(Reading time: 14 - 27 minutes)

34. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

ஹாய் ப்ரண்ட்ஸ்.. வழக்கம் போல, நம்ம காலன் சாருக்கு டிமிக்கி கொடுத்து ஒரு ஆறு மாசம் முன்னோக்கி போகலாம்ன்னு பார்த்தால், நல்லா மாட்டிகிட்டேன்.. சோ நாம, மறுபடியும் ரிவர்ஸ்ல, சில நாட்களாய் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டு , அதுக்கு பிறகு மலர் இல்லத்து போவோமாக!! ஹீ ஹீ

சிவகங்கை..!

இதுவரை அன்பெழிலனுடன் போன பயணத்திலேயே இன்றுத்தான் அதிவேகமாய் முடிந்தது அந்த கார் பயணம்..முடிந்தவரை அவனை நன்றாகத்தான் சபித்தாள் முகில்மதி.. அவன் தன்னிடம் இணக்கமாக இருந்தேபார்த்து பழகி விட்டதினால் அவனின் மௌனமும் கோபமும் அவளை பெரிதாகவே பாதித்தது.. ஏற்கனவே அவளுக்காகவே அவளைப் பிரிந்துத் தான் சென்றான் அவன் ..

“ மறுபடியும் வேதாளம் வெங்காய லாரி ஏறிடுமோ?” தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.. அவளுக்கு எதிர்மாறாய் இயல்பாய்த்தான் இருந்தான் எழில்..சொல்லப்போனால் , அவளின் கவலை படிந்த முகம் அவனுக்கு ஆறுதலாய்த்தான் இருந்தது..

“ஷாபா,இந்த முட்டக்கண்ணிய  காதல் பேச வைக்கனும்னா, நான் நந்தா படத்துல  வர்ர  சூரியா மாதிரி உர்ர்ர்ர்ன்னு இருக்கனும்போல” என்று அவனும் மனதிற்குள்  அலுத்துக் கொண்டான்.. இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை ,  அங்கு வீட்டில் நடந்து கொண்டிருப்பது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

கார் அவளின் வீட்டு வாசலில் நின்றும் சட்டமாய் அமர்ந்திருந்தாள்முகில்மதி…காரை நிறுத்தி விட்டு, சிரிப்பை மறைத்துகொண்டு பேசத் தொடங்கினான் அன்பெழிலன்..

“ வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் ஆகப்போகுது”

“..”

“இறங்குற எண்ணம் இல்லையா?”

“ நீங்க முதலில் இறங்கி வாங்க”

“அட,மஹாராணிக்கு கார் கதவை திறந்து விடனுமா? இதை அப்போவே சொல்லி இருக்கலாமே” என்று அவன் காரை விட்டு இறங்க போக,

“ நான் அந்த இறங்கி வாங்கன்னு சொல்லல” என்றாள் முகில்மதி..அதை புரியாதவனா அவன் ?கள்ளத்தனமாய் உதிர்த்த சிரிப்பை மறைத்துவிட்டு

“பின்ன என்ன?” என்றான்..

“ ஏதோ நேத்து கொஞ்சம் தப்பு நடந்துருச்சு “

“ கொஞ்சமா?”

“ ஆமா கொஞ்சம் தான் ! நான் என்ன, இன்னைக்கு இன்னொருத்தனையா கட்டிகிட்டு இருக்கேன்?”

“ஓஹோ இன்னும் அந்த ஐடியா வேற இருக்கா ?”

“ சும்மா வம்பிழுக்கிறேன்னு சொல்லி மனசை கஸ்டபடுத்தாதிங்க எழில்”

“ யாரு நான் கஸ்டப்படுத்துறேனா? அப்போ நீ” என்று ஆரம்பித்தவன் கண்களை மூடி பெருமூச்சு விட்டான் ..

“ சரி விடு ..இப்போ என்ன சொல்ல வர்ர ?”

“ ஐ எம் சாரி”

“ ம்ம்ம்ம்”

“அதான் மன்னிப்பு கேட்குறேன்ல ?”

“சரி டீ ..அதுகென்ன பண்ணனும் இப்போ?உடனே இறங்கி வரனுமா?நீ பேசின விதம்  இன்னமும் என் மனசை பாதிச்சிட்டு தான் இருக்கு .. நான் உன்னை விரும்புற அளவுக்குன் உனக்கு என் மேல விருப்பம் இல்லையா? அல்லது, நாந்தான் உன்னை ரொம்ப வற்புருத்துறேனான்னு தெரியல”

“எழில்”

“கொஞ்சம் டைம் கொடு முகிலா”

“உங்களுக்காகவா?”

“இல்ல நமக்காக!”

இந்த ஒரு முறையாவது அவன் பேச்சை மறுக்க வேண்டாம் என்று நினைத்தவள்,

“ சரி, வரேன்” என்றப்படி காரில் இருந்து இறங்கினாள்…கண்ணீரும் அவள் கன்னங்களில் இறங்கியது… அவள் அறிந்திருக்கவில்லை,இன்னும் சில நிமிடங்களில் அவன் அவளிடமே திரும்பி வருவான் என்று !

வீட்டிற்குள் நுழையும்போதே புதிதாய் இரு குரல்கள் வாசல் வரை கேட்டது..கேட்டவுடனேயே அவளுக்குள் பரவசத்தை ஏற்படுத்திய அவர்கள் வேற யாரு ? நம்ம எழிலின் அம்மா,அப்பாத்தான் …

சரியாய் முகில்மதி உள்ளே நுழையும் வேளை, நாராயணன் இதை சொல்லிகொண்டிருந்தார்… “நம்ம வைஷ்னவிக்கும் சரி,மித்ராவுக்கும்சரி  அவங்கவங்க மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையைத்தான் அமைச்சு கொடுத்தோம்.. முகில்மதி விஷயத்திலும் அதே தான் ..!அன்பு எங்க கண் பார்வையில் வளர்ந்த பையன் .. அவனுக்கு எங்க பொண்ணைகொடுக்குறத்து சம்மதம் தான் ! ஆனால் , இதுக்கு சரின்னு சொல்ல வேண்டியது மதிதான்..அதுவும் சின்னவனுக்கு கல்யாணம் பண்ணாமல் மதிக்கு எந்த முடிவும் எடுக்குற யோசனையில் இல்லம்மா.. அவளும் இப்போ படிச்சிட்டு இருக்காள்! படிக்கிற பொண்ணை நாம ஏன் நிறுத்தனும் ?” என்றார் அவர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.