(Reading time: 11 - 22 minutes)

01. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ல்ல வெயில் நேரம் சுந்தரம் தன் காரில், கம்பனியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போது, வெய்யிலில் குடை பிடித்துகொண்டு போய்கொண்டிருக்கும் அந்த பெண்ணைப் பார்தார், ஒரு நிமிடம் புரியாமல்மூச்சே நின்று விட்டது போலிருந்தது….

தான் என்ன செய்கிறோம் என்பது புரியாமல், எங்கே அவளை மிஸ் செய்துவிடுவோமோ என்று பயந்து, கார் டிரைவரிடம்

‘அந்த சிவப்பு சேலை கையில் குடையுடன் போகும் பெண்ணின், பின்னாடியே கொஞ்சம் இடைவெளி விட்டு போ...’ என்றார் டிரைவரிடம், அந்த பெண் எந்த வீட்டிற்குள் போகிறாள் என்று பார்த்து வீட்டு நம்பரையும் குறித்துக் கொண்டுவந்தார்.

‘திரும்பி போகலாம்...’ என்று டிரைவரிடம் கூறியவரின் மனமோ எல்லையில்லா வருத்தத்தில் ஆழ்ந்தது, ‘என் அனு...என் அனு….’ என்று அவர் பினாற்றிக் கொண்டே இருந்தார். கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது!

அவரால் நம்ப முடியவில்லை. இவள் என் அனு போலவே இருக்கிறாள், அச்சு அசல் கொஞ்சம் கூட மாற்றம் கண்டுபிடிக்க முடியாது…. ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டார் சுந்தரம்,

வீட்டுக்கு வந்தவர் தண்ணீர் அருந்தி பெரும் மூச்சை இழுத்து விட்டு, எப்படி... அவள் யார்? என்று கண்டு பிடிக்க வேண்டும் ஆனால் மிகவும் சின்ன பெண் எப்படி என்னவென்று விசாரிக்க முடியும்…. யோசித்து, யோசித்து, தலைவலி வந்தது,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

திடீரென்று, ஒரு போன் செய்தார்...

அடுத்த முனையில், பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி, நான் ஷ்யாம் பேசறேன் உங்களுக்கு என்ன வேண்டும் என்ற குரல் வந்தது..

உடனே ‘நான் சுந்தரம் பேசுகிறேன்,’ என்று தன்னையும் தன் கம்பனி பெயரையும் சொன்னார். ‘உங்களிடம் தனியாக பேசவேண்டும் உடனே வர முடியுமா?’

சிறிதும் தாமதிக்காமல் ‘கண்டிப்பாக உடனே வருகிறேன், உங்கள் அட்ரசை கொடுங்க சார்,’

 அட்ரசை ஒரு பேப்பரில் எழுதி கொண்டான். சொன்ன மாதிரி வந்துவிட்டான். 

சுந்தரம் ஏற்கனவே ரொம்ப அரண்டு விட்டவர், வந்தவனிடம் தான், தன் பூர்வீகம், என்று எல்லாம் சொன்னவர் தன்னுடைய மனைவியின் போட்டோவையும் காண்பித்தார்.

தன் காதல் மனைவியை இன்று ஒரு பத்தொன்பது வயது பெண்ணாக எந்த வயதில் அவளை பார்த்து விருப்பபட்டு காதலித்து கல்யாணமும் செய்துக்கொண்டாரோ அதே வயதில், அவளை இருபது வருஷத்திற்கு பிறகு நான் பார்கிறேன், என்னால் தாங்க முடியவில்லையே!!” என்று புலம்பினார்.

ஷ்யாமிற்கு மிகவும் ஆச்சர்யமகவும், ஒரு சினிமா கதை கேட்டது போலவும் இருந்தது. அவர் முகத்தை பார்த்தால் பாவமாக இருந்தது.

“சரி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் ஷ்யாம்.

சுந்தரம் அவன் செய்ய வேண்டியதை சொல்லி முடித்தார். அவன் தன் உதடுகளை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தான்.

“நான் நீங்கள் சொன்ன மாதிரியே கண்டு பிடித்துவிட்டு, உங்களை வந்து பார்கிறேன்”.

“உங்கள் பீஸ் எவ்வளவு?” என்று கேட்டார் சுந்தரம்.

 “முதலில் உங்கள் வேலையை முடித்து விட்டு நானே கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணை எந்த இடத்தில் பார்த்தீர்கள், என்று சில விஷயங்களைக் கேட்டு விவரத்தை வாங்கிங்கிகொண்டு சென்றான். 

சுந்தரம் மிகவும் தவிப்பாய், இருந்தார். சமையல்கார பஞ்சு “ ஐயா சாப்பிடவரீங்களா?” என்றது கூட காதில் விழவில்லை. அவர் மனது தன்னுடைய இளமை காலம் நோக்கி சென்றது.

ன்னுடைய இளமை காலம், தன் மாமாவின் வீட்டில், அவரை துன்புறுத்தபட்ட காரணத்தினால், யாரிடமும் சொல்லாமல் தானே ஒரு அனாதை ஆஷ்ரமத்தில் சேர்ந்து கொண்டு, தன்னுடைய படிப்பினை முடித்து கொண்டார். படிக்கும் போதே அவர் பக்கத்திலிருக்கும் ஒரு கம்பணியில் வேலை செய்தார். 

தன் படிப்பு முடிந்ததும் அந்த கம்பணியிலிருந்து ரிஜெக்ட் செய்யப்பட்ட பார்ட்ஸ்களை சரி செய்து விற்பனை செய்து, அது இரண்டே வருடங்களில் தனியாக கம்பணியை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்தது. புதுக் கம்பனியை திறந்த நாளில், அவர் ரொம்ப சந்தோஷமாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று கடவுளை மனதார வழிபட்டார்.

வெளியே வந்து பிரகாரத்தில் உட்கார வந்தார்,

அப்போது, அங்கு வந்துக் கொண்டிருந்த தேவதை போன்ற, அந்த பெண் பேசிக்கொண்டே வரும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் “அம்மா இங்கு கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு போகலாமே? ரொம்ப நன்றாக இருக்கிறது இந்த இடம்”

“சரி, வா உட்காரலாம்,”

“எனக்கு, எப்போ வந்தாலும் இங்கு உட்கார ரொம்ப பிடிக்கும்” என்று ஜானகியம்மாள் சொன்னார்.

அப்போது அனு “ அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவியாம்மா?”

" ஆமாம், முன்பெல்லாம் அடிக்கடி இங்கு வருவேன், எப்போவுமே எனக்கு இந்த கோவில் ரொம்ப பிடிக்கும், இங்கு வந்தால் மனதிற்கு நிம்மதியும், புது உற்சாகமுமாக இருக்கும், வாழ்கையில் ஒன்றுமே வேண்டாம்இங்கேயே இருந்துவிடலாம்  போல் இருக்கும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.