனிந்து அதை எடுக்கும் நேரம்….

குனிந்திருந்த அவளை இடையோடு வளைத்து தூக்கி….. அதே வேகத்தில அப்படியே திருப்பி… தன் உடல் பின்னால் நிறுத்தியது ஒரு கை….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.