(Reading time: 11 - 21 minutes)

"சிவா!"-மகேஷின் குரல் அவளை தடுத்தது.

"ஆ..!"

"இங்கே வாடா!நேரமாயிடுச்சு கிளம்பணும்!"

"இதோ வரேன்ணா!"-வந்த வேலையை செய்யாமல் அப்படியே திரும்பி சென்றாள்.உள்ளே...அந்தக் கதவையே வெறித்தப்படி நின்றிருந்தது அந்த உருவம்!!

அன்று மாலை....

பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது.

யாவரும் ஒரு புன்னகையோடு சிரித்தப்படி மகிழ்ந்திருந்தனர்.

"மஹீ!டைம் ஆகுதுடா!"

"அவ ரெடியாகிட்டு இருக்காடா!"

"போய் கூப்பிடு!மேக் அப் போட்டது போதும்!"

"சரி போறேன்!"-மகேஷ் சில அடிகள் எடுத்து வைக்க,அவனை யாரோ அழைத்னர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"ஆ..இதோ வரேன்!திவா!நீயே போய் கூப்பிடு!"

"நானா?"

"கதவை தட்டி சீக்கிரம் வர சொல்லு!அந்த சிடுமூஞ்சி வேற கூப்பிடுறான்!போகலைன்னா,அவ்வளவு தான்!"-அவனது காதோரமாக கிசுகிசுத்துவிட்டு ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அந்த சிடுமூஞ்சியிடம் முன்னேறினான் மகேஷ்.கிடைத்தது நலல சந்தர்ப்பம் என்று,அவளது அறையை நோக்கி நடந்தான் திவாகர்.

"சொன்னா கேளுங்கம்மா!"

"மாட்டேன்!"

"மகேஷ் ஐயா வந்துட போறார்!"

"யாருமே என்னை புரிந்துக்க மாட்றாங்க லட்சுமி!"

"என்னம்மா நீங்க?சின்ன குழந்தை மாதிரி அழுறீங்க?"

"எது அழுறாளா?"-என்றப்படி உள்ளே நுழைந்தான் திவாகர்.அவன் வந்ததும் மௌனமாக எழுந்து நின்றாள் சிவன்யா.

"ஏ..இ்ன்னும் ரெடியாகலை?"

"................"

"என்னாச்சு?"

"நீங்க கூட இல்லைன்னு கோபம்!"-என்றாள் லட்சுமி.

"ஓ...செல்லம்..!"-அவன் ஆரம்பிக்க,

"இருங்க இருங்க!"-என்று தடுத்தாள் லட்சுமி.

"என்ன?"

"நான் வெளியே போயிடுறேன்!"-என்று புன்னகைத்தப்படி வெளியேறினாள் அவள்.

"புத்திசாலி பொண்ணு"

"ஏன்மா!என்னாச்சு?ஸாரிடா...!நான் காலையிலே வந்திருப்பேன்!ஒரு முக்கியமான வேலைம்மா..!"

"என்ன வேலை?"

"ம்...உனக்காக கிப்ட் வாங்க போயிருந்தேன்! 4 நாள் முன்னாடி செய்ய கொடுத்த நகை,திடீர்னு இன்னும் 2 நாள் ஆகும்னு சொல்லிட்டான்!உடனே போய் சண்டை போட்டு,என்னோட மகாராணிக்காக செய்து வாங்கிட்டு வந்தேன்!"-என்று அந்த நகையை நீட்டினான்.

அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கலாசாரத்துவம் வாய்ந்த நகை அது!!

"நீ போட்டா ரொம்ப அழகா இருக்கும்!"

"ஸாரிங்க..."

"இப்படியா ஸாரி கேட்பாங்க?"

"வேற எப்படி?"

"உனக்கு தெரியாது?"-அவன் கேட்கவும் முகத்தில் நாணத்தோடு அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் சிவன்யா.நீண்ட நேரம் அப்படியே நிற்க,நேரம் நகர்வதை உணர்ந்தவன் அவளிடமிருந்து விலகினான்.

"சீக்கிரம் ரெடியாகு..!"-ஒரு ஏக்கத்தோடு அவளிடம் கூறிவிட்டு வெளியேறினான்.

15 நிமிடங்கள் கழித்து...

திவாகரும்,மகேஷூம் பேசிக்கொண்டிருக்க,

"வாவ்!"-என்று வாயைப் பிளந்தாள் அருகிலிருந்த பெண்மணி.

அவர் பார்வை சென்ற திசை நோக்கி பார்த்தனர் அனைவரும்..!!

சிவப்பு நிற புடவையில்,தலை கேசத்தை காற்றில் அலைப்பாயவிட்டு,திவாகரின் பரிசை அணிந்துக்கொண்டு எவ்வித ஒப்பனையும் இல்லாமல் அமைதியாக இறங்கி வந்தாள் சிவன்யா.

திவாகரின் பார்வை ஸ்தம்பித்து நின்றது.

"சிவன்யா அப்படியே அம்மா மாதிரி!"-மகேஷின் பூரிப்பில் சுயநினைவு பெற்றான் அவன்.

"சிவன்யா! ரொம்ப அழகா இருக்க!"-விழாவிற்கு வந்த பெண் ஒருத்தி கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.