"பேசுனேன் சார்!பட்,அந்த வீட்டைப் பற்றி நிறைய கதைகள் சொல்றாங்க!அது ஒரு பேய் பங்களான்னு!"
"வாட் நான்சன்ஸ்!எந்த காலத்துல இருக்க நீ?"
"இல்லை சார்...அது நிஜமா பயங்கரமா தான் சார் இருக்கு!யாரோ அங்கே தற்கொலை பண்ணிக்கிட்டதாகவும்,அவங்க ஆவி அங்கே இருக்கிறதாகவும் சொல்றாங்க.."
"கம் ஆன் அஸ்வின்!தேவையில்லாம பயப்படாதே!நீ அந்த வீட்டோட ரேட் எவ்வளவு சொல்லு!"
"80 லட்சம் சார்!"
"பிராப்ளம் இல்லை...அந்த வீட்டை கிளீன் பண்ற வேலையை ஆரம்பி!!"
"சார்...அந்த வீட்டுக்கு பின்னாடி ஒரு பெரிய ஆலமரம் வேற இருக்கு சார்!"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்...
"ஆலமரமா?"
"ஆமா சார்...இட்ஸ் லுக்கிங் வெரி ஸ்கேரி!"
"டூ சம்திங்...அந்த ஆலமரம் தெரியாத அளவுக்கு ஒரு காம்ப்பௌன்ட் போடுங்க!என் சிவன்யா இதுக்கெல்லாம் பயப்படுவா,அவளுக்கு எதுவும் தெரிய வேணாம்!"
"எஸ் சார்!"-இணைப்பை துண்டித்தான் மகேஷ்.
"கதை சொல்றதுக்கு கிளம்பிடுவாங்க!"-என்று முனகியப்படி தனது அடுத்தப்பணியை பார்க்க கிளம்பினான் மகேஷ்.
விதியின் விளையாட்டிற்கு எதிரணியாய் மாறி கிளம்பினான் அவன்.
அன்றிரவு...
அந்த பங்களாவிலிருந்து அகோரமான சிரிப்பு சப்தம் எண்திசையிலும் ஒலித்தது.
"வரீயா!வா!உனக்காக தான் இத்தனை வருஷமா காத்துட்டு இருக்கேன்!நாடி நரம்பெல்லாம் பகை வெறி ஊறி போயிருக்கு!உன்னை கொன்று உன் ரத்தத்தால என் ஆத்மாவை புனிதமாக்குறேன்!வா!"-நாற்காலி மட்டும் ஆடிக்கொண்டிருக்க,அதிலிருந்து வந்தன இச்சொற்கள் யாவும்!!
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சிவன்யா திடுக்கிட்டு கண்விழித்தாள்.
முகமெல்லாம் வியர்வை!!உடலெல்லாம் நடுங்கியது!!
"உன்னை கொன்னு உன் ரத்தத்தால என் ஆத்மாவை புனிதமாக்குறேன் வா!"-அந்தச் சொற்கள் செவிகளில் ரீங்காரமிட்டன...
சுற்றும் பார்த்தாள்..மின்சாரம் தடைப்பட்டு இருந்தது!கருமேகங்கள் நிலவின் ஔியையும் அழித்திருந்தன..மனதை தைரியப்படுத்தி,ஒரு நிலைக்கு வந்தவள்,மெழுகுவர்த்தியை தேடி பற்ற வைத்தாள்.அச்சமயம் அவள் வலப்பக்கத்தில் சற்று தொலைவில் இருந்த நிலை கண்ணாடியில் ஒரு நொடி தோன்றி மறைந்தது அந்த கரும் உருவம்!!அவள் கவனிக்கதப்படி!
திடீரென அவளது கைப்பேசி அலற,அச்சத்தில் அலறிவிட்டாள் சிவன்யா.
அவள் இதயத்துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்கும் அளவுக்கு எகிறியது.சில நொடி தாமதித்து நிதானம் அடைந்தவள் கைப்பேசியை எடுத்தாள்.
"ஹலோ!"
"..............."
"யாரு?"
"............."
"ஹலோ!"
"ஐ லவ் யூ செல்லம்..!"-திடுக்கிட்டவள்,அது திவாகரின் குரல் என்றதும் இயல்பானாள்.
"நீங்களா?"
"ம்..என்ன?நம்பரை கூட டெலிட் பண்ணிட்டியா?"
"இல்லைங்க....அது...நான்!"
"எதுக்கு டென்ஷனாகுற?"
"நான்...ஒரு..கெட்ட கனவு கண்டேன்!"
"கனவா?லூசு...ராத்திரி பேய் படம் பார்க்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா?"
"இல்லைங்க..எனக்கு!"
"ஏ...பயப்படாதேம்மா!ஒண்ணுமில்லை.."
"..............."
"அம்மூ..!!"
"ம்.."
"நான் இருக்கேன் குட்டிம்மா!எதுவா இருந்தாலும் என்னை மீறி தான் உன்னை தொட முடியும் சரியா?"
"ம்.."
"பயப்படாம தூங்கு!"
"என்னங்க.."
"என்னம்மா?"
"ஐ லவ் யூ!"
".............."
"ஏங்க..?"
"ஆ..சரிம்மா!நீ தூங்கு!"-அவனது சொற்கள் கொடுத்த நம்பிக்கையில் நிம்மதியாக உறங்க சென்றாள் சிவன்யா.ஆனால்,உண்மையில் நிகழ்ந்தது..!அவள் கைப்பேசியில் பேசிய அதே நேரம் திவாகர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்!!!
தொடரும்
{kunena_discuss:991}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.