(Reading time: 9 - 18 minutes)

02. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

"ட்சுமி!"-சிவன்யாவின் குரல் உலுக்கவும் ஓடி வந்தாள் லட்சுமி.

"என்னம்மா?"

"கோவிலுக்கு போயிட்டு வரேன்!"

"சரிம்மா!"-அவள் அர்ச்சனை தட்டை சரிப்பார்த்தப்படி வெளியே சென்றாள்.அவளது இல்லத்தில் இருந்து ஐந்து நிமிட நடைப்பயணத்தில் ஒரு சிவன் கோவில் உண்டு!!மனம் எப்போதெல்லாம் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று துடிக்கிறதோ அப்போதெல்லாம் அவள் அங்கு செல்வது வழக்கம்!!அந்த கோவிலுக்குள் காலடி பதித்ததும் மனம் லேசாகிவிடும் அவளுக்கு!!இன்றும் அதுபோலவே,அமைதியான மனதோடு கோவிலுக்குள் நுழைந்தாள்.

அன்று கோவிலில் அவ்வளவு கூட்டமும் இருக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

"யார் பேருக்கு அர்ச்சனை?"-என்ற குருக்களின் குரலில் கலைந்தவள்,

"சாமி பேருக்கு பண்ணிடுங்க!"-என்றாள்.அவளது தட்டை வாங்கியவரின் முன் வேறு அர்ச்சனை தட்டும் நீட்டப்பட்டது.

"யார் பேருக்கு அர்ச்சனை?"-அதே கேள்வியை கேட்டார் அர்ச்சகர்.

"சிவன்யா!மகர ராசி,திருவோணம் நட்சத்திரம்!"என்றது ஒரு ஆண் குரல்.தனது விலாசத்தை குறிப்பதை அறிந்ததும் திடுக்கிட்டு திரும்பினாள் அவள்!!கண்களை மூடிக்கொண்டு ஒன்றும் அறியாதவன் போல் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தான் அவன்.அவனது முகத்தை பார்த்ததும் ஒரே சமயத்தில் அன்பு,ஏக்கம்,கோபம்,வருத்தம்,என அனைத்து உணர்வுகளையும் ஒரு சேர உணர்ந்தாள் சிவன்யா!

பூஜை முடித்து வந்த அர்ச்சகர் இருவரிடமும் அர்ச்சனை தட்டுகளையும்,பிரசாதத்தையும் வழங்கினார்.

விழிகளில் கோபத்தோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா!

அவளது முகத்தை இரு நொடிகள் உற்று பார்த்தவன்,கையில் திணிக்கப்பட்ட குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்துவிட்டு,"ஈஸ்வரா!"என்றப்படி பிரகாரத்தை சுற்ற வர புறப்பட்டான்.

சட்டென அவனது தீண்டல் பட்டதும் அவளது முக இறுக்கம் தளர்ந்தது.அமைதியாக அவன் பின்னால் நடந்தாள்.அவள் பின்தொடர்வதை ஊகித்தவன் தனதுநடையை தளர்த்தினான்.

சில நொடிகளில் இருவரும் ஒன்றாய் நடக்க ஆரம்பித்தனர்.

ஏதும் பேசாமல்!!வழிபாடு முடிந்ததும்,இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர்.கனத்த மௌனம்!மௌத்தை விரட்ட வழி தெரியாமல் இருவரும் தவித்தனர்.

"அம்மூ!"-ஒருவழியாக மௌனத்தை கலைத்தான் திவாகர்.

"..............."

"மகேஷ் உடம்பு சரியில்லைன்னு சொன்னான்.இப்போ எப்படிம்மா இருக்கு?"-அவள் பதில் பேசாமல் எழுந்து கிளம்பினாள்.

"ஏ..அம்மூ!இங்கே பாரு..!ஸாரி...ப்ளீஸ் என் பேச்சை கேளு!"-பொது இடம் என்றும் பாராமல் கெஞ்சினான் அவன்.

அவனது அந்த கொஞ்சலில் சமாதானமானவள்,

"ஐயோ!இப்படியா கத்துவீங்க?வீட்டுக்கு வாங்க..."-அவள் சமாதானம் ஆனதை புரிந்துக்கொண்டவன் ஒரு புன்னகையோடு அவளோடு நடக்கலானான்.

அவன் வீட்டினுள் நுழைந்ததும்,லட்சுமி அவனை மிரட்சியாக ஒரு பார்வை பார்த்தாள்.

"என்ன மேடம்!எப்படி இருக்கீங்க?"

"ம்..நல்லா இருக்கேங்க!"-என்று அவசரமாக சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

"என்ன புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க?"-என்று விசித்ரமான ஒரு பார்வை பார்த்தான் திவாகர்.

"என்ன விஷயம்?"-யாரோ ஒருவரிடம் பேசுவதாக பேசினாள் சிவன்யா.

சில நேரம் அவளையே உற்று பார்த்தவன்,அவளுக்காக வாங்கி வந்த அந்த சிறிய பரிசை அவளிடம் நீட்டினான்.மிக எளிமையான மு றையில் அழகான வேலைப்பாடுகள் அமைந்த வைர சங்கிலி அது!!

"எனக்கு வேணாம்!"-எங்கோ வெறித்தப்படி கூறினாள் சிவன்யா.

"ம்..மேடமுக்கு கோபம் போகாதா?"

"பேசுறதை எல்லாம் பேசிட்டு இப்படி வந்து கொஞ்சினா மட்டும் பேசுனது எல்லாம் மறைந்துவிடாது!"

"ஆமா..!!தப்பு தான்!என்ன நிலைமையில இருந்தேன் தெரியுமா?அன்னிக்கு ஒருநாள் மட்டும் ஆபிஸ் போகாம உன் கூட வந்திருந்தா,இன்னிக்கு என் கம்பெனியே ப்லாப் ஆகி இருக்கும்!என் நிலைமையை புரிஞ்சிக்கோம்மா!"

"அதுக்கு வரமுடியாதுன்னு சொல்லி இருக்கலாம்ல!ஏன் அப்படி பேசுனீங்க?நான் உங்களுக்கு தலைவலியா இருக்கணும்னு என்னிக்கும் விரும்பலை!உங்களை தொந்தரவு பண்ணணும்னு நினைக்கலை!உங்களுக்கு அது மாதிரி தெரிந்தால் மன்னிச்சிடுங்க!"-அவளது பேச்சில் வெளியான மனவருத்தம் அவனை திடுக்கிட வைத்தது.

"ஏ..நீதான் எனக்கு எல்லாமே!நான் பேசுனது தப்பு தான்!அது இந்த அளவு உன்னை காயப்படுத்தி இருக்கும்னு நினைக்கலை!ஐ ஆம் ஸாரி...!அழாதே ப்ளீஸ்!"-அவளது கன்னத்தைப் பற்றியப்படி மெல்லிய குரலில் பேசினான் திவாகர்.

"இனி மறந்துக்கூட உன்கிட்ட கோபமா பேச மாட்டேன்!"

"நீங்க கோபமா பேசுறதைப் பற்றி பிரச்சனை இல்லைங்க..கோபத்துல என்ன பேசுறீங்கன்னு தான் பிரச்சனை!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.