(Reading time: 14 - 27 minutes)

ங்களுக்கும் அதே எண்ணம் தான் ! இருந்தாலும் மனசுல இப்படி ஒரு எண்ணம் வந்ததும் உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சோம்” என்றார் ராகவி .. வீட்டிற்குள் நுழைந்த மதி, அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்

“ அத்தை !!” என்றாள்..

“அட வந்துட்டியா மதி…அன்பு எங்க?” என்றார் ராகவன்..

“இப்போத்தான் என்னை இறக்கி விட்டுட்டு போனாங்க”என்று அவள் கைகாட்டும்போதே ஸ்டைலாய் வந்தான் அன்பெழிலன் ..

“ நான் வந்துட்டேன் ..!” என்று அவன் தனது பானியில் நிற்கவும்,வழக்கம்போலவே அனைவரின் முகத்திலுமே புன்னகை படர்ந்து..

“ என்னம்மா , இங்க வர்ரிங்கன்னு சொல்லவே இல்லை ? நம்ம காரை பார்த்துட்டுத் தான் நானே வரேன்” என்றான் அவன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!

படிக்க தவறாதீர்கள்...

“ ஷக்தி மித்ரா கல்யாண நேரத்துலேயே இங்க வந்து எல்லாரையும் பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன் .. எனக்கும் உங்கப்பாவுக்கும் இன்னைக்கு பொழுது போகல .. அதான் கிளம்பி வந்துட்டோம்” என்றார் அவர்கூலாய்..

“ சரி கிளம்பலாமா?” என்று அன்பெழிலன் கேட்கவும், “ஒரு நிமிஷம்” என்றபடி லக்ஷ்மியின் அருகில் சென்றார் ராகவி.. அவரின் கைகளை தனது கைகளுக்குள் பிடித்தவர், “ நமக்குள்ள ஒரு உறவு இருக்கோ இல்லையோ,நம்ம  இரண்டு குடும்பத்துக்குமே பசங்களின் நட்பு மூலமாய் நல்ல உறவு இருக்கு ..அது எப்பவும் இருக்கும் ..நீங்க டைம் எடுத்துக்கோங்க.. முகில்மதிகிட்ட பேசுங்க…ஷக்தி, மித்ரா கதிர் அவங்க கிட்டயும் பேசுங்க..அதுக்கு அப்பறமாய் உங்க முடிவை சொல்லுங்க ..குறிப்பாய், மதியின் சம்மதம் அவசியம் .. நான் வரேன்” என்று கனிவே உருவான குரலில் தெளிவாய் பேசினார் அவர்..

மொத்த குடும்பத்தாருக்குமே அந்த சம்பந்தத்தில் விருப்பம் தான் ! அது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது..இருப்பினும் இந்த முறை பெரியோர்கள் அந்த பொறுப்பினையும் முடிவினையும் இளையோர் கைகளில் ஒப்படைக்க முடிவெடுத்தனர்…

முகில்மதி வாயடைத்து போய் நிற்க , அவளை புரியாத ஒரு பார்வையை பார்த்துவிட்டு , சென்றான் அன்பெழிலன்..!

( சோ நம்ம எழில் ,மதி லைஃப்ல இதுதாங்க இப்போதைக்கு நடந்தது…எப்படியும் நம்ம ஷக்தி பச்சை கொடி காட்டி இருப்பார்…நம்ம மித்ராவும் , மாமா க்ரீன் சிக்னல்  காட்டியதும் ,காதல் வயப்பட்டு இருக்கும் நண்பனை வறுத்து எடுத்துருப்பா…. ஆனா, இவங்களுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணல… காரணமாய், நடுவில் நம்ம சொதப்பல் கதிரேசன் இருக்காரே… வாங்க அவரை பார்ப்போம்..)

கேண்டீனில் , ரிஷியுடன் அமர்ந்திருந்தான் கதிர்  அமர்ந்திருந்தான் .. காவியா அவனை படுத்தும் பாட்டை அறிந்து,ரிஷிக்கே கருணை பிறந்தது.. தினம் தினம் காவியா படுத்தும் பாட்டை அப்படியே அவன் ஒப்பிக்க , சிரிப்பதா இல்லை அழுவதா ?என்று தெரியாமல் இருப்பான் ரிஷி..  இந்த வம்புக்கு சலுகையாய் காவியாவிற்கு புதிதாய் ஒரு உடன்பிறவா அண்ணன் உருவாகி இருந்

தான் !வேறயாரு ? குணாத்தான் ! காவியாவின் அதிரடி முடிவு அவனை ஆச்ச்ர்யபடுத்திய வேகத்தில் கூனிக் குறுகவும் வைத்தது..தான் காவியாவிற்கு செய்த இடைஞ்சலை எல்லாம் அன்னையிடம் ஒப்பித்தவன், அவளின் சொத்துக்களை அவளிடமேகொடுக்க, அதை தொடவும் மறுத்து விட்டாள் காவியா.. மேலும்,

“ நாம எப்பவும் ஒரேகுடும்பம் குணா… சும்மா குற்ற உணர்வு அது இதுன்னு பிதற்றாமல் , வீட்டிற்கு பெரியவனாய், எனக்கு அண்ணன் மாதிரி இருந்து அப்பாவின் சொத்துக்களை பார்த்துக்கோ”என்று ஒரே போடாய் அவனது வாயை அடைத்து விட்டாள் ! பணத்தைவிட, அவளின் குணம் அவனை மாற்றியது.. உண்மையிலேயே உடன் பிறந்தவன் போல , அவள்மீது அக்கறை காட்டினான் .. காவியாவும் கதிரை வெறுப்பேற்றி பார்ப்பதர்காக குணாவை ஆஃபிசிற்கு வரவைத்து பேசுவாள்..

“இன்னைக்கு என்ன மச்சான் நடந்தது?” சலுப்பும் வறுத்தமுமாய் கேட்டான் ரிஷி..

“ அட ஏன் டா? அவளே என்னை போனா போகுதுன்னு விட்டாலும் நீ நியாபகப்படுத்துவ போல”

“ வாவ்..அப்போ இன்னும் ஒன்னும் நடக்கலயா?”

“ நீ சந்தோஷமா கேட்குறியா ? இல்ல துக்கமாய் கேட்குறியா?” கதிர் கோபமாய் கேட்கும்போதே அவர்களின் எதிரில் அமர்ந்தாள் காவியதர்ஷினி..

“ஹாய் அண்ணா..ஹெலோ கதிர் சார் “

“ இவ ஒருத்தி சாரு மோருன்னு” என்று முனகினான் கதிர்.. அது அவளின் காதிலும் விழாமல் இல்லை..எனினும் எதுவும் அறியாதவள் போல உணவை திறந்தாள்.

“ என்ன சாப்பாடு காவியா ?” – ரிஷி

“ நூடல்ஸ் அண்ணா”

“நீயே பண்ணதா ?”

“பின்ன ,எனக்குன்னு இதை எல்லாம் செய்யுறதுக்கு யாரு இருக்கா ? அப்படியே யாரவது இருக்கனும்ன்னு நான் நினைச்சாலும்,அவங்களும் அப்படி நினைக்கனுமே..!இப்போ எல்லாம் அடுத்தவங்க எண்ணத்துக்கு யார்தான் மதிப்பு தர்ராங்க? “ என்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.