(Reading time: 9 - 18 minutes)

"னி அந்த மாதிரி பேச மாட்டேன்,ப்ராமிஸ்!!லைப்ல நிறைய இழந்துட்டேன்மா!உன்னையும் இழக்க விரும்பலை!நீ எனக்கு வேணும்,நான் இழந்த அத்தனை அன்பையும் எனக்கு கொடுக்க நீ வேணும்!"-அவனது குரல் அடைத்தது.

சிவன்யா அவனது நெஞ்சினில் சாய்ந்துக் கொண்டாள்.

பேச்சிழந்து நின்றனர் இருவரும் !!பேசவும் ஏதும் தோன்றவில்லை.மனம் எதையும் சிந்திக்கவில்லை.

தங்களை தவிர!!அந்த சிந்தனையின் முதிர்ச்சியால் வசப்பட்டு அவளது இதழை நோக்கி குனிந்தான் திவாகர்.அவனது எண்ணத்தை ஊகித்தவள்,அவனிடமிருந்து அவசரமாக விலகினாள்.

எண்ணம் ஈடேறாத ஏமாற்றம் அவனது முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

"நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்!"-என்று நகர பார்த்தவளை தடுத்தது அவனது கரம்!!சிவன்யா என்ன என்பது போல பார்த்தாள்.அவன் புன்னகையோடு அவளுக்காக வாங்கி வந்த பரிசை நீட்டினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

"ப்ளீஸ் போட்டுக்கோ!"

"எத்தனை முறை சொல்றது எனக்கு கிப்ட் எல்லாம் வேணாம்னு!"

"சரி..இதான் கடைசி!இனி,வாங்க மாட்டேன்!"

"இதையே தான் ஒவ்வொருமுறையும் சொல்றீங்க!"

"ஒரு விஷயம் உனக்காக 

செய்யும் போது,பண்ற சத்தியத்தை எல்லாம் மறந்துப் போயிடுறேன்!"

-அவன உருக்கமாக கூறவும்,அவள் முகம் சிவந்தாள்.

மெல்ல அவள் பின்னால் சென்று அந்த ஆபரணத்தை அணிவித்தான் திவாகர்.

இவ்வளவு அழகான காதலர்களுகிடையே என்ன நிகழ்ந்திருந்திருக்கும்??

முழு கதையையும் கூறுகிறேன்!!!

திவாகர் மகேஷின் பிரிய நண்பன்.ரத்தமும்,சதையையும் போல எப்போதும் ஒன்றாகவே திரிவார்கள்.மூன்று வருடங்களாக சிவன்யா மற்றும் திவாகருக்கு இடையே காதலானது விதைக்கப்பட்டு,முளைத்து இன்று விருட்சமாகி உள்ளது.

காதலின் விவரம் இதுவரை மகேஷின் செவிகளை எட்டவில்லை.ஆனால்,அவனை தவிர சிவன்யாவிடம் பிரியமாக இருக்கும் அனைவருக்கும் இந்த விவரம் தெரியும்!!

ஒரு வாரத்திற்கு முன்பு,அன்று,கோவிலுக்கு உடன் வரும்படி அழைத்தாள் சிவன்யா.அச்சமயம் பார்த்து அனைத்து வேலை பளுவும் அவனது தலையில் இறங்க,அந்த மன அழுத்தத்தை அவள் மீது கொட்டி தீர்த்தான் அசோக்.

"எப்போ பார்த்தாலும் எங்கேயாவது போகணுமா?ஏன் இப்படி நீயும் எனக்கு தலைவலியை தர?கொஞ்சம் என்னை நிம்மதியாக தான் விடேன்!"-என்று கத்தி தீர்த்தான்.இதுவே,மேற்கண்ட சமாதானத்திற்கு காரணமாகியது. "ரொம்ப அழகா இருக்கு!"

"அப்போ நிச்சயமா உங்க செலக்ஷன் இல்லை!"

"இல்லை...நான் பி.ஏ.வை செலக்ட் பண்ண சொன்னேன்!அவளோட செலக்ஷன் தான் இது!"

"பி.ஏ.வா?"

"ஆமா...சச் எ லவ்லி கேர்ள்!எவ்வளவு அழகா செலக்ட் பண்ணிருக்கா பாரேன்!"

"அப்போ ஏன் இதை எனக்கு கொடுத்தீங்க?போய் உங்க லவ்லி கேர்ளிடமே தரலாமே!"

"கோபப்படுறீயா?"

"ஆமா..!"

"ஐயோ!கோபத்துல நீ எவ்வளவு அழகா இருக்க?இன்னும் கொஞ்சம் அதிகமா கோபப்படு!"

"உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது?"

"கோகினூர் டைமண்ட் ஸ்கல்ப்ட்சர்!"

"விளையாடுறீங்களா?"

"இப்போ தான் தெரியுதா?"

"உங்களை..."

"என்ன?என்ன?என்ன பண்ணிடுவ?"

-அவள் சிறு குழந்தையை போல சிணுங்க ஆரம்பித்தாள்.

"இப்போ ரொம்ப அழகா இருக்கியே!'

"போதும்..."-அவள் சமாதானமானாள்.

"சரி...நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?"

"அண்ணா கல்யாணம் முடியட்டும்!"

"ஆயுசுக்கும் பிரம்மசாரியா இருடான்னு சொல்ற!"

"அப்போ என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகாதுன்னு சொல்றீங்களா?"

"சந்தேகமே வேணாம்!"-அவள் புருவத்தை சுருக்கி திவாகரை ஒரு முறை முறைத்தாள்.

"என்ன ஏன் முறைக்கிற?உங்கண்ணன் தான் எந்தப் பொண்ணை பார்த்தாலும் மண்ணை பார்த்துட்டு போறானே!இவ்வளவு ஏன்,அவன் பி.ஏ இன்டர்வியூக்கு வந்த எந்த பொண்ணோட அப்ளிக்கேஷனை கூட தொட்டு கூட பார்க்கலையாம்!

அப்பறம் எங்கே இருந்து..."-அவன் பெருமூச்சுவிட்டான்.

"போதும்..ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க!"-அவள் சற்றே முறைப்போடு சமையலறைக்குள் நுழைந்தாள்.

"அஸ்வின்!அந்த வீட்டோட ஓனரிடம் பேசுனீயா?"-தொலைப்பேசியில் யாருடனோ உரையாடி கொண்டிருந்தான் மகேஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.