(Reading time: 12 - 24 minutes)

வாங்க மிஸ்டர் ஜெய்…. உங்களைத்தான் எதிர்பார்த்திட்டிருந்தேன்…. அந்த குமார் கேஸ் என்ன ஆச்சு?...”

“அவனுக்கு எதிரா எல்லா சாட்சியும் ரெடி சார்… நாளைக்கு கோர்ட்ல அவனுக்கு எதிரா தீர்ப்பு வந்ததும் அவனை தூக்கி உள்ளே வைக்குறது ஒன்னு தான் பாக்கி….”

“ஓ… குட் மிஸ்டர் ஜெய்… எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருந்தது.. அதனால தான் இந்த கேஸை உங்ககிட்ட நான் ஒப்படைச்சேன்… வெல்.. அத நீங்க நல்ல படியா முடிச்சிட்டீங்க… வெரி ஹேப்பி…” என அவனின் கையை குலுக்கியபடி பேசினார் கமிஷனர் சோமநாதன்…

“இன்னும் இந்த கேஸ் முடியலையே சார்…” என்றவனை அதற்கும் மேல் பேசவிடாது செய்தவர், அவனைத் தட்டி கொடுத்து,

“ஒகே… நாளைக்கு அவனை அரெஸ்ட் பண்ணிட்டே என்னை வந்து பாருங்க…” என சொல்ல, அவனும் சரி என்றபடியே வெளியேற,

“என்ன இஷான்… மிஸ்டர் ஜெய்… இன்னும் அந்த இன்சிடெண்ட்ல இருந்து வெளியே வரலையா?...”

“இல்ல சார்… அவன் எங்கிட்டயே ஒதுங்கி தான் சார் நிற்கிறான்… அவனை எப்படி மாத்துறதுன்னே எனக்கு தெரியலை சார்…” என அவனும் வெளிப்படையாகவே சொல்ல,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“பர்சனலா பார்த்தா ஜெய் எனக்கு பையன் மாதிரி தான்… அவனை இந்த வேலையில சேர்த்ததில இருந்து எனக்குள்ள ஒரு பெரிய சந்தோஷம் நிறைவு எல்லாமே கிடைச்சிருக்கு… ஆனா அந்த இன்சிடெண்ட்டுக்கு பிறகு ஜெய் எங்கிட்ட இருந்தும் கூட ஒதுங்கி தான் நிற்கிறான்…” என அவர் சொன்னதும் இஷானுக்குமே திக் என்றிருந்தது…

“என்ன சார் சொல்லுறீங்க?...”

“நிஜம் தான் இஷான்… அவன் உங்ககிட்ட காட்டுற அதே ஒதுக்கம் எங்கிட்டேயும் பாலோ பண்ணுறான்… இங்க வந்தா மட்டுமே எங்கிட்ட பேசுறான்… வெளியே தனியா எங்க பார்த்தாலும் கண்டுக்காத மாதிரி போயிடுறான்… நானும் பேச ட்ரை பண்ணி பார்த்தேன்… பட் நோ யூஸ்…” என அவர் கைகளை விரித்தபடி சொல்ல, இஷானுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

“இந்த கேஸ் முடிச்சிட்டு வந்ததும், ஜெய்க்கும் உங்களுக்கும் ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு மிஸ்டர் இஷான்…”

“என்ன சார் அது?...”

“அத நாளைக்கு சொல்லுறேன் இஷான்… உங்க அப்பா எப்படி இருக்குறார்? கேட்டதா சொல்லுங்க..”

“நல்லா இருக்குறார் சார்… கண்டிப்பா கேட்டதா சொல்லுறேன்…” என்றவன் சிறிது நேரம் கழித்து, “நீங்க கவலைப்படாதீங்க… நாளைக்கு அவனை முன்னாடி போல உங்ககிட்ட பேச வைக்குறது என் பொறுப்பு…” என்றபடி இஷான் வெளியேற, அவரின் முகத்திலோ சற்றே சிறிய விரக்தி புன்னகை…

சிறு வயதிலிருந்தே அவனை எடுத்து வளர்த்தது அனைத்துமே சோமநாதன் தான்… அவருக்கென்று சொந்தம் என்று ஒன்று இல்லாத நிலையில் அவரின் வீட்டின் பின் கைக்குழந்தையாக அவனை கண்டெடுத்தார் சோமநாதன்…

அவன் அவருடன் கழித்த பொழுதுகள் மிகவும் குறைவே…  ஏனெனில் அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த தருணத்தில் ஒருநாள், எதேச்சையாக அவன் சோமநாதன் எடுத்து வளர்க்கும் பிள்ளை என சோமநாதனின் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் மூலம் தெரியவர, அவன் ஊமையாகி போனான்…

தந்தை போல் அவனை பார்த்துக்கொண்டாலும், அவனை ஹாஸ்டலில் தங்க வைத்துதான் படிக்க வைத்தார் அவர்… ஏனென்று மற்றவருக்கு தெரியாவிட்டாலும் அவனுக்கு தெரியும்… இருந்தாலும் வெளியே அவன் அதை காட்டிக்கொண்டதில்லை எப்போதும்….

வளர்ந்ததும், அவனை போலீஸ் ஆக்கியே தீர வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டார் அவரும்…

அவனும் அவரின் விருப்பத்திற்கு இசைந்து கொடுத்தான்.. அவனுக்குமே தன் வளர்ப்பு தந்தையை போல் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் மனதில் சின்ன வயதிலேயே விதையாக விழுந்துவிட, அவன் அதை விருட்சமாக்க விரும்பினான்…

காலேஜ் படித்து முடித்ததும், சிவில் சர்வீஸ் எக்ஸாமினேஷன் எழுதி பாஸ் செய்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனான்… அவனுடன் சேர்ந்து பாஸ் செய்தவன் தான் இஷானும்…

ஆரம்பத்தில் பெரிதாய் பழக்கம் இல்லை தான் இருவருக்கும்… ஆனால் ஒரு கேஸ் விஷயமாக சேர்ந்து வேலைப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் வந்த போது, நெருக்கமான நண்பர்களாகி போயினர் இருவரும்…

இத்தனைக்கும் இஷானின் வீட்டிற்கு ஜெய் சென்றதில்லை… அவன் எவ்வளவோ தடவை வற்புறுத்தி அழைத்தும் ஜெய் அசையவே இல்லை…

சோமநாதன் கூட சொல்லிப்பார்த்தார் தான்… ஜெய் கேட்டால் தானே… ஒரே பிடிவாதமாக தலையை குலுக்கிவிட்டான் முடியவே முடியாதென…

“நண்பன் தான் நான் உனக்கு… அதற்காக உன் வீட்டிற்கு நான் வந்து விருந்துண்டு, பொழுதை கழிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை… அதனால் என்னை வற்புறுத்தாதே… எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை…” என தீர்மானமாக சொல்லுபவனிடம் அதற்கு மேல் எதையும்  திணிக்காது சென்றிடுவான் இஷான், ஜெய் என்றேனும் ஒருநாள் மாறிடுவான் என்ற நம்பிக்கையில்… ஆனால் அவன் இன்றளவும் மாறியபாடில்லை… முன்பை விட இப்போதுதான் அதீக ஒதுக்கம் தென்படுகிறது அவனிடத்தில் என்ற உண்மையும் உணர்ந்து தான் இருந்தான் இஷான்… எனினும் இப்போதைக்கான ஒதுக்கம் அவனுக்கு தெரியும் என்னும்பட்சத்தில் அவன் கொஞ்சம் அமைதி காத்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.