(Reading time: 11 - 21 minutes)

"...!"-என்ற பெரும் அலறலோடு சரிந்தான்.சற்றும் தாமதிக்காமல் மின்சாரம் தடைப்பட்டது.சத்தம் கேட்டு ஓடி வந்தனர் திவாகரும்,மகேஷூம்!!

"ஏ..சக்தி!"-ஓடிவந்து அவனை தாங்கினான் திவாகர்.

"யாராவது தண்ணி கொண்டு வாங்க!"-ஆணையிட்டான் மகேஷ்.

தண்ணீர் வந்ததும் அவனது முகத்தில் தெளித்தான் திவாகர்.

"சக்தி!என்னாச்சு?கண்ணை திற!"-மயக்கம் சற்றே தெளிய,மெல்ல கண்விழித்தான் சக்தி.

"என்னாச்சுடா?"-அவன் அச்சத்தோடு விழிக்க ஆரம்பித்தான்.

"சார்...இந்த கதவு...!"

"என்னாச்சு?"

"300 வோல்ட் கரண்ட் கொடுத்தும் தாழ்ப்பாள் சூடாகவே இல்லை சார்!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

"ஐயோ..இல்லைன்னா விட்டிருக்க வேண்டியது தானே!"

"நான் கதவை பிடிச்சிட்டு தான் இருந்தேன்,எப்படி ஷாக் அடித்ததுன்னே தெரியலை..!"

"சரி...நீ வா!ஹாஸ்பிட்டல் கிளம்பலாம்!"

"பரவாயில்லை சார்..!நான் பார்த்துக்கிறேன்!நான் அப்பறமா வரேன் சார்!"

"பரவாயில்லைடா..நீ ரெஸ்ட் எடு!வேலையை அப்பறமா பார்த்துக்கலாம்!"

"சரிங்க சார்.."-சக்தி மெதுவாக எழுந்து நடையை கட்டினான்.

மகேஷின் பார்வை திகிலோடு அந்த அறையை சந்தித்தது..

"என்னடா?"

"இந்த வீடு வேணாம்டா!"

"ஏன்?"

"சிவன்யாக்கு எதாவது இது மாதிரி.."

"டேய்!!நல்ல வார்த்தையே பேச மாட்டியா?அதெல்லாம் ஒண்ணுமில்லை...பயப்படாதே!"-நண்பனுக்கு தைரியம் கூறி தேற்றினான் திவாகர்.

4 நாட்கள் கழிந்தது...

"எங்கண்ணா கூட்டிட்டு போறீங்க?"

"சொல்றேன் வா!"

"எங்கேன்னு சொல்லுங்கண்ணா!"

"சொல்றேன் செல்லம்..நீ வா!"-காற்றை கிழித்துக்கொண்டு பறந்தது அவனது கார்.

முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவனோடு பயணித்தாள் சிவன்யா.

சில நிமிடங்கள் கடந்ததும்,அந்த பங்களாவின் முன் வந்து நின்றது அந்தக்கார்..!!

"கண்ணை மூடு!"

"எதுக்கு?"

"மூடு!"-சிவன்யாவின் கண்களை துணியால் கட்டினான் மகேஷ்.

"என்னண்ணா பண்றீங்க?"

"வாம்மா!"-அவளது கரத்தைப் பிடித்து, அழைத்து வந்தான்.

"இப்போ பாரு..!!"-என்று கட்டை திறந்தான்.

"ஹேப்பி பர்த்டே சிவன்யா அக்கா!"-என்று கூச்சலிட்டனர் அங்கிருந்த குழந்தைகள்.திடீரென்று திக்கு முக்காட வைத்த அந்த அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள் சிவன்யா.

"அண்ணா..இ..இது?"

"ஹேப்பி பர்த்டே செல்லம்.."

"நான் மறந்தே போயிட்டேன்!உங்களுக்கு எப்படி இதெல்லாம் தோணுச்சு?"

"இது திவாவோட ஐடியா!"

"அவரா?"

"ம்..வீட்டை மட்டும் தான் பிரசன்ட் பண்ண நினைத்தேன்.அவன் தான் இந்த ஐடியாவை பண்ண சொன்னான்!ம்..என்னைவிட உன்னை நல்லா தெரிந்து வைத்திருக்கிறான் போல!!"-மகேஷின் குறும்பில் தொனிந்த மறைமுகமான கேள்வியை அவள் கண்டறியவில்லை.

"உள்ளே வா!"-சிவன்யா ஒரு புன்னகையோடு ஓரடி எடுத்து வைத்தாள்.ஒருவித அலைவரிசை பரவ,சிலிர்ப்பை உணர்ந்தது அந்த நிழலில்லாத உருவம்!!

"அண்ணா!"

"என்னம்மா?"

"வீடு ரொம்ப அழகா இருக்கு!எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"

"தெரியும்..!இன்னிக்கு உன் பர்த்டே பார்டி இங்கே தான் நடக்கப் போகுது!"

"ஆனா..நான் எப்போதும் காப்பகத்துல தானே கொண்டாடுவேன்!"

"அப்போ ஒண்ணு செய்யலாம்!இப்போ காப்பகத்துக்கு போகலாம்;ஈவ்னிங் பெரிய பார்டி இங்கே தான் நடக்கும் சரியா?"

"ம்.."

"போ!வீட்டை சுற்றிப் பாரு!"

"ம்.."-சிவன்யா அவன் கூறியதை போலவே வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதேர்ச்சையாக,அந்தப் பூட்டப்பட்டிருந்த அறையின் மீது அவளது கவனம் பதிந்தது.மெல்ல முன்னேறியவள்,

அந்த அறையை திறக்க,தனது கரத்தை கொண்டு சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.