(Reading time: 11 - 21 minutes)

03. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

டுத்த ஒரு மாதத்தில் அந்த பங்களாவின் நிலை சுத்தமாய் மாறி போனது.தூசுகள் யாவும் மாயமாகி,

மேலை நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பல பொருட்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.புத்தம் புது வண்ணம் பூசி,அந்த இல்லத்தின் அடையாளத்தையே மாற்றி இருந்தான் மகேஷ்.அவன் கூறியதை போல நெடுமதில் ஒன்று எழுப்பப்பட்டு அந்த ஆலமரத்தின் விலாசம் உடைக்கப்பட்டது.

"செம செலகஷன் மஹீ!"-பாராட்டினான் திவாகர்.

"தேங்க்ஸ்டா!அடுத்த வாரம் சிவாவோட பிறந்த நாள்!அன்னிக்கு,இந்த வீட்டை அவளுக்கு கிப்ட் பண்ண போறேன்!"-அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது.

"அடடா!அடுத்த வாரம் அவளது பிறந்தநாள் அல்லவா!"

"என்னடா!அப்படி முழிக்கிற?"

"அது..வந்து...நான் மீட்டிங் பற்றி யோசித்தேன்டா!"

"ஆபிஸ் வேலையை வீட்டில பார்க்க கூடாது!"

"யாரு அதை நீ சொல்ற!"-மகேஷ் அவனை பார்த்துப் புன்னகைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

திவாகரின் மனம் சிந்திக்க தொடங்கியது.

"அடுத்த வாரம்!அவளுக்கு என்ன பரிசளிப்பது?"அடுத்த வாரம் தொடங்க இன்னும் 4 நாட்களே எஞ்சிய நிலையில் அவன் மனம் இப்போது அசைப்போட தொடங்கியது.

"திவா!"

"ஆ...என்னடா?"

"இங்கே கொஞ்சம் வா!"-சற்றே பதற்றமாக மகேஷ் அவனை மேலே அழைத்தான்.

"என்னடா?"

"இந்த ரூம் திறக்க மாட்டுது!பாரேன்!"-மகேஷ் கூறவும்,திவாகர் அதன் கைப்பிடியை பிடித்து அழுந்த தள்ளிப்பார்த்தான்.

ம்ஹூம்..!அது அசையவில்லை.

"உள்பக்கமா!தாழ்ப்பாள் போட்ட மாதிரி இருக்கு!"

"என்னடா சொல்ற?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைடா!!தாழ்ப்பாள் துருப்பிடித்து மாட்டிட்டு இருக்கும்!அவ்வளவு தான்!அப்பறமா,எலக்ட்ரிஷனை கூப்பிட்டு தாழ்ப்பாளை உருக்கி திறந்துவிடலாம்!"

"அடுத்த வாரத்துக்குள்ள முடியுமா?"

"இப்போவே போன் பண்றேன்!அது என்ன 2 மணி நேர வேலை!"-என்றப்படி தன் கைப்பேசியை எடுத்து,யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

"ஹலோ சக்தி!"

"சொல்லுங்க சார்!"

"12,வாசுகி நகர்!உடனே வா!"

"ஓ.கே.சார்!அரை மணி நேரத்துல வந்துடுறேன்!"

"ம்.."-இணைப்பை துண்டித்தான்.

"வராங்கடா!நீ பயப்படாதே!"-என்று தன் நண்பனை ஆறுதல் படுத்தினான் திவாகர்.

அந்த அறையின் உள்ளே,இருந்த அந்த நாற்காலியில் தன் கால் மேல் மற்றொரு காலை போட்டப்படி அவர்களின் சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்தது அந்த உருவம்!!

45 நிமிடங்களுக்கு பின்,

"ஸாரி சார்!கொஞ்சம் லேட் ஆயிடுச்சி!"-என்று உள்ளே நுழைந்தான் அந்த இளைஞன்.

"பரவாயில்லை...ஒரு ஹெல்ப் பண்ணணும்!"

"சொல்லுங்க சார்!"

"ஒண்ணுமில்லை..ஒரு தாழ்ப்பாளை உருக்கி எடுத்து வேற மாற்றணும்!"

"பண்ணிடலாம் சார்!எந்த ரூம்!"

"வா!காட்றேன்!"-திவாகர் அவனை அழைத்து சென்றான்.

"இந்த ரூம் தான்!"-அவ்வாலிபன் அந்த அறையை திறக்க முயன்றான்.

"திறக்க வரலை சக்தி!அதான் தாழ்ப்பாளை மாற்ற சொன்னேன்!"

"கதவு மரமா?ப்ளைவுட்டா சார்?"

"இ்ந்த கதவு மட்டும் தேக்கு போலிருக்கு!"

"அப்படியா?பரவாயில்லை..சார் கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வராதீங்க!ஹை வோல்ட் கரண்ட் கொடுக்கணும்!"

"சரி சக்தி..!"-அவன் சென்றதும் தன் பணியினை தொடங்கினான்.

தாழ்ப்பாள் உறுதியான இரும்பினால் ஆனதால்,மின்சாரத்தின் அளவினை அதற்கேற்றப்படி உயர்த்தினான் சக்தி.

அரைமணி நேரம்,போது அந்த இரும்பு சிறிதும் சூடாகவில்லை.

மின்சார அளவை மேலும் உயர்த்தினான்.கதவை பிடித்துக்கொண்டு முழு மூச்சாக பணியை செய்தான்.

அதே முழு மூச்சோடு இரு நொடி மின்சாரம் அவனது உடலில் சட்டென பாய்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.